Saturday, 14 February 2015

கற்பனையில் ஒரு காதல்!

ஒரே தெரு என்பதால்
அவ்வப்போது சந்திக்கும் எம் விழிகள்..,
பதிலுக்கு புன்னகைத்து செல்வாள்..
கால மாற்றத்தில்
இது காதலானது என்னுள்!

தினமும்
அவள் பாதம் சுமந்து
தாங்கி நிற்கும் தெருவை
விழிகளாலே உள்வாங்கியிருப்பேன்..

சாய்பாபா மீண்டும் அவதரிப்பார் !

இறந்தவர்களை பற்றி கீழ்த்தரமாக விமர்சிப்பதென்பது  மனிதாபிமான ரீதியிலும் நம் மரபுகளின் ரீதியிலும் சரியான செயல் அல்ல. அது போல ஒருவரின் இறப்பிலே சந்தோசப்படுபவனும் மனிதன்  அல்ல. என்னை பொறுத்தவரை சாய் பாபா என்பவர் இந்த பூமியில் பிறந்து இயற்கையின்  நியதியால் இறந்து போன கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவரே.

நான் ஒன்றும் நாஸ்தீகன் அல்ல. உங்களுக்கு தெரியும் கிராம புறங்களிலே உள்ள மக்கள் ஒப்பீட்டளவில் கடவுள் நம்பிக்கை கூடியவர்கள். அதே கிராமப்புறம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன்  நான். இது வரை நான் வாழ்ந்த சூழலிலே ஒரு நாஷ்தீகர்களை கூட கண்டதில்லை.

காலில் விழுவதும் கட்டிப்பிடிப்பதும் - கலாச்சாரம்.. !

எனக்கு நீண்ட நாளாகவே ஒரு சந்தேகம். மனித உடலிலே ஏனைய பாகங்களை போலவே கால் என்பதும்  ஒரு உறுப்பு.  அப்பிடி இருக்க காலில் விழுவதென்பது எதை குறிக்கும்!!!  அடிமை தனமா!! 

ஆசி பெறுவதற்காக காலில் விழுவார்கள்! என்று  தான் நான் அறிந்திருக்கிறேன், பொதுவான கருத்தும் கூட.  ஆனால் அதுவே இன்று ஆதிக்க சக்திகளின் அடையாள சின்னமாக மாறிவிட்டது.  ஒருவருக்கு தமது அதி தீவிர விசுவாசத்தை காட்டுவதற்காய்  அவரின் காலில் விழும் கலாச்சாரம் நம்மவர்களில் உண்டு. இதுவும் ஒரு சுயநலம் தான். அனேகமாக இந்த பழக்கம் தமிழர்களிடம் தான் அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

மங்காத்தாவும், அபிசேக ஆராதனைகளும்.

ஈழ பிரச்சனையாக இருந்தாலும் சரி, தென்னிந்திய சினிமாவாக இருந்தாலும் சரி இல்லை இன்ன பிற  விடயங்களாக இருந்தாலும் சரி, மொழியால் மட்டுமல்ல உணர்வுகளாலும் கூட  ஈழ தமிழர்களும், தமிழக தமிழர்களும்  ஒன்றுபட்டவர்கள் தான் என்பதை என்றைக்கும் அவர் தம்  செயற்ப்பாடுகள்  மூலம் உணர்த்தி  நிற்ப்பார்கள். 

அந்த வகையில் சமீபத்தில் மங்காத்தா  திரைப்படம் ஈழத்திலே  உள்ள திரையரங்கில் ரிலீசான போது அஜித்தின் ரசிகர்கள் தமிழகத்தை போல பெருவாரியாக கொண்டாடினார்கள்.

கல்யாணமும் கலாச்சாரமும்... !

என்ன தான் கால ஓட்டம்  வேகமாக சுழன்றாலும், நம் வாழும் சூழலிலே நவீனத்துவம் புகுத்தப்பட்டாலும், அநேக  தருணங்களில் சம்பிரதாயம் பழக்கவழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுபவர்களாகவே  காணப்படுகிறோம். ஒரு விதத்தில் அவையெல்லாம் நம் மரபோடு ஒன்றித்துவிட்டது எனலாம்.

 சில சமயங்களிலே நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்களை  எண்ணும்  போது வியப்பாகவும்  வேடிக்கையாகவும்  இருக்கும்,  இன்னும் சில வேளைகளில்  "என்னடா இந்த மூட நம்பிக்கைகளையெல்லாம் பின்பற்றியிருக்கிறார்களே!  " என்பது போல எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும்.  ஆனால், நாம் பல சமயங்களில்  நம்

ஜி ரிவியும் ,சிறீதரனும் என் கேள்வியும்..!

