Friday, 16 October 2015

பசுவின் கோமியமும் ஒட்டக மூத்திரமும் பற்றிய அறிவியல் பார்வை



இந்துக்கள் மாற்றுமதத்தினருடன் விவாதம் செய்யும் போது நமக்கு தெரியாத விடையங்களை அவர்கள் சுட்டி காட்டுவார்கள். அவை எவ்வளவு தூரம் பொய்யாக இருக்கும் என்பதை நாம் அறிந்து வைத்துயிருக்க மாட்டோம். அந்தவகையில்  பெரும்பாலன மாற்றுமதத்தினர் பயன்படுத்தும் ஒரு படமாக இந்துக்கள் கோமாதாவின் கோமியத்தை குடிக்கும் காட்ச்சி

இந்துக்களும் இஸ்லாமியர்களும் வாழும் நாட்டில் மூட நம்பிக்கையை வளர்த்தது இந்து மதந்தான் என்று முகமதியர்கள் சாடுகின்றனர். இஸ்லாம் பகுத்தறிவு சமயமென்றும், எக்காலத்திற்கும் பொருந்தும் சமயமென்று மார்த்தாட்டிக் கொள்கின்றனர் முஸ்லிம்கள். ஆதலால் உலகிலுள்ள எல்லா பாகங்களிலும், மூட நம்பிக்கையை வளர்த்த சமயம் எது என்று ஆராய்வது நம் கடமையாகும். ஆதலால், இஸ்லாத்தையும், சைவத்தையும் ஒப்பிட்டு, எந்த சமயம் மூட நம்பிக்கையை வளர்க்கின்றது என்று சற்று பார்ப்போம்.



முஸ்லிம் மக்கள் குடிக்கும் எதற்க்கும் உதவாத ஒட்டக மூத்திரம்:

முதலில் ஒட்டக மூத்திரத்தை பார்ப்போம்.குரானுக்கு அடுத்து,முஸ்லிம்களின் மிகவும் ஆதாரமான நூலான,சஹீஹ் புக்ஹாரியெனும் ஹதீஸில்,ஒட்டக மூத்திரத்தை பற்றி வருகிறது.

“அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
‘உக்ல்’ குலத்தைச் சேர்ந்த சிலர் நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்யபரை கொலையும் செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். எனவே, (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களுக்குப் பின்னால் நபி(ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவர்கள் பிடித்துவரப்பட்டு, அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி, (மேய்ப்பவரின் கண்களைத் தோண்டி எடுத்த) அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு, அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அந்த நிலையிலேயே சாகும் வரைவிட்டுவிடச் செய்தார்கள்."
(புக்ஹாரி, பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6802)

இப்னு இஷாக் (கிபி 767 அல்லது கிபி 761) எழுதிய ‘சிறத் ரசுல் அல்லாஹ்’, அதாவது அல்லாவின் தூதனான முகமதின் சரித்திரம் எனும் நூலில், மேலுள்ள செய்தி போட்டிருக்கிறது. இந்த சிறத்தில் என்ன போட்டிருக்கிறதென்றால் “காய் பிரிவை சேர்ந்த சிலர் தொற்று நோயாலும் மண்ணீரல் நோயாலும் அவதிப்பட்டு, முகமதை சந்தித்து, தங்களின் நோய்களை குணப்படுத்த மருந்தினை கேட்டார்கள். அதற்கு முகமது, "நீங்கள் போய் ஒட்டக மூத்திரத்தையும் அதன் பாலையும் குடித்தால், குணமாகுவீர்கள்” என்று சொன்னான்.

"ஒட்டக மூத்திரம் என்பது மருந்து. வாருங்கள் வாங்கிக்குடியுங்கள்" முகமது கூறுகிறார்.

சரி,ஒட்டக மூத்திரத்தில்,முகமது கூறியது போல், உண்மையாகவே, மருத்துவ குணமுள்ளதா ? இல்லையென்றே சொல்ல வேண்டும். அறிவியல் ஆராய்ச்சிகளின் வழி, ஒட்டக மூத்திரம் பல கேடுகளைத்தான் விளைவிக்கிறதென்று நிருபிக்கப்பட்டுள்ளது. ஒட்டக மூத்திரம், ஹிப்புரிக் (Hippuric) எனும் காடிப் பொருளைக் (acid) கொண்டது. இந்த காடிப் பொருள், மிகுந்த அளவில் உட்கொள்ளப்பட்டால், ஒருவர் தொலுவின் (toluene) வெறியூட்டலுக்கு ஆளாக்கப்படுவார். நீண்ட நாட்களுக்கு, தொலுவினுடன் தொடர்பிருந்தால், கண்பார்வை சக்தி குறையும், மூளை வியாதி, ஞாபக மறதி, மூளை மற்றும் நரம்பு சம்பந்தப் பட்ட வியாதிகள் உண்டாகும்.

எலிகளுடன் ஒட்டக மூத்திர ஆராய்ச்சி நடத்தப்பட்டதில், அந்த எலிகளின் எலும்புகளுள் இருக்கும் கொழுப்பில், நஞ்சுப் பொருள் நிலைமையை உருவாக்கிவிட்டது, ஒட்டக மூத்திரம். ஒட்டக மூத்திரத்தின் தீவிர நஞ்சு நிலைமை, cyclophosphamide எனும் போதைப் பொருளுக்கு ஒப்பாகும். அதாவது எந்த நன்மையும் இல்லாமல் தீமையை மட்டும் கொடுக்கும் இந்த ஒட்டக மூத்திரத்தை இன்று மருந்தாக முஸ்லிம்கள் கருதுகிறார்கள். உதாரணத்திற்கு உலகிலேயே ஒட்டக மூத்திர ஆராய்ச்சியில் முதலிடத்திலிருக்கும் நாடு முகமது பிறந்த சவுதி அரேபியா. முகமது சொன்னான் என்பதற்காக, ஒட்டக மூத்திரத்தில் மருத்துவ குணம் இருக்கின்றதா என்று ஆரய்ச்சி செய்ய, சவுதி அரேபியாவில், ஒரு தனி பிரிவே இருக்கிறது. எவ்வளவு அறிவியல் நூற்களை பாடித்திருந்தாளும், முனைவர் பட்டம் கூட பேற்றவராயிருந்தாலும், ஒரு முஸ்லிம் அறிவியல் ஆராய்ச்சியாளன், குரானைத்தான் ஆதாரமாகக் கொள்வானே ஒழிய, அறிவியல் அடிப்படைகளையல்ல. குரானிலுள்ள மூட நம்பிக்கைகளை, இன்றைய அறிவியல வளர்ச்சி கண்ட காலத்திலும், சரியென்று நிருபிக்கப் பார்க்கும் இந்த முஸ்லிம் குல்லா பேர்வழிகளை என்னவென்று கூறுவது? அது மட்டுமா, ஒட்டக மூத்திர விற்பனை, ஏமென் போன்ற இஸ்லாமிய நாடுகளில், கொடிகட்டிப் பறக்கிறது. முகமது சொன்னான் என்பதற்காக, ஆராயாமல், பகுத்தறிவை பயன்படுத்தாமல், குருட்டுத் தனமாக நம்புவதும், அதோடு நிற்காமல், அவன் சொன்ன மூட நம்பிக்கைகளை, உலகுக்கு, உண்மையென காட்டுவதற்கு, அதற்காக ஒரு தனி ஆராய்ச்சி பிரிவு வைக்கும் அளவிற்கு இந்த குல்லா மடையர்கள் போய்விட்டர்களென்றால், மூட நம்பிக்கையை ஒரு சமயமாகவே கடைபிடிப்பவர்கள் முஸ்லிம்கள், என்றாலும் அது மிகை ஆகாது.

