காதல் என்னும் பதத்திற்கு அன்பு, பற்று, பாசம், நேசம், நட்பு, காம இச்சை, பக்தி, வேட்கை, ஆவல், பற்றார்வம், காதலணங்கு, அன்புச்செய்தி, காதல் நினைவூட்டு, காதல் தொடர்பு, காதலாட்டம், காதல் தெய்வம், மதவேள், அன்புகொள், பாசங்கொள், நேயமுறு, காதல்கொள், காதலி, விரும்பு, அன்புடன் பேணு, பெற்றுமகிழ், நுகர்ந்து மகிழ், ஈடுபாடுகொள், நாட்டங்கொள், சார்புகொள், விரும்பிப்பயில் போன்ற கருத்துகள் அகராதியில் நீண்டு அமைவதுபோல் காதலும் இன்ப ஒழுக்கத்தின் இயல்பை உணர்த்தி நின்று மக்களை வழிப்படுத்துகின்றது. பெண்ணானவள் 12 ஆவது, 13 ஆவது அகவைகளிலும், ஆணானவன் 14 ஆவது, 15 ஆவது அகவைகளிலும் பருவமடையும் பொழுது உடம்பில் ஏற்படும் ஓர் இயற்கை உந்தலால் தூண்டப்பட்டு, உடல் இச்சை கொண்டு, இன்பமடைய விரும்பி, காதல் வயப்பட்டு, பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் விரும்பிக் காதலிப்பர்.