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் பெரும்பாலான நாடுகளில் அனைத்து தமிழர்களாலும் அறியப்பட்ட தொலைக்காட்சி தான் இந்த ஜி ரிவி. அரபு நாடுகளிலும் இது தன் தேவையை தொடருகிறது என்று நினைக்கிறேன். 

பல தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகள் இருந்தும், கட்டணம் அறவிடாது (நன்கொடைகள் தவிர) சேவையை தொடரும் தொலைக்காட்சியும் இது ஒன்று என்று தான் நினைக்கிறேன். அதே போல தென்னிந்திய கலை, களியாட்ட நிகழ்வுகளை அதிகளவில் ஒளிபரப்புவதில்லை. மாறாக புலம்பெயர் தமிழ் சமூகத்தில்- இளையோர்களிடையே தமிழை ஊக்குவிப்பதில் பாலமாக செயற்பட்டு வருகிறது. அத்துடன்  ஈழம் சம்மந்தப்பட்ட அரசியல் நிகழ்வுகளை தொகுத்து

தமிழேண்டா ..!

பொதுவாகவே மனிதர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை "எல்லாம்  இந்த ஒரு சான் வயிற்றுக்கு தானே..!" என்று ஒற்றை வரியில் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இந்த வரியை சரியாக, காலாகாலமாக கடைப்பிடித்து வருகிற பெருமை தமிழனுக்கு மட்டும் தான் உண்டு.  எப்பூடி .... 

*உலகிலே ஒப்பீட்டளவில் தமது  அன்றாட உணவை தயார் செய்வதற்காக அதிகளவு நேரத்தை செலவழிப்பவர்கள் தமிழர்களாக தான் இருப்பார்கள். இந்த விஷயத்தில் யாராலும் தமிழர்களை அடிச்சுக்க முடியாது. தினமும் மூன்று நேரம் அவியல், பொரியல் ,வறுவல்..  இதனால் தானோ என்னமோ

மதம் என்னும் போதை உண்பவர்கள்..!

ஒன்றை வெறித்தனமாக நேசிப்பதும் ஒரு போதை தான். அதன் பின்னர் யாராவது அந்த ஒன்றின் மீது விமர்சனங்களை முன்வைத்தால் மனம் ஏற்க மறுக்கும். விமர்சனங்களை ஏற்க தைரியம் இல்லாது, விமர்சிப்பவன் மீது வெறி தனமாக பாய்வான். ஆம்! மதம் என்பதும் ஒரு போதை தான். அது அளவுக்கு அதிகமாகும் போது மனிதன் தன்னிலை இழந்துவிடுகிறான். சாதாரண ஐந்தறிவு ஜீவனின் நிலைக்குள் சென்றுவிடுகிறான்.

ஒரு வெறி கொண்ட நாயோ அல்லது ஒரு மதம் கொண்ட யானைக்கோ தன் கண்ணுக்கு தெரிவதெல்லாம் எவ்வாறு துச்சமாக தோணுமோ, அதே போல தான் மனிதனுக்கு மதம் பிடிக்கும் போதும்.

சுவனப்பிரியன் என்னும் ஒரு சகாப்தம்!

என்னடா சுவனப்பிரியனிடனம் இவன் துட்டு கிட்டு வாங்கிட்டு எழுதிறானோ என்று நினைத்தீர்கள் என்றால் அது உங்கள் மடமை! ஆனாலும் எனக்கு சுவனப்பிரியனை பற்றி எழுத தோன்றுகிறது; இது ஒருவித நன்றி உணர்ச்சியாக கூட இருக்கலாம்! நான் சுவனப்பிரியனால் அடைந்த நன்மைகள் அதிகம்.. நான் என்று சொல்வதை விட பலர்.. என்று சொல்வதே பொருந்தும்!

நான் கடந்த சில மாதங்களாக சுவனப்பிரியனின் பதிவுகளை படித்த பின், அப்படி என்ன தான் இருக்கிறது இந்து மதத்தில்? என்ற ஆர்வம் சாதாரணமாக தொடக்கி தீவிரமாக பற்றிக்கொண்டது. அதில் ஒரு கட்டமாக கண்ணதாசன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை இரண்டு தடவைகள்

பல(சில)தார திருமணம் - விபச்சாரம்...வேற்றுமை?