மேலும் நேரடியாக குடிக்கும் காட்சிக்கு இங்கே செல்லவும்:
http://www.youtube.com/watch?v=kPxzh0QZJtE

ஓட்டக மூத்திரம் குடிப்பதால் அண்மைக்காலமாக பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றனவாம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. குடிப்பதை நிறுத்துமாரு உலக மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். 

அற்கான ஆதாரத்தை படத்தில் பார்க்கலாம் (வீரகேசரி 2015.06.15) ம் திகதி வெளியிடப்பட்ட நாளிதளில் இருந்து.

இந்துக்களின் புனித கோமியம்:
கோமியத்தை உண்ணுமாறு வேதபுத்தகங்களில் காணப்படவில்லை  என்பதை மாற்றுத நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு வேதம் சொல்லாத வாழ்க்கை முறையினை இந்துக்கள் கடைப்பிடிக்கின்றனர். ஆம் அவை சொல்லப்படாவிட்டாலும் கோமியம் மக்களுக்கு நன்மையை தருகின்றது. இவ் வாழ்க்கை முறையினை முன்னோர்கள் மக்களுக்கு போதித்துயிருப்பார்கள் என்று தோன்றுகின்றது

பசுவின் கோமியம் மருத்துவ குணம் உடையது என்பதற்கான ஆதாரம்:
https://www.quora.com/Can-cow-urine-cure-any-disease
http://www.dailymail.co.uk/news/article-2538520/Urine-drinking-Hindu-cult-believes-warm-cup-sunrise-straight-virgin-cow-heals-cancer-followers-queuing-try-it.html
https://www.facebook.com/CowUrineTreatment
https://www.youtube.com/watch?v=mbbvVsjyfNc
http://naturalfarmerskerala.com/gomutra-indian-cows-urine-cure-cancer/
http://www.vedicgiftshop.com/cow-products/cow-urine-therapy-cancer-treatment/


கோமியத்திற்கு, மருத்துவகுணமுண்டாவென்றால், உண்டு. பல அறிவியல் ஆராய்ச்சிகளின் வழி, கோமியத்தின் மருத்துவ குணங்கள் நிருபிக்கப்பட்டுள்ளன. கோமுத்திரத்தில், nitrogen, sulphur, phosphate, sodium, manganase, iron, silicon, chlorine, magnesium, melci, citric, வைட்டமின் A,B,C,D,E போன்ற சத்து வகைகளைக் கொண்டுள்ளது. அமேரிக்க காப்புரிமை அலுவலகம்(USPTO), ‘Pharmaceutical composition containing cow urine distillate and an antibiotic’ என்கிற தலைப்பிலுள்ள அமெரிக்க காப்புரிமை எண்:6410059 என்கிற காப்புரிமையை, ஏஸ்.பி.எஸ்.கனுஜா அவர்களுக்கும், மற்ற இதர 13 பேர்களுக்கும், வழங்கியது.

"கோமுத்திரத்தின் சத்து வகைகள், "கிருமி நாசினியாகவும் புற்று நோய் தடுப்புக்கும்" வழிவகுக்கும் ஒரு அருப்பெரும் கண்டுபிடிப்பாகும். புற்று நோயை தடுப்பதற்கு, போதை மருந்துகள், புற்று நோய் தடுப்பு மருந்துகள், போன்ற மருந்துகளின் பயன்படுத்தலை வெகுவாக குறைத்து, அதே நேரத்தில், சத்துக்களை ஈர்க்கும் விகிதத்தையும் உயர்த்துகிறது." என்று அமெரிக்க காப்புரிமை அலுவலகம் குறிப்பிடுகிறது.

இந்த கோமுத்திரம், பல்லாயிரம் வருஷங்களாக, இந்தியாவில், மருத்துவ நோக்கிற்கு பயன்படுத்தப்பட்டாலும், 1999இல் தான், அறிவியல் ஆராய்ச்சிக்கு, கோமுத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1999இல், ஜோஷி என்பவர், CSIR எனும் இந்திய மருத்துவப் பிரிவிற்கு, கோமுத்திரத்தின் மருத்துவ குணத்தை பற்றி ஆராய பரிந்துரை செய்தார். இந்த ஆராய்ச்சிக்கு, 10 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டு, இந்த கோமுத்திரத்தில் சில குறிப்பிட்ட பொருட்களை, கிரிமிகளை தடுக்கும் சில மருதுகளுடன் கலந்தால், ஒரு குறிபிட்ட கிரிமிகளை மட்டும் கொல்லாமல், பல வகையான கிரிமிகளையும் கொல்லலாமென, CIMAP எனும் CSIRஐ சேர்ந்த ஒரு மருத்துவ பிரிவு, கண்டுபிடித்துள்ளது. மருத்துவர் சுமன் பிரித் கனுஜா தலைமையிலுள்ள ஒரு விஞ்ஞானிகள் குழு, கோமுத்திரம், ஒன்றன்பின் ஒன்றாக, சோதனை குழாயில் வைக்கப்பட்ட உயிர் அணுக்கள் மீது கலந்தால், புற்று நோயை அழிப்பதற்கு, தேவையான அதே சக்தி விகிதத்தை பெற, சாதாரண அளவை விட மிகவும் குறைந்த அளவிலான taxol எனும் புற்று நோய் தடுப்பு மருந்து தேவை படுகிறதென்று கண்டுபிடித்துள்ளனர்.
இப்பொழுது சொல்லுங்கள், எந்த சமயம் மூட நம்பிக்கையின் அடிப்படையில்,அறிவியல் வளர்ந்த இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கடைப்பிடிக்கிறதென்று.



மனு தர்ம சாத்திரம் இந்துமத நூல்களில் ஒன்றா???



இதிலதான் வேதங்களை படிப்பவர்களை காதினுள் ஈயத்தை கொண்டு ஊற்றுங்கள் என்று கூறப்பட்டுள்ளதாம், உண்மையா?
இது மனிதனை பல சாதி பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதாமே?
உயர்வர்க்கத்துக்கு துணைபோகும் நூலா?

இவை போன்ற அனைத்து கேள்விகளுக்கு விடை இங்கே




 (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது. இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழில் திருலோக சீதாராம் என்பார் மொழி பெயர்த்துள்ளார். தனி மனித மற்றும் சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்திக் கூறும் ஒரு சட்டக்கோவையாக இது. இந்தியாவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது.மனுநீதிச் சோழன் இதனை முழுமையாகப் பின்பற்றி ஆட்சி செய்ததாக போற்றப்படுகிறான். இந்து தத்துவத்தினுள் சாதியம் சார்ந்த கருத்துக்களை வலியுறுத்தும் மேட்டுக்குடியினரின் உத்தியாக இதனை விமர்சிப்பவர்களும் உள்ளனர்.
இந்நூலுக்கு மானவ தர்மம்(சமசுகிருதம்:मानवधर्मशास्त्र) என்ற பெயரும் உள்ளது. அதற்கு மானுட அறம் என்று பொருளாகும்.

