Showing posts with label கலாச்சாரம். Show all posts
Showing posts with label கலாச்சாரம். Show all posts

Tuesday, 21 July 2015

திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;

என்னிடம் ஒரு நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார் அதாவது திருமணத்தின் போது சொல்லப்படும் மந்திரத்தின் அர்த்தம் என்ன என்று கேட்டார்

எனக்கு அப்போ அதற்க்கு பதில் கொடுக்க முடியாமல் போய்விட்டது. சில நாட்களுக்கு பிறகு அவரு கேட்ட கேள்வி என் மனதில் தோன்றியது. அதை இணையத்தில் தேடி பார்த்தேன் கீழே உள்ளவாறு பெரும்பாலன வலைத்தளங்களில் காணப்பட்டது. அங்கு காணப்பட்டது இங்கு தருகின்றேன்

''சோமஹ ப்ரதமோ விவேத 
கந்தர்வ விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''''

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.

நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.

அத்துடன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.

இதை பார்ப்பனர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். இது அவர்கள் தந்த விளக்கம்தான். ஆனால் சில பார்ப்பனர்கள் மட்டும் "அவள் மகளாக இருந்தாள்" என்று விளக்கம் சொல்லி தப்பிக்க முனைவார்கள்

இது இருக்கட்டும். வேறு மந்திரங்களை பார்ப்போம். (18 வயதுக்கு உட்பட்டவர்கள் இதை படிக்க வேண்டாம்)
"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ
யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."
இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளை நீங்கள் உதவ வேண்டும்.

இன்னும் ஒரு மந்திரம்:
"விஷ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபாணி பீசமிது
ஆசிஞ்சாது ப்ரஜபதி
தாதா கர்ப்பந்தாது..."
இதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா?

உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள். இப்படி ஆபாசம் மிகுந்த மந்திரங்களை சொல்லி நடக்கின்ற திருமணங்களையே எமது தமிழர்கள் செய்கிறார்கள். இவைகளை விட்டு திருக்குறள் சொல்லி திருமணங்கள் செய்யுங்கள் என்றால், "கடவுள், மதம்" என்று அடம்பிடிக்கிறார்கள்.
தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?

### என்று வலைத்தளத்தில் காணப்பட்டது

நமக்கு தெரியும் தமிழில் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் வரும் என்று
அதே போலதான் சமஸ்கிருதத்தில் உள்ள சொற்களுக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

இப் பதிவுக்கு கீழே பல நண்பர்  பின்னூட்டல் கொடுத்துள்ளனர் அதை பாருங்கள் ###

=================================================
வாசகர் பின்னூட்டல் 1:

மேலுள்ள மந்திரத்தின் சரியான பிரதி கீழே உள்ளது (உச்சரிக்கும் வசதி கருதி ஆங்கிலத்திலே தருகிறேன்)
Somah prathamo vivide
Gandharvo vivida uttarah
Trtiyo Agnistepatih
Turiyastemanusyajah.
Somo dadad gandharvaya
Gandharvo dadadagna; ye
Rayincapputramscadad
Agnirmahyamatho imam
- Rigveda, 10. 85, 40. 41.

இதன் பொருள்:
"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்
பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்
மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்
நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்"

இதன் உட்பொருள்:
1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது

2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை.
ஒரு பெண்குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது

3. அதன் பின் 11 - 16 வயது பருவ காலம், உடலில் ஹோமோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது

இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.

பதி என்னும் சொல்லின் பொருள் பாதுகாவலன் என்பதாகும். அதற்கு பெண்ணை புணர்பவன் என்ற அர்த்தம் இல்லை. அப்படி என்றால் பெண்ணை வன்புணர்வு செய்பவனும் பதி ஆகிவிடுவான்.

ஒரு பெண் உருவாக 3 தேவதைகளின் அருள் தேவைப்படுகிறது. 3 தேவதைகளின் அம்சமாய் விளங்கும் பெண் மானிடனான உன்னை இன்று அடைகிறாள். அத்துணை உயர்வான அவளுக்கு நீ காலம் முழுவதும் துரோகம் செய்யாது கண் போல் காக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது (மணமகன் எடுக்கும் சத்தியபிரமாண மந்திரங்களிலும் இந்த உறுதிமொழி உள்ளது)

பதி என்ற சொல்லுக்கு பெண்ணை புணர்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான அர்த்தம் தரும் மந்திரத்தின் அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய முடியும்.

தலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.

வடமொழி தெரிந்தவர்களும் தங்கள் மகளின் திருமணத்தில் இந்த மந்திரம் தான் சொல்கிறார்கள். புனிதமான திருமண சடங்கில் சொல்லப்படும் மந்திரத்தில் வக்கிரத்தை கலக்க வேண்டிய அவசியம் தான் என்ன?

=================================================
வாசகர் பின்னூட்டல் 2:

பதிவுக்கு பின்னூட்டல் திருத்தம்:
//அத்துடன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.//

இந்த மந்திரத்தில் ரோமம் பற்றி எல்லாம் எங்கும் குறிப்பிடப்ப்டவில்லை.
(அது மட்டும் அல்ல பெண் உடலில் எத்தனையோ இடங்களில் ரோமம் இருக்கிறதே! ஏன் வக்கிரமாகவே சிந்திக்க வேண்டும்?)
பகுத்தறிவு என்பார்கள் - எதையும்
பகுத்தறிய மாட்டார்கள்
பகைத்தறிவு போனதனால்
மிகைத்திரண்டு வந்ததடா

பகுத்தறிவு பிரசாரம் என்ற பெயரால் தமிழர்களுக்கு தவறான தகவல் தருவதை இனியாவது தவிர்ப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

=================================================
வாசகர் பின்னூட்டல் 3:

வடமொழி மந்திரங்களுக்கு நான் விளக்க எழுதுவதால் தமிழர்கள் நிச்சயம் வடமொழி மந்திரங்களை சொல்லித்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுவதாக யாரும் கருதி விடக்கூடாது.

தமிழில் திருமணங்களில் சொல்லக்கூடிய அழகிய மந்திரங்கள் நிச்சயம் இருக்கும். அது மட்டும் அல்ல இந்த வேதப் பிராமணங்களை தமிழிலேயே சொல்லும் போது எம்மக்களுக்கு இன்னும் தெளிவாகவே தெரியும்.

எனது திருமணத்தின் போது வேதமந்திரங்கள் ஓதப்படும். ஆனால் முக்கியமான பிரமாணங்களை தமிழில் தான் எடுக்க திட்டமிட்டுள்ளேன்.

அது மட்டும் அல்ல. வேதங்களே கூட மேற்சொன்ன மந்திரங்கள் ஓதாமல் திருமணம் செய்யவே கூடாது என்று சொல்லவில்லை. வேதங்களில் சொல்லப்பட்ட 8 வித திருமணங்களில் ஒன்று தான் இந்த பிரம்மமுறை திருமணம். அத்தோடு, மந்திரங்கள் ஓதி செய்யப்படும் இந்த பிரம்மமுறை திருமணங்களில் பெண்வீட்டாரிடம் இருந்து எந்த சீதனமும் பெற்றுக்கொள்ளக் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது
=================================================
வாசகர் பின்னூட்டல் 4:

திருமணம் என்பதே.. ஒரு ஆபாச நிகழ்வுதான். அதை ஆபாசமாக கருதாமலும் பார்க்க முடியும். ஆனால் உலகில் 98% பேரும் திருமணமான சில ஆண்டுகளிலேயே குழந்தை குட்டியோடு அலைவதைப் பார்க்கையில்... அது ஆபாச நோக்கோடுதான் நோக்கப்படுவது புலனாகிறது. ஆனால் அதன் அர்த்தம் வேறு. அதை விடுவோம்..!

