Sunday, 25 October 2015

இந்து வேதங்கள் முகமதுவை ஏற்க்கின்றனவா?

 இந்து வேதங்கள் முகமதுவை ஏற்க்கின்றனவா?

டாக்டர் ஜாகிர் நாயக்கின் ஆவேசமான "வேதங்களில் முகமது" என்ற பேச்சை கேட்கும் போது, நாம் "உண்மையில் வேதங்களில் முகமது  சொல்லபட்டிருகிறதா?" என்று ஆச்சர்யமடைந்தேன்.  இந்துக்களுக்கு உரிய புனிதமான  4 வேதங்களும், உபநிடதங்களும் முகமத் நபியை இறுதி தூதர், இறைவனிடமிருந்து வரும் மனிதகுலத்திற்கான கடைசி தூதர் என்று பறை சாற்றுகின்றன என்று டாக்டர் ஜாகிர் அடித்து சொல்கிறார். அப்படியா என்று யோசித்தேன். 


அப்புறம் ஏன் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வேதங்களை எழுதிய, எடுத்துக்கூறிய  ஞானிகள் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை? அவர்கள் அறியவில்லையா? அல்லது எல்லாம் வல்ல அல்லாவின் ஏற்பாடுகளினால் தன் பெரும் பக்தனான  டாக்டர் ஜாகிர் நாயக் மூலம் அறியாமையில் காணப்படும் இந்துகளுக்கு இதை வெளிப்படுத்த விளைந்த திட்டமா இது? என்று நிறைய கேள்விகள் என்மனதில் எழுந்தன. அவர் பிரசங்கத்தை உண்ணிப்போடு பார்த்த போது, அதில் விடை கிடைத்தது.   

உடனடியாக நான் வேத நூல்களை திறந்து, டாக்டர் ஜாகிர்  கூறிய அனைத்தையும் சரி பார்த்தேன்.  டாக்டர் ஜாகிர் கூறியது மாதிரி இல்லாமல் வேறு விதமாக வேதங்கள் இருந்ததை கண்டு மகிழ்ச்சியுற்றேன்.

வேதங்களில் காணப்பட்ட  "Aham iti (அஹம் இட்டி)"  என்ற சொல்லை  "அஹமது (Ahamed) என்று மொழி பெயர்த்து விட்டார் ஜாகீர் நாயக்.
உதாரணம்: "AHAM ITI" PANTHA ADHO DIVO YEBHIRVYASHVARMAARAYAH UTA SHROSHANTU NO BHUVAH
[SAAMVEDA MANTRA 172 (2/6/8)] 

வேதங்களில் அல்லாஹ் என்ற சொல் காணப்படுகின்றது என்று சொல்லும் இவர்கள், அதே வேதங்களில் முகமதுதான் இறைவனின் இறுதி தூதர் என்றும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வருவார் என்று கூறப்படவில்லையே...  அப்படி ஞான சக்தியின் மூலம் அறிந்து கொள்ள முடியாத ரிஷிகளுக்கு இந்துவேதங்களை வைத்துக்கொண்டு ஜாகீர் நாயக் எப்படி அறிந்து கொண்டார்....???

இசை அமைப்புக்கு பெயர் பெற்றது சாமவேதம். அதில் காணப்பட்ட மந்திரங்களின் வகுக்கப்பட உச்சரிப்புகளை கண்டிப்பாக விதி மீறகூடாது.  சமஸ்கிருத சொல்லான வேதங்களுக்கு ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்களை கொடுக்கும், அதனை உரிய உச்சரிப்போடு ஆன்மீகவாதிகளிடமோ அல்லது வேதம் கற்ற பண்டிதர்களின் மூலம் தான் கற்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது (ஸ்வதேஸ்வதரா உபநிஷத் 6.23)
உதாரணத்திற்கு வேத மந்திரங்களின் மூன்றாவது திரட்டு  சாமவேதம். ஒரு பாசுரத்திற்கு எப்படி முறையாக  இசை அமைப்பது என்பதையும் கூறுகின்றது. 

வேதத்தில் உச்சரிப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதால்.  "aham iti - அஹம் இட்டி"  என்ற சொல்லுக்கு  கடவுள் என்று பொருள் (மொழிபெயர்ப்பு) கொண்டு இருக்குமாயின் அதை  "Ahmed - அஹ்மத்" என்று பொருள் (மொழிபெயர்ப்பு) சொல்லி இருக்க மாட்டார்.

டாக்டர் ஜாகிர் நாய்க் சொல்வது போல் வேதங்கள் முகமதுவை குறிக்கின்றது என்று வைத்துக்கொண்டாலும், வேதங்கள் முழுதும் "aham iti (அஹம் இட்டி) " என்ற சொற்சொடர்கள் நிறைந்து இருக்கிறது ஆகையால் வேதங்கள் தவறான வழியை காட்டுகின்றன அவை ஆபத்தானவை என்று இந்துக்களாகிய நாம் நம்ப வேண்டும். வேதங்களும் அக்கால மேன்மையான ரிஷிகளும் ஆன்மீகத்தில் அறிவற்றவர்கள் என்று நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். 

இதனை ஒத்துக்கொள்ளாவிட்டால் இவர் வேண்டுமென்றே  வாசகங்களை தமக்கு ஏற்ப சிதைக்கிறார்  என்று அறிவுபூர்வமாக தீர்வு செய்ய  வேண்டும்.