மனுவின் காலமும் வாழ்ந்த பகுதியும்
மனு வாழ்ந்த காலம் கி.மு 1500 என்பதை சதபத பிராமணத்திலும், சொராஷ்ட்டிர மத வேதநூலான ஜெண்ட் அவஸ்தாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.[சான்று தேவை] ரிக் வேத கால நதிகளான சரசுவதி மற்றும் திருட்டாதுவதி நதிக்கரை பகுதிகளான பிரம்மவர்த்த பகுதிகள் [இன்றைய வடக்கு இராசபுதனம் மற்றும் தெற்கு அரியானா] பெருமழையால் அழிந்த பின்பு ஆரியர்கள்,விந்தியமலைக்கு வடக்கு பகுதிகளில் [தற்கால நேபாளம், உத்தர பிரதேசம்,பிகார்,மத்திய பிரதேசம்,வங்காளம், குசராத் மற்றும் கிழக்கு இராசபுதனம்] குடியேறினர். அப்பகுதி பின்பு ஆரிய வர்த்தம் எனற பெயரால் அழைக்கப்பெற்றது.அப்போது மற்ற முனிவர்கள் சுவாயம்பு மனுவையும் அணுகி இயற்கைச் சீற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் சமூக வாழ்க்கை நெறி முறைகளை எவ்வாறு மக்கள் வகுத்து கொண்டு வாழ்வது என்று கேட்டதற்கு, மாமுனி மனு வகுத்து கொடுத்ததே மனுஸ்மிருதி என்று நம்பப்படுகிறது.

சிறப்பம்சங்கள்
"மநு தர்ம சாஸ்திரம்" என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அநுஷ்டிக்கப்பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டதிட்டங் களால் அநுசரிக்கப்பட்டதுமாகும். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய குடியுரிமை சட்டங்கள் இயற்றுவதற்கு முன்பு இந்தியாவை ஆண்ட இசுலாமியர்களும் பிரித்தாணியர்களும் இந்து மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளிலும், குடி உரிமை வழக்குகளிலும் மனு தரும சாத்திரத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கினர். மேலும் இந்நூலை பின்பற்றி சந்திரகுப்த மௌரியரின் தலைமை அமைச்சர் கௌடில்யர் என்ற சாணக்கியர் படைத்த அர்த்த சாஸ்திரம் என்ற அரசு நிர்வாகம் தொடர்பான நூலை எழுதி புகழ் பெற்றார்.

தாக்கங்கள்
மனு தர்ம சாத்திரத்தின் தாக்கம் இந்தியா முழுவதும் காணக்கிடைக்கிறது. வருண மற்றும் சாதிப் பாகுப்பாடுகளின் மூல கருத்தாவாக மனுதர்மம் கருதப்படுகிறது.
தந்தைபெரியார் - “குடி அரசு” கட்டுரை 10.03.1935 இல் பின்வருமாறு மநு தர்ம சாஸ்திரத்தை விளக்குகிறார்....
1. "பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது" அத்தியாயம் 8. சுலோகம் 20.
2. "சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை யுடையதாயிருக்கும்" அ.8. சு.22.
3. "சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி" அ.8.சு. 22.
4. "ஸ்தீரிகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை" அ.8. சு.112.
5. "நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனை சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்ல செய்ய வேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனை பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும்" அ. 8. சு. 113115.
6. "சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்" அ.8. சு. 270.
7. "சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்" அ.8. சு.271.
8. "பிராமணனைப் பார்த்து, "நீ இதைச் செய்ய வேண்டும், என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்" அ.8. சு.272.
9. "சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்" அ.8. சு.281.
10. "பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை" அ.8. சு.349.
11. "சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர்ப் போகும் வரையும் தண்டிக்க வேண்டும்."
"பிராமணன் கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிடவேண்டும்." அ.8. சு.380.
12. "அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்கு பணி விடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும்." அ. 8. சு.410.
13. "பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான்" அ. 8. சு.413.
14. "பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்" அ. 8. சு.417.
15. "சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது" அ. 9. சு.416.
16. "பிராமணனால் சூத்திர ஸ்திரீக்கு பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு தந்தை சொத்தில் பங்கில்லை" அ. 8. சு.155.
17. "பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்தரவதை செய்து கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம்." அ.9. சு.248.
18. "பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்" அ. 9. சு. 317.
19. "பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவர்கள்." அ. 9. சு.319.
20. "பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்கு துன்பஞ் செய்தால் அவனை சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும்." அ.9 சு. 320.
21. "சூத்திரனுக்கு பிராமணப் பணி விடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாதவிடத்தில் க்ஷத்திரியனுக்கும், க்ஷத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு." அ.11. சு.12.
22. "சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்." அ.11. சு.13.
23. "யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைக் தண்டிக்கக் கூடாது." அ.11. சு.20.
24. "பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்." அ.11. சு.66.
25. "ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்." அ.11. சு.131.
25(அ). "அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது." அ.11. சு.132.
26. "க்ஷத்திரியன் இந் நூலில் (மநுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப்பட்டபடி ராஜ்யபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமண பணி விடை செய்வதே தவமாகும்." அ.11 சு.285.
27. "சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனே யாவன். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனேயாவன். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார்." அ.10. சு.75.
28. "பிராமணரல்லாதவன் உயர்குலத்தோருடைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்." அ.10. சு.96.
29. "சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும்." அ.10. சு.96.
30. "பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப் போன தானியமும், சூத்திரனுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும்." அ.10. சு.125.
31. "சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாகயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும்." அ.10. சு.129.
32. "மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப்பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர்." அ.2. சு.7.
இன்னும் இதைப் போன்று ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும், மறுசாரருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனுதர்மத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால் "பிராமணன்" என்ற வகுப்பாரைத் தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில் யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை "மனுதர்மம்" என்று கூறுவதா? அல்லது "மனு அதர்மம்" என்று கூறுவதா? சற்று யோஜித்து முடிவு செய்யுங்கள்.

உள்ளடக்கம்
பரம் பொருளாகிய பகவான் தமது விருப்பத்தின் காரணமாக பிரம்மா மூலம் அண்ட சராசரங்களை படைத்தார்.மனித குலத்தை பெருக்கவே மரிசி, ஆங்கிரசர், அத்திரி, புலத்தியர், புலகர், கிருது, பிரசேதகர், வசிட்டன், பிருகு மற்றும் நாரதர் எனும் பத்து பிரசாபதிகளை படைத்தார். இந்த பிரசாபதிகள் மூலம் சுவாயம்பு மனு உட்பட எழு மனுக்களும், தேவர்கள், சுவர்க்கலோகம், மாமுனிகள், யட்சர்கள், காந்தர்வர்கள், கிண்ணரர்கள், கிம்புருடர்கள், அசுவனிகுமாரர்கள், அட்டதிக்கு பாலகர்கள், அசுரர்கள், அப்சரசுகள், மருத்துக்கள், இராக்கதர்கள், பைசாசர்கள், நாகர்கள், கருடர்கள், சர்ப்பங்கள், பிதுர்கள், தாவரங்கள், விலங்கினங்கள், நீர் வாழ் பிராணிகள் தோன்றின. பின்னர் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க சமூகம் கட்டுக்கோப்பாக இயங்க வர்ணமற்றும் ஆசிரம தருமங்களை மனு வகுத்து கொடுத்தார். இது ஆசாரப்பகுதி, விவகாரப்பகுதி, பிராயச்சித்தப் பகுதி என மூன்று பகுதிகளையும் 12 அத்தியாங்களையும் கொண்டது.