மக்கள் மத்தியில் கடவுள் மீது நம்பிக்கை மட்டுமல்ல.. ஒரு பயமும்.. பக்தியும்..மதிப்பும் இருக்கிறது. மக்கள் நம்பும் அல்லது பயப்பிடும்.. அல்லது மதிப்பளிக்கும் அந்தக் கடவுளை வைத்து நடைமுறை வாழ்க்கைக்குரிய விடயங்களுக்கு விளக்கமளித்து விட்டால்.. மக்கள் அதற்கு கட்டுப்படுவார்கள் என்பதை புராண இலக்கியங்களில் தெளிவாகக் காணலாம். சிலர் புராண இலக்கியங்களை மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகளின் பிரதிபலிப்பாக நோக்குவது தவறு. புராண இலக்கியங்கள் மக்களின் வாழ்வை கற்பனை கலந்து பிரதிபலிப்பவை. அதற்குள் கடவுள் இருப்பது மக்களின் மனதை எவ்வாறு ஒரு விடயத்துக்குள் ஆழ்த்துவது என்ற நோக்கில் அன்றி.. அவைதான் கடவுட் கோட்பாடுகள் அல்லது மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் என்ற அடிப்படையில் அல்ல. அவை தவறான புரிதல்கள். மக்களுக்கு மதக் கோட்பாடுகள் இலகுவாகப் புரியாததால்.. கடவுளை நடைமுறை வாழ்க்கைக்குள் பிரதியீடு செய்து மக்களின் வாழ்க்கையில் ஒரு ஒழுக்கத்தை விதைக்க முற்படுகின்றனர் என்பதையே மேலுள்ள மந்திர உச்சாடணம் விளக்குகிறது.

18 வயதுக்கு உட்பட்டோர்தான் படிக்கனும் இவற்றை என்று. 11 வயதிலேயே மனித இனப்பெருக்கம் பற்றி தெளிவாக விளக்கப்படுகிறது. எனவே இதில் சபேசனுக்கு கவலை தேவையில்லை.
பெண்களின் இனப்பெருக்க உறுப்பு.. பிரதானமாக மூன்று பகுதிகளை உடையது என்பது தவறல்ல. அது உண்மையே. கருப்பை (uterus).. யோனி மடல் (vagina).. வெளிப்புற உறுப்புகள் vulva.

ஆண் பெண் உடலுறவின் போது ஆண்களைப் போலன்றி பெண்கள் பாலுணர்வுத் தூண்டலுக்கு இலக்காக அதிக நேரம் எடுப்பதுடன் அவர்களின் பாலுணர்வுத் தேவை என்பது ஆண்களை விட அதிக நேரத்துக்குரியது. அதுமட்டுமன்றி ஆண் பெண் பாலுறுப்புக்கள் கலப்படைவதற்கு முன் தயார் நிலைக்கு வர வேண்டும். அதில் கூட பெண்களுக்கு அதிக நேரம் காலம் அவசியம். அப்படி நிகழாத போது.. பெண்களில் பிறப்புறுப்புப் பகுதி சிதைவடையவோ.. அல்லது வலி ஏற்படவோ.. அதிக சந்தர்ப்பம் உண்டு. பெண்களின் பிறப்புறுப்புப் பகுதி சிதைவடைவதால் (குருதிப் போக்குக்கு உள்ளவதால்) அதிக நோய்த்தொற்றலுக்கு வாய்ப்புண்டு. தொடர்ந்து உடலுறவு கொள்ள முடியாத நிலையும் தோன்றலாம். இப்படிப் பலர் வைத்தியசாலைக்கு வருகிறார்கள்.. இன்றைய உலகில் கூட.

அதனால் தான் ஆண்கள் உடலுறவின் போது விலங்குகள் போல முரட்டுத்தனமாகப் புணராமல்.. பெண்களின் உணர்வுநிலைகளை அறிந்து புணர வேண்டும் என்பதை.. விளக்க வேண்டிய கடப்பாடு உண்டு. இதை மண மேடையில் இருக்கும் மணமக்களுக்கு புத்தகமும் கையுமா சொல்ல முடியுமா சார்..???! அதுவும் மனித உடலமைப்புப் (Human anatomy) பற்றிய அறிவு தெளிவாக அறிவியல் மூலம் இனங்காட்டப் படாத ஒரு காலத்தில். இன்று நிலை வேறு.

