Thursday, 19 February 2015

இஸ்லாம் பெண்களை கண்ணிய படுத்துவது மட்டுமில்லாமல்

ஒரு பதிவில் நடந்து வந்த பின்னூட்ட விவாதங்களில் ஒரு கேள்விக்கு நான் இருமுறை  கேட்ட மறு கேள்விகளும், அதை மீண்டும் இருமுறை நினைவுபடுத்தியும் அவைகள் பதிவிடப்படாததால், அவைகளை ஒரு நினைவுறுத்துதலுக்காக இங்கே ஒரு பதிவாக இட எண்ணியுள்ளேன். பதிவருக்கு அதில் ஏதும் மறுப்பிருக்காதென்றே நினைக்கிறேன்.



//இஸ்லாம் பெண்களை கண்ணிய படுத்துவது மட்டுமில்லாமல் ஒரு படி
மேலே போய்

அவர்களுக்கு நிறைய சலுகைகளை கொடுத்திருக்கிறது.
இஸ்லாமைப்போல் வேறு எந்த மார்க்கம் இதுபோல பெண்களுக்கு சலுகையளித்திருக்கிறது உங்களால் கூற முடியுமா?//

இந்தப் பதிலுக்கு கீழேயுள்ள இரு காணொளிகளும் சரியான பதிலளிக்கும் என்றே நினைக்கிறேன்.

இஸ்லாத்தில் பெண்களின் நிலை

சகோதரர் அருண், 
//இப்பதிவு எவ்வகையில் கடவுளின் விளம்பரம் என தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்//

தொலை காட்சி சேனல்களில் பார்த்திருப்பீர்களே. உலக மஹா மருத்துவர்கள், தங்கள் பக்கத்தில் ஒருவரை உட்கார வைத்துக்கொண்டு தங்கள் திறமைகளை பக்கம் பக்கமாக கூறுவார்கள். இவருக்கு வருடக்கணக்கில் கை கால்களில் குடைச்சல் இருந்தது, என்னுடைய ஒரு வேளை மருந்தில் எல்லாம் சரியாகி விட்டது. என்னுடைய மருந்து தான் உலகத்திலேயே சிறந்தது என்கிற அளவுக்கு அளந்து கட்டுவார்கள். பக்கத்தில் இருப்பவரும் நன்றாக ஜால்ரா போடுவார். அது போன்று தான் இதுவும். பார்த்தீர்களா இவர்கள் எல்லாம் இஸ்லாத்திற்கு மாறி கொண்டு இறக்கிறார்கள். நீங்கள் எப்போது மாறப்போகிறீர்கள் என்பது மாதிரி. திடீர் திடீர் என்று ஒரு செய்தியை

A WORLD WITHOUT ISLAM


கிரகாம் இ. ஃபுல்லர். அமெரிக்க சி.ஐ.ஏ.வின் மேற்பார்வை பொறுப்பில் அமெரிக்க உளவுத்துறை கவுன்சிலின் முன்னாள் துணைத் தலைவர் (former Vice Chairman of the National Intelligence Council at the CIA). பணி நிமித்தம் இஸ்லாமிய நாடுகளில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். அமெரிக்க அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், திடீரென ஞானம் பெற்று அமெரிக்காவிற்கு எதிராக‌ எழுதும், தற்காலிகப் புரட்சிகரமான புத்தகங்களை நான் படிப்பதில்லை. இத்தளத்தில் எனது முந்தைய புத்தகமான‌, சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும் தான், இப்புத்தகத்தை

நாட்டுப்புற வழிபாடு - ஓர் அறிமுகம்


Folk Worship - Intro - Tamil Poltics News Article
தமிழகத்தில் பல்வேறு சமயங்களும், சாதிகளும் உள்ளன. அத்தகைய சமயத்தினரும், சாதியினரும் பல தெய்வங்களை வணங்கி வருகின்றனர். அவை உருவங்களாகவும், அருவங்களாகவும் வைத்து காலங்காலமாக வழிபடப்படுகிறது. அறிவியல் வளர்ந்துள்ள இக்காலத்தில் பலவகையான கண்டுபிடிப்புகள் மனித மனதை பிரமிக்க வைக்கின்றன. சூரியன், சந்திரன், பூமி