1வது அத்தியாயம்
உலகத் தோற்றம்:-அண்ட சராசரங்களின் தோற்றம், தேவர்கள்,மானிடர்கள், அசுரர்கள், தோற்றம் , காலக்கணக்கீடு, நால்வகை வர்ண சமூகம்நால்வகை ஆசிரமம் மற்றும் அதன் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விவரிக்கிறது.

2வது அத்தியாயம்

பிரம்மச்சர்யம்:- பூணுல் அணிதல் (உபநயனம்), குருபக்தி, வேதம் படித்தல், வழிபாட்டு முறைகள் மற்றும் குருகுல நிலை பற்றி விவரிக்கிறது.


3-5 அத்தியாயங்கள்

அந்தணர் தருமம்:-இல்லறத்தின் மேன்மைகள், திருமண உறவுகள், யக்ஞம், விருந்தோம்பல், பலியிடுதல், இறந்த முன்னேர்களுக்கு செய்ய வேண்டிய பிதுர் கடன்கள், தகாத உறவுகள், கலப்புத் திருமணங்கள், விலக்க வேண்டியவைகள், வேதம் ஒதுதல், ஒதுவித்தல், ஒழுக்க நெறிகள்,உணவு முறைகள், தூய்மை, பெண்டிர் தொடர்பான விதிகள், உண்ணத்தக்கவை, தகாதவைகள், விசேட காலங்களில் புலால் உண்ணல், பிறப்பு-இறப்பு தீட்டு விதிகள், பெண்களுக்கு உகந்தவைகளும், விலக்கத்தக்கவைகளும் தொடர்பான விதிகள்.


6வது அத்தியாயம்

வானப்பிரத்தம் & துறவறம்:-காட்டில் வாழ்தல், உணவு முறைகள் ,ஒழுக்க விதிகள், செபம்,தவம் செய்தல்,வேத வேதாந்த விசாரம் செய்தல் தொடர்பான விதி முறைகள்.


7வது அத்தியாயம்

சத்திரிய தருமம்:-மன்னர்களின் மாண்புகள் & பண்புகள், கடமைகளும் பொறுப்புகளும்,அரசின் நீதிநெறி சட்டங்கள்,அரசியல் சிந்தனைகள்,அரசின் அதிகாரிகள்,தலைநகரம்,போர் அறம்,உள்நாட்டு நிர்வாகம்,வரி விதித்தல்,பகை அரசர்களின் பலம் பலவீனம் அறிதல்,பகை நாட்டை முற்றுகையிடல்,போர் செய்யும் முறைகள்,வெற்றி வாகை சூடல்,புலவர்களுக்கு பரிசு வழுங்குதல்,வேதம் அறிந்த அந்தனர்களுக்கு தானம் வ்ழங்குதல்,வேள்விகள் செய்தல்,சமூகத்தில் வர்ணாசிரம தரும நெறிகள் காத்தல் பற்றி விவரிக்கிறது.


8வது அத்தியாயம்


நீதிநெறிசட்டங்கள்:-குடிவகுப்பு, நீதிமன்றம், உடைமைகள், புதையல், களவுகள், கடன்கள், வட்டி, கொதுவை, காப்பு பொருள், பொருள் விற்பனை, பொருள் விற்பனை விலை நிர்ணயம்,அடிதடி கலவரம், பலாத்காரம், நிலத்தகராறு, நட்ட ஈடு,மான-நட்ட ஈடு, உடன்படிக்கைகள், நம்பிக்கை துரோகம், செய்கூலி, கலப்படம் தகாத செயல்கள் பற்றி விவரிக்கிறது.
பாலியல் பலாத்காரம் என்று அழைக்கக் கூடிய ஒரு குற்றத்தை ஒருவன் செய்தால் அவன் எந்த வருணத்தைச் (சாதி) சேர்ந்தவன் என்ற அடிப்படையிலேயே அவனுக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனையை மனுதர்ம சாத்திரம் தீர்மானிக்கிறது.
மேல்வருணத்தார் மூவரின் (அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன்) மனைவியையும் ஒருவன் (சூத்திரன்) தனது வலிமையாற் கூடினால் உயிர்போகும் வரை அவனை தண்டிக்கவும்
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 8. செய்யுள் 358
கற்பினளான பிராமணப் பெண்ணைக் கூடும் வைசியனக்கு ஒரு வருட காவலும் ஆஸ்திப் பறிமுதலும் தண்டனைகள். இவ்விதம் குற்றமிழைத்தவன் சத்திரியனாயிருப்பின் ஆயிரம் பணம் தண்டம் விதித்து கழுதை மூத்திரத்தை விட்டு அவன் தலையை மொட்டை இடுக!
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 8. செய்யுள் 374
ஒரே குற்றத்திற்கு சூத்திரருக்கு மரண தண்டனை, வைசியருக்கு ஒரு வருடம் சிறையும் ஆஸ்திப் பறிமுதலும், சத்திரியருக்கு ஆயிரம் பணம் அபராம் மொட்டையடித்தல், பிராமணருக்கு காயமின்றி பொருளுடன் ஊரைவிட்டு துரத்துதல்.



9வதுஅத்தியாயம்

வைசியர், ஆடவர் & பெண்டிர் அறம்:-திருமணம்,மகப்பேறு,பாகப்பிரிவினை,கவறாடல் முதலிய குற்றங்களுக்கு தண்டனைகள் மற்றும் வைசியர்களின் கடமைகள் பற்றி விவரிக்கிறது.


10வது அத்தியாயம்

சூத்திரர் & வர்ண கலப்பு சாதிகள் மற்றும் ஆபத்து தர்மம்:-சூத்திரர்களின் கடமைகள், கலப்பு சாதிகளின் தோற்றமும் சமூகத்தில் அவர்களுக்குரிய தகுதிகளும், கல்வி ஞானத்தால் கீழ்ப்பிறப்பாளர்கள் உயர்நிலை அடைதல், ஆபத்து காலங்களில் உயர்குடி மக்களுக்கு விதி விலக்குகள் தொடர்பான விதிகள் பற்றி விவரிக்கிறது.


11வது அத்தியாயம்

குற்றங்களும் அதற்க்கான கழுவாய்களும் :- தெரிந்தும் தெரியாமலும் செய்த குற்றங்களுக்கு செய்ய வேண்டிய கழுவாய்கள், யாகம், பாவங்களின் விளைவுகள், குற்ற வகைகள், உண்ணத்தகாதவைகள், மறுபிறப்பு, முக்குணங்கள் பற்றி விளக்குகிறது.


12வது அத்தியாயம்

வினைப் பயன்கள்:- நல்வினை தீவினைகளும் அதன் விளைவுகளும், முக்குணங்கள்வேதங்கள் மற்றும் வேதாந்தங்களின் வாய்மை, ஆன்ம ஞானம்,முக்திக்கு வழிகள் முதலியவைகளை விவரிக்கிறது.