அதுதான் திருமணம் என்ற நிகழ்வின் போது மந்திரம் மூலம் வழிகாட்டுகிறார்கள். கடவுளை வைத்து விளக்கமளிக்க முற்படுகின்றனர். இதில் என்ன தப்பு. கடவுள் சமூகத்துக்கு நல்வழி காட்டத்தானே மனிதனால் பாவிக்கப்படுபவர். நீ எப்படி கடவுளை மதித்து.. உருகி வணங்கிறாயோ.. உணர்வுகளை செலுத்திறாயோ.. அதைப் போல் நடந்து கொள்ளப்பா எங்கிறார்கள். முன்னர் எல்லோரும் சமஸ்கிரதமும் படிப்பர். அதனால் எல்லாத் தம்பதியருக்கும் இது புரியும் என்பதால் சமஸ்கிரதம் மூலம் சொல்கின்றனர். ஆனால் இன்று அது பலருக்கு விளங்க வாய்ப்பில்லை. இதை தமிழில் காலத்தின் தேவைக்கேற்ப அறிவியல் சார்ந்து சொன்னால் சிறப்பாக இருக்கும்.

கருத்தடை சாதனங்களுக்கும்.. கொண்டோம்களுக்கும் நாம் இன்று விளம்பரம் செய்யல்லையா. அதுபோல்.. அன்று திருமணமாகும் சம்பதியருக்கு அடிப்படைப் பாலியல் கல்வியை இப்படியான மந்திர உச்சாடணம் மூலம் ஊட்டியுள்ளனர். கடவுள் என்பது அங்கு கையாளப்பட்ட ஒரு காரணி மட்டுமே அன்றி.. அதில் தான் கடவுள் உள்ளார் என்பதல்ல விளக்கம். மத அடிப்படை கோட்பாடு என்பது வேறு.. கடவுள் என்ற அந்த பதநிலையை மக்களுக்கு அறிவூட்டப் பயன்படுத்தும் நிலை என்பது வேறு.

அரைகுறையா விளங்கிட்டு வந்து.. அரைகுறையா.. ஆராயாதீர்கள்..! ஒரு முழுமை நோக்கி விடயங்களை நோக்குங்கள். தெளிவு பிறக்கும். வேண்டிய மாற்றங்களை அல்லது சீர்திருத்தங்களை பழமைக்குள் இருந்து தேட வேண்டிய சந்தர்ப்பமாவது எழுவது புரியும்.
இன்றைய உலகிலும் இது கட்டாயம். திருமணமாகும் தம்பதியருக்கு பாலியல் அறிவு மட்டுமன்றி பிறப்புரிமையியல் (genetics) அறிவும் அவசியம். புலம்பெயர்ந்த நாட்டில் கூட பல தமிழர்கள் தங்கள் நெருங்கிய உறவுகளை திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் பல பாரம்பரிய நோய்களும்.. பிறப்புரிமை சார்ந்த நோய்களும் ஏற்படுகின்றன. பல திருமண முறிவுகளுக்கு வன்முறைத்தனமான பாலியல் அணுகுமுறையும் காரணம் என்பதை திருமண முறிவு வழக்குகளைப் பார்த்தால் புரியும்.

இதை அடிப்படை பாலியல் பிறப்புரிமையியல் அறிவின்றி.. இருக்கும்.. திருமணமாகும் தம்பதியருக்கு எப்படி சொல்லிக் கொடுக்கப் போறீர்கள் என்று சிந்தியுங்கள். அன்று மந்திரம் மூலம் சொன்ன பாலியல் கல்வி சார்ந்த ரகசியத்தை பழிக்கிறீர்கள்.. இன்று அதே விடயமானது அவசியமானதாகி உள்ள சூழலில் அதைச் சொல்லிக் கொடுக்க ஒரு வழி சொல்லுறீங்களும் இல்ல.

அநாவசிய கர்ப்பமாதல்.. கருக்கலைப்புக்கு வழி செய்கிறது.

அண்மையில் லண்டனில் ஒரு வைத்தியசாலைக்கு ஒரு தம்பதியினர் வந்தார்கள். மனைவிக்கு விருப்பமில்லாத சமயத்தில் அவர் கர்ப்பமாகி விட்டாராம். இதனால் குடும்பத்தில் பிரச்சனை. அதற்கு வழி தேடி வருகிறார்கள். இப்படி பல விடயங்கள் நாம் வாழும் சமூகத்தில் தினமும். நாங்க என்னடான்னா.. கடவுளைப் பழிக்க என்று மூடத்தனமா சமூகத்தை அணுகிக் கொண்டிருக்கிறம். புகலிடத்தில் படிப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை. அங்கு எல்லாம் தெளிவாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அப்படி இருந்தும் அங்கு கூட பிரச்சனைகள் பல ரூபத்தில். ஊரில இருந்து இங்கு வருபவர்களே இப்படியான இக்கட்டில் அடிப்படை பாலியல் அறிவின்றி வாழ்வது அதிகம். இவர்கள் குடும்பக்கட்டுப்பாடு முறை அறிவின்றி, பாலியல் தொந்தரவுகளுடன்.. மற்றும் பிறப்புரிமை நோய்த்தாக்கமுள்ள குழந்தைகள் என்று சிரமப்படுவதை காணக் கூடியதாக உள்ளது. 