Wednesday, 18 February 2015

நான் ஏன் மதம் மாறினேன்…?..7


இஸ்லாம்:
யூத மதத்திற்கு – பழைய ஏற்பாடும், டோராவும் (Torah); அதன் பின் வந்த கிறித்துவத்திற்கு பழைய ஏற்பாடும், பைபிளும்; அதன் பின் வந்த இஸ்லாமிற்கு பழைய ஏற்பாடும், குரானும். இந்த மூன்று மதங்களும் ஆபிரகாமிய மதங்கள் என்றோ, semitic religions என்றோ அழைக்கப்படுகின்றன. யூத மதம் மோசஸ் காலம் வரை பழைய

நான் ஏன் மதம் மாறினேன்…?..6

இனி நான் சாராத மற்ற சில சமயங்களைப் பற்றி நானறிந்த வரை ஓர் அலசல்: இந்து மதம்:

‘இது ஒரு மதமல்ல; ஒரு வாழ்க்கை நெறி’ – எல்லோரும் சொல்லும் இதற்கு என்ன பொருள் என்று எனக்குப் புரிந்ததில்லை. இந்த மதம் ஒரு ‘அவியல்’ என்று சொல்லலாம்; ஏனெனில், இங்கு, ‘சக்தி’/ ஒளி (energy) வழிபாடு என்று இயற்கையை ஒட்டிய கருத்தும் உண்டு; முப்பது முக்கோடி தெய்வமும் உண்டு. எல்லா உயிரும் ஒன்றே என்ற கொள்கை ஒரு பக்கம்; ஆடு, கோழி பலி என்பது அதன் மறு பக்கம். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்ற கருத்து ஒரு பக்கம்; கடவுள்

நான் ஏன் மதம் மாறினேன்…? – 5

இந்து மதம் – ஒரு பதில்.
இந்த சீரியல் பதிவுகள் போட்டபின் பல மாதங்கள் கழித்து இந்து மதத்தை ஏன் ‘ஆட்டைக்குச் சேர்த்துக் கொள்ளவில்லை’ என்ற ‘குற்றச்சாட்டு’டன்  இப்போது ஒரு பின்னூட்டம் வந்துள்ளது. அப்பின்னூட்டம் நீளமானதாகவும், என் பதில் அதனிலும் வெகு நீளமாகவும் ஆனதால் இதை ஒரு ‘பின்னூட்டப் பதிவாக’ இங்கு பதிவிடுகிறேன். தொடரின் எண்களை அதற்காக வேறு விதமாய் வரிசைப்படுத்தியுள்ளேன்.

பின்னூட்டம்:

நான் ஏன் மதம் மாறினேன்…? .. 4

முந்திய பதிவுக்குரிய பின்னூட்டங்களை முடித்துக் கொள்ளலாமென நினக்கிறேன். அதோடு, இத்தலைப்பில் இனி எழுதப்பபோகும் பதிவுகளில் தற்காலிகமாகவேனும் பின்னூட்டங்களைத் தடை செய்ய நினைத்துள்ளேன். காரணங்கள்: நான் ஏற்கெனவே கேட்டிருந்தபடி என் பதிவுகளில் வரும் கருத்துக்களை மட்டும் வைத்துப் பின்னூட்டங்கள் வந்தால் அதைப் பற்றி விவாதிக்க எளிதாயிருக்குமென நினைத்தேன். ஆனாலும், வரும் பின்னூட்டங்கள் அந்த LOC-யைக் கடைப்பிடிக்க முடிவதில்லை. அது இயல்பும் கூட. அதோடு, நான் சொல்லவரும் விதயங்களுக்கு முன்பே அதைப்பற்றிய

நான் ஏன் மதம் மாறினேன்…? 3

சில வேண்டுகோள்கள்:
என் வயது தெரிந்துவிட்டதால் என் வயதுக்கு மட்டுமாவது மரியாதையைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை உங்கள் எல்லோருக்கும் கொடுத்துவிட்டேன் போலும். வலைஞர்களுக்குள் வயதென்ன வயது? என் அப்பா சொல்வதுபோல் கழுதைக்குக் கூடத்தான் வயதாகிறது! ஆனாலும், உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம்தான்; அதற்குத்தானே புனைப்பெயர் வைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே இந்த சார், அய்யா எல்லாம் இல்லாமல் ‘தருமி’ என்றுமட்டும் எல்லோரும் என்னை அழைத்தால் நானும் கொஞ்சம் ‘நார்மலாக’ இருக்கமுடியும். So, it is a deal, okay!இந்தத் தலைப்பில் நான் எழுதும் கட்டுரையை ஒரு தொடராக 4 – 5 பகுதிகளாக எழுதுவதாக ஒரு