மனுதரும சாத்திரமும் பெண்களும்

பெண்களுக்கு தனி அடையாளங்களையோ சுயேச்சையான செயல்பாடுகளையோ மனு தர்மம் நிராகரிக்கிறது. அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை அது அனுமதிக்கவில்லை.
இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 3
எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 147
பெண்களை ஒழுக்கக் கேடானவர்களாகவும் மயக்கும் குணம் கொண்டவர்களாகவும் மனுதர்மம் சித்தரிக்கிறது. பாலியல் ரீதியில் ஒழுக்கக் கேடுகள் எவையாவது நடந்தால் அதில் ஆணுக்கு பொறுப்பு எதுவுமில்லை என்பது போலவும் அவனை ஒரு அப்பாவியைப் போலவும் கருதி பெண்களை மனுதர்மம் இழிவுபடுத்துகிறது.
தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 213
புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 214
பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் குறப்படுவனவற்றையும் கேட்பீராக.
—மனுதரும சாத்திரம் 9, அத்தியாயம் செய்யுள் 19
இவ்வாறு பெண்களை இழிவுப்படுத்தும் மனுதர்மம் மாதரைக் காப்பாற்றுவதற்கான காரணத்தையும் விளக்குகிறது .
வீட்டிற்கு வேண்டிய பாத்திரம் முதலியவற்றை தேடிப் பெறுவதற்காக பொருளை அவளிடம் கொடுத்தும் அதனைக் காப்பாற்றி வைத்து வேண்டிய போது செலவிடும்படி செய்தும் தட்டு முட்டுச் சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ளச் செய்தும் வீட்டை துப்புரவாக்கி வைத்தல், தேவ பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களைப் பொறுப்பு, பாத்திரம் படுக்கை முதலியவற்றைச் சரியாக கவனித்துக் கொள்ளல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து அவற்றை அவளைக் கொண்டு செய்வித்தல் போன்றவற்றாலும் அவளது மனம் வேறிடம் செல்லாமற் காக்க!
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 11
கணவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் பெண் அவனுக்கு அடங்கி நடக்க வேண்டுமென்று விதிக்கிறது மனுதர்மம்.
கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 78
இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 154
மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும் இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 156