மனைவி உயிருடன் இருக்கத்தக்கதாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்பவனுக்கும், அதே கட்டிய மனைவி உயிருடன் இருக்கத்தக்கதாக இன்னொரு பெண்ணை(விலைமாதுவை) நாடி செல்பவனுக்கும் ஊன்றுகோல் காரணியாக இருப்பது காமவெறி தவிர வேறு என்ன? ஆகவே பலதாரம் செய்து கொள்பவனுக்கும் விலைமாது பால் செல்பவனுக்கும் என்ன தான் வித்தியாசம் உள்ளது??

ஆனால் விபச்சாரத்தை இஸ்லாம் எதிர்க்கிறதாம், மாறாக பலதாரதிருமணத்தை ஆதரிக்கிறதாம்.. பச்சையாக சொன்னால் "உன் உடல்வெறியை தீர்க்க பெண்ணின் பின்வீட்டு வாசல் வழியாக செல்லாதே, முன்வாசல் வழியாக செல்" என்பது தான் சில இஸ்லாமிய மதவெறி

சுவனப்பிரியனுக்கும் எமக்கும் என்ன உறவு?

யார் இந்த சுவனப்பிரியன்?? என்பதை அறியாதவர்கள் இப்பதிவை படிக்க முன்னர் கீழ் காணும் தலைப்பில் உள்ள பதிவை சொடுக்கவும்!

சுவனப்பிரியன் என்னும் ஒரு சகாப்தம்!

மீண்டும் சுவனப்பிரியனா? அப்பிடி சுவனப்பிரியன் மீது உனக்கு என்ன தான் ஒரு 'இது'!..... அட அவனா நீயி?? என்று என்னை பார்த்து நீங்கள் சந்தேகப்பட தேவையில்லை! என்னை விடுங்கள்! சுவனப்பிரியனை நீங்கள் அவ்வாறு சந்தேகப்பட முடியாது! காரணம் அன்று தொடக்கம் அவர் ஓரினச்சேர்க்கையை கோபமாக எதிர்த்து வருகிறார்!

மதத்தால் "மதம்" கொள்ளும் மனிதர்கள்.

எத்தனையோ கிளைகளாக  பிரிந்து  பாய்ந்தாலும் இறுதியில் கடலிலே ஒன்றாக    கலக்கும் நதிகள்  போல இந்த உலகிலே பல்வேறு  மதங்கள் இருந்தாலும் அத்தனையும் நல்லதையே சொல்கிறன. தீயதை சொல்வதென்றால் மதங்கள் எதற்கு. ஆனால் மனிதன் தன் சுயநலன்களையும்,மனதில் தோன்றும்  மூட நம்பிக்கைகளையும் அதிலே புகுத்தி தன் தலைக்கு ஏற்ப  தொப்பியை மாற்றிக்கொள்வது  போல  தன்  மனதில் தோன்றும் சுய நலம், வக்கிரம்,சந்தர்ப்பவாதம்  போன்ற  இயல்புகளுக்கு ஏற்ப மதங்களையும் மாற்றி அதனுள்ளே மூட நம்பிக்கைகளை புகுத்தி அதை எல்லோரையும் ஏற்க வைக்க எண்ணுகிறான். சில சமயங்களில் மனித குலத்துக்கு மிக விரோதமான செயல்களையும் மதம் என்ற போர்வை போர்த்தி தான் வணங்கும் கடவுள்களை சாட்சியாக வைத்து

எப்பூடி எல்லாம் ஏமாத்துறாங்க ..!

இந்த புராணங்கள், இதிகாசங்கள் என்பன  படிக்கும் போதும், அறிந்துகொள்ள முற்படும் போதும் மிக சுவாரசியமாக தான்  இருக்கும். ஆனால் பெரும்பாலானவை  பற்றி நடைமுறையுடன் ஒப்பிட்டு சிந்திக்கவோ இல்லை  ஆராய முற்ப்பட்டால், உண்மை தன்மை என்பது  பிம்பங்களாய் உடைந்து போய்விடும். அப்படி ஒன்று என் நினைவுகளில்....

அநேகரை  போல்  தான்,   எனக்கும் சின்ன வயசில  பக்தி,  புராண படங்கள் பார்க்கிறதென்றால்,  புராண கதைகள் வாசிக்கிறதென்றால் அவ்வளவு  பிரியம்.. யாழிலே  இடப்பெயர்வு  முடிந்து , சண்டைகளுக்கு  பின் சமாதான  ஒப்பந்தம் வந்ததோட  மின்சாரம் வந்துவிட்டது,  கூடவே  தொலைக்காட்சிகள்  பார்க்கும் வசதியும்  வந்துவிட்டது.