நான் ஏன் மதம் மாறினேன்…? – 2

இரண்டு விஷயங்கள்:
ஒன்று – இந்தப் பதிப்பில் வேறு வழியில்லாததால் சில பல கிறித்துவத்திற்கே உரித்தான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. கொஞ்சம் நெருடலாக இருக்கலாம். அந்தச் சொற்கள்: விவிலியம் ( பைபிள்), யேசு, ஜெபம் (prayer), பூசை (Holy Mass), பாவம், நரகம், மோட்சம், விசுவாசம் (faith), தேவதூஷணம் (blasphemy) சாத்தான் (satan). . .இரண்டு – நிறைய விஷயங்களில் கீழே வரும் பகுதி கிறித்துவத்திற்கும், இஸ்லாமுக்கும் பொருந்தியே வரும்.எண்பதுகளின் கடைசிகளில் என்றுதான் நினைக்கிறேன். ஒரு புத்தாண்டு தினம்; இரவுப் பூசை. மதுரை தூய மரியன்னை ஆலயம்.

நான் ஏன் மதம் மாறினேன்…? – 1


மதங்களை, அவைகள் சொல்லும் கடவுள் கோட்பாடுகளைக் கண்ணை மூடிக் கொண்டால் மட்டுமே நம்பமுடியும்; கண்ணையும், காதையும் கொஞ்சம் திறந்தாலோ, நம் மதங்களாலும், பெற்றோர்களாலும், பிறந்தது முதல் நமக்குக் கற்பிக்கப்பட்ட, ஊட்டப்பட்ட விஷயங்களிலிருந்து கொஞ்சம் விலகி நின்று – with an OBJECTIVE VIEWING – பார்த்தால் (அப்படிப் பார்ப்பது மிக மிகக் கடினம் என்பது நிஜம்; என் மதம்; என் கடவுள் என்ற நிலைப்பாட்டை அறுத்து ‘அவைகளை’ யான், எனது என்ற பற்றற்றுப் பார்ப்பது அநேகமாக முடியாத காரியம்தான்). அப்படிப் பார்ப்பது எளிதாக இருந்திருந்தால் எவ்வளவு

ஏன் தமிழ்? யார் தமிழர்?

தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி.

பதிவு20:பொங்கல் கொண்டாட்டம்- தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி. 
ன்புள்ள தமிழ் வலைப்பதிவு நண்பர்களே,
நாம் சாதி,மத,சமய மற்றும் இன்னபிற கொள்கைகளில் மாறுபட்டு இருந்தாலும் தமிழ், தமிழர் என்பதில் ஒரே புள்ளியில் வந்து நிற்கிறோம். சாதி,மத,சமய மற்றும் பல கருத்து வேறுபாடுகள் மனித சமுதாயம் உள்ள வரை இருக்கப்போவது நிச்சயம். இந்த வேறுபாடுகள் முற்றும் அழிந்தால் நாம் அனைவரும் நிச்சயம் சந்தோசப்படுவோம். அதில் சந்தேகமே இல்லை.
நமக்குள் கருத்து வேறுபாடு கொண்ட இந்த விசயங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, நாம் அனைவரும் இணைந்து நிற்கும் இந்த தமிழ், தமிழர் என்ற புள்ளியில் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.

பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் !!

 ஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது மட்டுமல்ல; பல இஸ்லாமிய மன்னர்களும் உலேமாக்களும் இச்சாதிய பாரபட்சத்தை நியாயப்படுத்தி கட்டிக் காத்து வந்துள்ளனர். இந்த உண்மையையும், மனுவாத அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறு இந்தியாவில் உருத்திரிக்கப்பட்டுள்ளது என்பதையும் வரலாற்றுப் பின்னணியுடன் வெளிக்கொணர்கிறார், இஸ்லாமிய இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி.