https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D 






"அர்த்தமுள்ள மனுதர்மம்" -
பிறப்பால் வருவது அல்ல உயர்வு தாழ்வு ஒருவன் செய்யும் செயலால் வருவதே.
இதற்க்கு சிறந்த உதாரன புருஷர்கள் "வால்மீகியோ , மகரிஷியோ, வியாசரோ, காளிதாசரோ, ரிஷி விஸ்வாமித்ரரோ பிறப்பால் பிராமணர் அல்ல!! இந்து மதத்தை தாக்க பகைவர்கள் எடுக்கும் முதல் ஆயுதம் மனுதர்மம் - வர்ணாசிரமம் உயர்வு தாழ்வு - அது உண்மையா ...? வாருங்கள் பகுத்தறிவோம்.....
======================================================
மனுதர்மம் என்றால் என்ன..?
----------------------------------------------
மானவ தர்மம் - அதற்கு மானுட அறம் என்று பொருளாகும்.
இந்தியர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல்,
மனுதர்மத்தின் நல்லதை தேடி எங்கும் செல்ல வேண்டாம் நம் தமிழகத்தில் "மனுநீதிச் சோழன்" அறம்தழுவாமல் இதனை முழுமையாகப் பின்பற்றி ஆட்சி செய்ததாக போற்றப்படுகிறார்.....அவரின் ஆட்சியே மனுதர்மத்தின் சாட்சி...
மனுதர்மம் பற்றி பேசும் எத்தனை பேர் மனுதர்மத்தை முழுவதும் படித்துவிட்டு பேசுகிறார்கள்...? வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது அல்ல உண்மையான மனுதர்மம்..
அன்னியன் நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியில் புனையப்பட்ட திரிக்கபட்ட மனுதர்மம் அல்ல நம் இந்திய மூதாயர் வாழ்வியல் நெறிமுறை வழிகாட்டி....ஆங்கிலேயர் அதுவும் இந்தியர்களை அடுக்குமுறை சட்டத்திற்கு தீர்ப்பு எழுதும் நீதிபதி பதவியில் இருந்த ஒருவர் மொழிபெயர்ப்பு எவ்வாறு இருக்கும் பகுத்தறிவு பேசும் நண்பர்களே...?
மனுதர்மவரலாறு:
--------------------------------
இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார்.
இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது.
கிமு 200 தொடக்கம் கிமு 150 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட இந்து சமூக நீதி நூல் என்று தற்காலத்தில் இனங்காட்டப்படும் நூல் செய்யுள் வடிவில் உள்ளது.
அந்தச் செய்யுள்கள் சரிவரமொழிபெயர்க்கப்பட்டுள்ளனவா அல்லது சரிவரப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளனவா என்பது வினாக்குறியாகவே உள்ளது.
வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதிதான் இந்த மனுதர்ம திரிபு மொழிபெயர்ப்பு,
மனுதர்மமம், இந்நூலை முதலில் ஆங்கிலேய அரசின் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். மொழி பெயர்த்தார் என்பதைவிட மனுதர்மத்தை திரிபு செய்து இந்துக்களை பெயர்த்தார் என்றே சொல்லவேண்டும்.
.அதை ஆதாராமாக வைத்துதான் இன்று வரை இந்துமதத்தின் மீது சேறு வீசுகிறார்கள், அப்படியே ஆனாலும் இஸ்லாமிய செரியா சட்டத்தை விட கொடியது அல்ல மனுதர்மம்,
மனுதர்மத்தின் உண்மையான முகம் -
======================================
மனு தர்மம் என்பது தற்காலங்களில் ஆங்கிலேய ஆட்சிமுதல் இன்றுவரை இந்திய விரோத கயவர்களால் தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பபட்டுள்ளதாகவே அறிகிறோம்.
உண்மையுருவில் மனு தர்மம் பல சமூக நியதிகளை வகுத்து கொடுத்துள்ளது.
குறிப்பாக மனு தர்மத்தில் கொடுக்கப்பட்டுள்ள வர்ணாசிரம தர்மத்தை மையப்படுத்தியே மனு தர்மம் என்னும் மொத்த படைப்பும் விமர்சிக்க படுகிறது. அந்த வர்ணாசிரமத்தை கொஞ்சம் பார்ப்போம்.
ரிஷி பாரத்வாஜரும், பிருகுமுனிவரும் உரையாடுவதாக அமைந்துள்ளது.
சமூகத்தில் கட்டமைப்பை உருவாக்கும்போருட்டு என்னென்ன விஷயங்கள்-செல்வங்கள் ஒரு மனிதனுக்கு அதிகாரத்தை-சக்தியை-வாழ்வாதாரத்தை கொடுக்கிறது என்று வகைபடுத்தினார்கள். அவை,
௧. அறிவு (கல்வி)
௨. ஆயுதம் (போர்-ஆட்சி அதிகாரம்)
௩. செல்வம் (வணிகம்)
௪. நிலம் (விவசாயம்)
இவை ஒரே இடத்தில் குவிவதால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் என்பதால் ஒருவர் ஒரு செல்வத்துக்கு மேல் வைத்திருக்க கூடாது என்றும் முறைப்படுத்தினார்கள்.
கல்வி அறிவு பெற்று பிரம்ம ஞானத்தை பெற்றவன் பிராமனனாகவும்,
ஆயுதம் கொண்டு நாட்டை காத்து அதிகாரம் செலுத்துபவன் ஷக்திரியனாகவும்,
வணிகம் மூலம் செல்வம் தேடுபவன் வைசியன் எனவும்
நிலத்தை கொண்டு தானியம் விளைவிப்பவன் சூத்திரன் என்றும் வகைப்படுத்தினார்கள்.
இவர்களுள் யாரும் உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் என்றோ குறிப்பிடவில்லை.
அதே போல், இந்த நால்வரும் தங்களிடம் உள்ள செல்வ அளவால் சமூகத்தில் உயர்ந்த நிலயை அடைய முடியாது,
மாறாக ஒருவர் தனது செல்வத்தால் எவ்வளவு நல்விஷயங்களை செய்தார், அவரது ஈகை-தியாகம் போன்றவற்றின் மூலமே அவரது அந்தஸ்து தீர்மானிக்கபடுகிறது.
சிறந்த உதாரணம் சடையப்ப வள்ளல் என்னும் வேளாளர் கம்பரால் சோழனினும் உயர்வாக பேசப்பட்டவர்.
பிறப்பால் இந்த வர்ணங்கள் தீர்மானிக்கபடவும் இல்லை. ஏனெனில் வால்மீகி மகரிஷியோ, வியாசரோ, காளிதாசரோ, ரிஷி விஸ்வாமித்ரரோ பிறப்பால் பிராமணர் அல்ல.
ஆனால் இவர்கள் மிகவும் போற்றப்பட்ட பூஜிக்கபட்ட மகான்கள். இவை தான் உண்மை மனுசாஸ்திரம்.
அதற்கு மேல்பட்டு சொல்லப்பட்டவைகள் இடைசெறுகல்களும் திரிபுகளுமேயாகும்.
இந்திய பாரம்பரிய அறிவியல் உள்ளிட்ட பல்வேறு சாஸ்திரங்களை கற்றும் போதித்தும் வந்தவர்கள் பிராமணர்கள்.
கிறிஸ்தவ மதம் பரப்ப முதலில் இந்தியர்கள் தங்களை தாழ்வாக-மேற்கு நாடுகளை உயர்வாக எண்ண என்பதால் இந்திய அறிவையும் ஆன்மீகத்தையும்,
உண்மையான வரலாற்றையும் அழிக்க பிராமணர்களை மக்களுக்கு எதிரிகளாக சித்தரிக்க ஏவப்பட்ட பல ஆயுதங்களில் ஒன்றுதான் இந்த மனுதர்ம பிரச்சனை. இதே திராவிட தீய சக்திகள் சமூகத்தில் சமதர்மம் பரப்புகிறேன் என்று அரசியல், தொழில், நிலங்கள் என அனைத்தையும் பறித்துக்கொண்டு யாரையும் நல்ல கல்வியும் கற்க விடாது மெக்காலே கல்வி திணிக்கப்பட உறுதுணையாய்
சிறப்பம்சங்கள்
---------------------------
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய குடியுரிமை சட்டங்கள் இயற்றுவதற்கு முன்பு இந்தியாவை ஆண்ட இசுலாமியர்களும் பிரித்தாணியர்களும் இந்தியர்கள் ஒன்றுபடும்வரை இந்து மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளிலும், குடி உரிமை வழக்குகளிலும் மனு தரும சாத்திரத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கினர். மேலும் இந்நூலை பின்பற்றி சந்திரகுப்த மௌரியரின் தலைமை அமைச்சர் கௌடில்யர் என்ற சாணக்கியர் படைத்த அர்த்த சாஸ்திரம் என்ற அரசு நிர்வாகம் தொடர்பான நூலை எழுதி புகழ் பெற்றார்.
மனுதர்மத்தை பற்றிய பொய் புனைவு கதைகள் -
===================================================
பெண்ணடிமையினையும் சமூக ஏற்றத் தாழ்வையும் மனுநீதி வலியுறுத்துகிறதா? - சரியான பார்வையில் மனு ஸ்மிருதி
ஓரு குலத்துக்கொரு நீதி என்பதுவே மனுநீதி என்று ஓசை நயத்திற்காகப் பேசிப் பேசி, சமுதாயத்தைப் பிளவு படுத்தி, மக்களிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் பழங்காலத்துப் பிற்போக்கான சட்ட நூல்தான் மனு நீதி என்கிற எண்ணம் உண்டாக்கப்பட்டது இந்திய விரோதிகளால் . விருப்பு வெறுப்பின்றி, முன்கூட்டியே ஓர் அபிப்பிராயத்துடன் அணுகாமல் ஆராய்ந்து பார்த்தால்தான் மனு நீதி என்கிற மனு ஸ்மிருதி வகுத்திருக்கும் விதிமுறைகள் எத்தகையன என்னும் முடிவுக்கு வரமுடியும்.
முதலில் ஸ்மிருதி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆதியிலிருந்து தொடர்ந்து வருபவை ஸ்ருதி என்கிற செவி வழியாகத் தலைமுறை தலைமுறையாய் மிகுந்த மரியாதையுடன் ஏற்கப்பட்டு வரும் கோட்பாடுகள். நான்மறைகளும் அவற்றின் அடியற்றி வரும் உபநிடதங்களும் இவ்வகையைச் சேர்ந்தவை. கண்ணபிரான் அருளியதாக அறியப்படும் பகவத் கீதையையுங்கூட ஸ்ருதி என்று கூற வியலாதுதான்.
ஆனால் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு வாய்மொழியாக அது உபதேசிக்கப்பட்டமையால் அதையும் ஸ்ருதியெனக் கொள்வதில் தவறில்லை எனக் கருதுவோர் உண்டு.
ஸ்மிருதி எனப்படுபவை ஏட்டில் பதிவு செய்யப்பட்ட விதிமுறைகள்.
வேத காலத்திற்குப் பின் வெகு காலங் கழிந்த பிறகுதான் இவை உருவாயின. பொதுவாக தர்ம சாஸ்திரங்கள் எனக் கருதப்படுபவைதாம் ஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்றன.
மாறும் காலத்திற்கேற்ப மாற்றங்கொள்பவைதாம் தர்ம சாஸ்திரங்கள். அவ்வாறு மாற்றங்கொள்ளாமல் சில விதிமுறைகள் முரண்டுபிடித்தால் மூலாதாரமான ஸ்ருதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஸ்ருதிகள் என்ன சொல்கின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட ஸ்மிருதியின் கூற்றைத் தள்ளிவிட வேண்டும் என்று தர்ம சாஸ்தரங்களான ஸ்மிருதிகளே அறிவுறுத்தியிருக்கின்றன.
ஸ்மிருதிக்கும் ஸ்ருதிக்கும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு காணப்படுமானால் ஸ்ருதியில் சொல்லப்பட்டிருப்பதைத்தான் சரியென்று கொள்ளவேண்டும் என மனு ஸ்மிருதியும் தனது இரண்டாவது சருக்கத்தின் பனிரெண்டாவது, பதிமூன்றாவது செய்யுள்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
ஆக, ஹிந்து சமுதாயத்திற்கு ஸ்ருதிகளான வேதங்கள்தாம் வழிகாட்டும் அறநெறிகள். மனு ஸ்மிருதியே ஒப்புக்கொண்டுள்ளவாறு,
ஸ்மிருதிகள் இரண்டாம் பட்சந்தான். மனு நீதி எனப்படும் மனு ஸ்மிருதியானது ஹிந்து சமுதாயத்தின் ஒரேயரு ஸ்மிருதியல்ல.
மொத்தம் உள்ள பதினெட்டு ஸ்மிருதிகளுள் ஒன்றுதான் அது. ஒரு தனி நபர், ஒரு குடும்பம், ஒரு சமுதயம், ஒரு தேசம் ஆகியவை கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளை, தான் எழுதப்பட்ட காலத்திற்கேற்ப வகுத்துள்ளது,
மனு ஸ்மிருதி. விண்ணியல், மருத்துவம் முதலான விஷயங்கள் குறித்தும் அது பேசுகிறது.
மனு ஸ்மிருதி எப்பொழுது எழுதப்பட்டது என்பதற்கு வரலாற்றுப் பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை. எந்தக் கால கட்டத்தில் அது ஹிந்து சமூகத்தால் வார்த்தை பிசகாமல் அனுசரிக்கப்பட்டது என்பதற்கும் ஆதாரம் இல்லை.
ஸ்ருதிகளான வேதங்கள் தோன்றி நீண்ட நெடுங்காலம் கழிந்த பிறகுதான் ஸ்மிருதிகளுள் ஒன்றான மனு ஸ்மிருதி தோன்றியது.
மனு ஸ்மிருதிக்குப் புராண அந்தஸ்தை அளிப்பதற்காக அதனை இயற்றியவர் (விஸ்வகர்மாவின் வழி தோன்றல்களாக மனு) என்கிற ஆதி புருஷன் என்று கற்பிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் பதினான்கு மன்வந்தரங்கள் கொண்டது ஒரு கல்ப காலம் என்றும், ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒரு மனு ஆதியானவர் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
தற்சமயம் நடப்பது ஏழாவது மன்வந்தரம். இதன் ஆதிபுருஷர் வைவஸ்த மனு என்கிறது, புராணம். இந்த மனு எழுதி வைத்ததுதான் மனு ஸ்மிருதி என்று எவரும் கூறினால் அதை ஏற்பது எளிதல்ல.
வரலாற்றுக் கண்ணோட்டப்படிப் பார்த்தால் சுங்க வம்சத்துப் பேரரசர் புஷ்யமித்திரர் காலத்தில்தான் மனு ஸ்மிருதி என்கிற பெயரில் ஒரு சாஸ்திரம் எழுதப்பட்டது என்று ஒரு தரப்பினரால் கருதப்படுகிறது.
ஆனால் இதற்கும் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. ஆக, புராதன வேத காலத்து ஹிந்து சமுதாயம் இந்த மனு ஸ்மிருதியை அனுசரித்திருக்க வாய்ப்பில்லை. மனு ஸ்மிருதி எழுதப்பட்ட காலம் கி. மு. முதல் நூற்றாண்டு என ஒரு கருத்து நிலவுகிறது.
மனு ஸ்மிருதியைப் பற்றிய பிரதான கருத்துகள் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்தான் வெளிப்படலாயின.
இவை பெரும்பாலும் ஹிந்து சமய நம்பிக்கைகளையும் ஹிந்து சமூக நடைமுறைகளையும் இழிவானவை என நிறுவவேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் தெரிவிக்கப்பட்டன.
மேலும் மனு ஸ்மிருதியின் மீதான கடுமையான விமர்சனங்கள் பெரும்பாலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டுத்தான் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த மொழிபெயர்ப்புகள் ஐரோப்பியர்களால், அவர்களின் கண்ணோட்டத்திற்கும் புரிந்துகொள்ளும் ஆற்றலுக்கும் பயிற்சிக்கும் ஏற்பவே இருக்கும் என யூகிப்பதில் தவறிருக்காது.
மனு ஸ்மிருதியில் மொத்தம் 2031 செய்யுள்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு ஒழுக்க விதியை வலியுறுத்துகிறது.
ஆனால் இந்த 2031 விதிமுறைகளும் எந்தக் கால கட்டத்திலேனும் ஹிந்து சமூகத்தால் பாரத தேசம் முழுவதும் ஒட்டுமொத்தமாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகக் கூறுவதற்கில்லை.
மனு ஸ்மிருதியை ஆதாரம் காட்டிப் பேசப்படுகின்ற விதிமுறைகள் பலவும் அவரவர் கன்ணோட்டப்படியான விளக்கவுரைகளேயன்றி நேரடியான மொழிபெயர்ப்புகள் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தலை சிறந்த சமூக சீர்திருத்தத் துறவியும், ஆரிய சமாஜம் என்னும் அமைப்பை உருவாக்கியவருமான சுவாமி தயானந்த சரஸ்வதி மனு ஸ்மிருதிக்கு ஒரு விளக்கம் தந்துள்ளார்.
மனு ஸ்மிருதியின் செய்யுள்களிலேயே பல ஒன்றுக்கொன்று முரண்படுவதை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது, ஒவ்வொரு கால கட்டத்திலும் அவ்வப்போதைய வாய்ப்புகளுக்கு இணங்க மனு ஸ்மிருதியில் இடைச் செருகல்கள் நுழைந்து விட்டிருக்கின்றன என்பதுதான்.