Tuesday, 17 February 2015

செத்தும் கொடுத்த சீதக்காதி


வடக்கிந்தியாவில் இஸ்லாம் பரவியதற்கும் தமிழ்நாட்டில் இஸ்லாம் வேர் பிடித்ததற்கும் பெருத்த வேறுபாடுகள் உண்டு. தமிழகத்தோடு அரபு வணிகர்கள் தொன்றுதொட்டு வாணிபம் செய்துவந்திருக்கிறார்கள். ஏழாம் நூற்றாண்டில் அரபு மண்ணில் இஸ்லாம் தோன்றிவிட்டதையொட்டி இஸ்லாமியர்களாகிவிட்ட அரபு வணிகர்கள் காலப்போக்கில் தமிழகத்தில் குடியேறி வாழத் தொடங்கிவிட்டனர்.
வடக்கிந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி பல நூறு வருடங்கள் நடைபெற்றதைப் போல, தமிழகத்தில் முஸ்லிம்களின் ஆட்சி இருக்கவில்லை. மதுரை சுல்தான்களின் ஆட்சி 1333-1378 வரை இடைப்பட்ட

இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

ரியாதைக்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே,
வணக்கம்.
சனாதன தர்மம் ஓரளவு எஞ்சி இருக்கும் இந்திய நாட்டில் இந்துக்களோடு நீங்கள் உறவாடுகிறீர்கள்.
அன்போடும் பாசத்தோடும் நம் உறவு பெரும்பாலும் இருக்கிறது. இந்தச் சூழலில் இந்து மதம் குறித்த கேள்விகள் உங்களுக்கு ஏற்படுகின்றன. முக்கியமாக, படைப்பும், படைப்பவளும் ஒன்றா வேறா என்பது போன்ற கேள்விகள்.
அவற்றுக்குப் பதில்கள் தர வேண்டிய கடமை, இந்துக்களுக்கு இருக்கிறது. எனவேதான், என் புரிதலின் அடிப்படையில் அமைந்த இந்தக் கடிதம்…

Sunday, 15 February 2015

சமய நல்லிணக்கம் பேண ஏற்ற வழிகள் மேற்கொள்ள வேண்டும்

உலகிலேயே மதவிவகாரங்களை அதாவது மதங்களுக்கிடையேயான பிரச்சினைகளை,   தகராறுகளை ஆய்வு செய்து தீர்வு காண்பதற்காக தனிக்காவற்படை அமையப்பெற்ற நாடு என்ற பெருமை நமது தாய்த்திரு நாடு பெறுகின்றது.
இதில் பெருமைப்படுவதற்கு எதுவுமில்லை. இவ்வாறு மதங்களுக்கிடையேயான பிரச்சினைகளைக் கண்காணித்து,  ஆய்வு செய்து தீர்வு காண வழி செய்வதற்காக ஒரு காவற்படை அமைக்கப்படுகின்றது எனும் போது அது பல் மத கலாசாரம் கொண்ட நாடு என்று இதுவரை இருந்துவந்த பெருமைக்கு ,  கூற்றுக்குப் பெரும் பின்னடைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது எதிர்காலத்தில் மதங்களுக்கிடையேயான பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்புக்கூற தனி நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும், நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று சிந்திக்குமளவிற்கு நிலைமை விரிவடையவும் மாற்றமடையவும் இடமுண்டு.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? :

கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொன்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.


அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? : திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ்

நாமாக உணர்ந்து திருந்தாவிட்டால்..

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல  நாமாக  பார்த்து திருந்தாவிட்டால் போலி ஆசாமிகளை ஒருபோதும் இந்த சமூகத்தில் இருந்து துரத்த முடியாது.சாக்கடை என்று தெரியாமல் அதனுள் விழும் சில அப்பாவிகள், சாக்கடையோ என்ற சந்தேகம் இருந்தும் "ஒரு தடவை விழுந்து பார்ப்போம் ஏதாவது கிடைக்குதா" என்று  நப்பாசையில் விழும் ஒரு கூட்டம்.அது சாக்கடை தான் என்று தெரிந்த பின்னும் போய் விழும் இன்னும் ஒரு கூட்டம் இவர்களை என்னென்று தான் சொல்வது.இன்று அனைவராலும் பேசப்பட்டு ஒரு விடயம் தான் இந்த போலி ஆசாமிகள்.

என்னிடம் வா நான் உன் வாழ்க்கையை சிறப்பிக்கிறேன் என்று நப்பாசை காட்டி ,போட்டி போட்டு அப்பாவி ஜனங்களை தன் பக்கம் இழுக்கும் ஆசாமிகள். இதில் கையும் களவுமாக பிடிபட்டவர்