ஒன்றோடொன்று முரண்படும் விதிமுறைகளைக் கண்டறிந்து இன்றைய காலகட்டத்திற்கு எந்த விதிமுறைகள் பொருந்துகின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு பொருந்தாதவற்றைப் புறக்கணிப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, மனு ஸ்மிருதியின் இரண்டாம் சருக்கத்தின் தொண்ணூற்றேழாவது செய்யுள் கீழான குணவியல்புகள் உள்ள வர்கள் வேதமெய்ப்பொருளை அறியவியலாது என்று கூறுகிறது.
பிறவியின் அடிப்படையில் பேசப்படாமல் குண நலன்களையே வலியுறுத்துவதாக இது இருப்பதால் இதனை ஏற்பதுதான் முறையாக இருக்கும்.
ஆண், பெண் என்கிற பேதமின்றி எல்லாக் குழந்தைகளையும் ஐந்து அல்லது எட்டாவது வயதிலாவது கட்டாயக் கல்வி பெறச் செய்வது பெற்றொருக்கு மட்டுமின்றி அரசுக்கும் நிர்வாக சபைகளுக்கும் கடமை யென்று ஏழாவது சருக்கத்தின் 152 வது செய்யுள் விதிக்கிறது.
குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யத் தவறுவது தண்டனைக்குரிய குற்றம் என்றே இச்செய்யுள் எச்சரிக்கிறது.
எனவே பெண்களுக்குக் கல்வி அவசியமில்லை என விதிமுறை ஏதும் இருக்குமானால் முரண்பாடான அந்த விதியைத் தூக்கி யெறிந்துவிடலாம்.
திருமணத்தைப் பற்றிப் பேசும்போது, தனது ஒன்பதாவது சருக்கத்தின் தொண்ணூறாவது செய்யுளில் ஒரு பெண்ணுக்கு உரிய பருவத்தில் தன் தகுதிக்கு ஏற்ற கணவனைத் தேர்வு செய்துகொள்ளும் உரிமையை மனு ஸ்மிருதி உறுதிசெய்கிறது.
எனவே பாலிய விவாகத்தை அது வலியுறுத்துவதாகக் கருதத் தேவையில்லை.
திருமணப் பொருத்தம் என்பது மனப் பொருத்தம், குண வியல்புகளுக்கியைந்த கருத்தொற்றுமை, உடல் ஆரோக்கியம் ஆகியவைதான் என்று மனு ஸ்மிருதி கூறுகிறது.
அவரவர் வகுப்பில் மணம் செய்துகொள்வது அவசியம் என்று கூறுகையில் இவற்றைத்தான் மனு ஸ்மிருதி வலியுறுத்துகின்றதேயல்லாமல் பிறவியின் மூலம் வருகின்ற வகுப்பைக் குறிப்பிடவில்லை.
பெண்களை மிக உயர்வாகப் போற்றும் பல செய்யுள்களை மனுஸ்மிருதியில் காணலாம்.
மூன்றாவது சருக்கத்தின் அறுபத்திரண்டாவது செய்யுள் மனைவியைக் கணவன் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விதிக்கிறது.
மகிழ்ச்சியில்லாத மனைவி இருக்கிற குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்காது என்று மனு ஸ்மிருதி எச்சரிக்கிறது.
பெண்களை தந்தைமாரும் சகோதர்களும், ஏன் கணவனுங்கூட வணங்கக் கடமைப் பட்டிருப்பதாக அது கூறுகிறது.
பெண்களுக்குக் குடும்பங்களில் நல்ல உணவு, சிறந்த ஆடையாபரணங்கள் ஆகியவற்றை அளித்து மகிழ்விக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி விதிக்கிறது.
பெண்கள் மதிக்கப் படுகின்ற குடும்பங்களிலும் சமுதாயத்திலும்தான் சிறந்த மனிதர்கள் தோன்றுவார்கள் என்று மனு ஸ்மிருதி அறிவுறுத்துகிறது.
பெண்கள் துன்புறும் நிலை இருக்கின்ற குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது என்று அது சொல்கிறது. பெண்களை மதிக்காத சமுதாயத்தில் எத்தனை நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றால் பயன் விளையாது என்கிறது,
மனு ஸ்மிருதி. அதன் மூன்றாவது சருக்கத்தில் ஐம்பத்தைந்திலிருந்து, ஐம்பத்தொன்பது வரையிலான செய்யுள்கள் பெண்கள் நல னையே பிரதானமாக வலியுறுத்துகின்றன.
தகப்பன் பெயர் இல்லையேல் தாயின் பெயரால் பிள்ளைகள் அறியப்படட்டும் என்று சொல்கிற நடைமுறை வேத கால சமுதயத்தில் இருந்திருக்கிறது.
பெண்கள் ஆண்களோடு சரி சமானமாக அமர்ந்து தத்துவ விசாரங்களிலும் தர்க்கங்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்பதற்கும் சான்றுகள் உண்டு.
எனவே பெண்ணடிமை முறையும், பெண்களை அறிவார்ந் த சபைகளிலிருந்து விலக்கி வைக்கும் போக்கும் இடையில்தான் நுழைந்திருக்கக்கூடும் எனப் புரிந்துகொள்ள வேண்டும்.
இதற்குச் சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனு ஸ்மிருதியில் அதற்கு ஏற்ற இடைச் செருகல்கள் உள்நோக்கத்துடன் நுழைக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடியும்.
மனு ஸ்மிருதியின் பத்தாவது சருக்கத்தில் உள்ள அறுபத்தைந்தாவது செய்யுள் ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம் என்று சொல்கிறது.
சத்திரியர், வைசியர் விஷயத்திலும் இது பொருந் தும் என்று அது மேலும் விளக்குகிறது. இதிலிரு ந்து பிறவியின் பயனாக வர்ணங்கள் அமைவதில்லை,
குணநலன்களின் அடிப்படையில்தான் அவை நிர்ணயிக்கப்படுகின்றன என்று மனு ஸ்மிருதி வலியுறுத்துவதாகக் கொள்ளமுடியும்.
மேலும், பிராமணன் ஒரு குற்றம் இழைத்தால் அதற்கு மிக அதிக பட்ச மாகவும், அதே குற்ற்றத்தை இழைத்த சத்திரியனுக்கு அதைவிடச் சிறிது குறைவாகவும் வைசியனுக்கு அந்தக் குற்றத்திற்கு மேலும் குறைவாகவும் சூத்திரனுக்கு மிக மிகக் குறைவாகவும் தண்டனை விதிக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி நிர்ணயிக்கிறது.
காரணம், பிராமணனாக அறிவு நிலையில் உயர்ந்திருப்பவன் தெரிந்தே குற்றம் இழைத்திருப்பான் என்று கொள்ளவேண்டும் என அது விளக்குகிறது.
பிற பிரிவினரை ஓரளவுக்கே விவரம் தெரிந்தவர்களாகக் கருத வேண்டுமாதலால் அதற்கேற்பக் குறைவாகவும், சூத்திரன் தனது அறியாமையால் குற்றம் இழைத்திருப்பான் ஆதலால் மிக மிகக் குறைவாகவும் அதே குற்றத்திற்குத் தண்டணை விதிப்பதே பொருத்தம் என்கிறது, மனு ஸ்மிருதி.
மனு ஸ்மிருதியைப் பற்றிய விரிவான பிரஸ்தாபம் காலனி யாதிக்க காலத்தில்தான் தலையெடுத்தது.
குறிப்பாக ஹிந்து சமூகத்தைக் குறை கூறி, மேற்கத்திய நாகரிகமும் சம்பிரதாயங்களும்தாம் மேன்மையானவை என்று மனதில் பதிய வைப்பதற்குத்தான் அத்தகைய பிரஸ்தாபம் பயன்படுத்தப் பட்டது.
ஆங்கிலக் கல்வியின் வழியாகத் தம் தாயகத்தின் கலாசாரத்தையும் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் காணப் பழகியவர்களுக்கு காலனியாதிக்கக் கல்வியாளர்கள் மனு ஸ்மிருதி பற்றி வெளியிட்ட கருத்துகள்தாம் வேத வாக்காகவும் அமைந்துவிட்டன.
அந்த அடிச்சுவட்டில் தொடர்ந்து நடப்பவர்களிடையே மனு ஸ்மிருதியைப் பற்றி ஒருதலைப்பட்சமான கருத்து நிலவுவது இயற்கைதான்.
------------------------------------------------------------------------------------
திருக்குறள் போன்று செய்யுள் வடிவில் உள்ளதை எவர் வேண்டும் என்றாலும் அவரவர் விருபத்துக்கு அரசியல் சமூக தேவைக்கு தகுந்தாற்போல் இதற்க்கு "விளக்க உரை" எழுதலாம் ஆகையால் மனுதர்மத்தை மொழிபெயர்த்தல் என்பதே தவறு !
இங்குதான் பகைவர்கள் தவறாக பொருள் படுத்துகிறார்கள்..! மனுதர்மத்தை பார்ப்பவரின் மனதை பொறுத்தது - காமாலை காரனுக்கு காண்பது எல்லாமே மஞ்சள் என்பது போன்று தவறான குற்ற என்னத்துடுன் பொருள் கொண்டாள் அது மனுதர்மத்தின் தவறு அல்ல..." தீதும், நன்றும், பிறர் தர வாரா"