இங்கு கடவுளை முன்னிறுத்தவல்ல எமது வாதம். சிலர் அறியாமல் புரியாமல் விடயங்களை அணுகுவதையும்.. விடயங்களை அணுகும் போது வெறும் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுவதையும் செய்யாமல்.. தேவையான சீர்திருத்தங்களையும் முன்மொழியுங்கள்..! அதுதான் சமூகத்துக்குப் பயன்படும். கடவுள் என்ற எண்ணக் கோட்பாட்டை அழிப்பது அல்லது சீர்குலைப்பதல்ல முக்கியம். அந்த எண்ணக் கோட்பாட்டை அழிக்கும் போது அல்லது சீர்குலைக்கும் போது சமூகம் அடையும் நிலை என்ன என்பதையும் சிந்தியுங்கள்..! அதற்கேற்ப சமூகத்தை தயார்படுத்த வழிகாட்டுங்கள்.

=================================================
வாசகர் பின்னூட்டல் 5:

"ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமக" என்றும் மந்திரம் இருக்கிறது.
இதற்கும் ஒரு தாய்க்கும் பல தந்தைகளுக்கும் பிறந்த சூத்திரன் என்றுதான் அர்த்தம்.

இதை உங்களுக்கு பார்ப்பணன் ஒருவன்தான் கருத்தோடு சொல்லி வைத்தானா..??? சூத்திரரும் ஆரியர்தானுங்கோ....!! அவர்களும் சமஸ்கிர்தம் படிப்பவர்கள்தான்...
"ஏக" எண்றால் ஒண்று எண்று மட்டும் தான் என்பது இல்லை அது முதலில்என்பதுக்கும் வரும்... (( சமஸ்கிருத விசயம் அது)) "பகு" என்பது பின்னர் எண்று அர்த்தம் வரும்... அதிலும் சத்சூத்திராய என்பது " ஆசிரியர்"
அதாவது " முதலில் தாய்க்கும் பின்னர் தந்தை குருவிற்கு வணக்கம்" என்பதுதான் கருத்து.

=================================================
வாசகர் பின்னூட்டல் 6:

"ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ரூதீயோ அக்னிஷ்டேபதி:
துரீயஸ்தே மனுஷ்யஜா:

திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக சோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தால், இரண்டவதகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தால், முன்றாவதாக அக்னிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள், நான்கவதகத்தான் இப்பொழுது அருகில் இருக்கும் மணமகனுக்கு மனைவியாகிறாள். மணமகள் இதற்குமுன் மூன்று கடவுள்களுக்கும் மனைவியாக இருந்த பின்புதான், நான்காவதாக மணமகனை மணக்கிறாள் என்பது விளக்கமாகும்.

ஆனால் இதன் உண்மையான அர்த்தம் எல்லாருக்கும் புரிவது இல்லை. பெண் குழந்தை பிறந்ததில் இருந்து திருமணம் வரை இருக்கும் காலத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்கிறார்கள். முதல் பாகத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவர் ஸோமன். இது சந்திரனைக் குறிக்கும். சந்திரன் குளிர்ச்சியும் மகிஷ்ச்சியும் அளிப்பவன். தேவர்கள் பலசாலியாக இருப்பதற்கு எப்படிச் சந்திரனின் அருள் தேவையோ அது போல பூமி வளம் பெறுவதற்கும் சந்திரனின் அருள் தேவை. அவன் அருளால் உலக ஆரோக்கியத்திற்கு உகந்த வகையில் பருவங்கள் உருவாகிறது. பூமி, வலுவும் வளமும் பெறுகிறது. அவன் அருளால் பெண்ணின் குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாகவும், வளம் பொருந்தியதாகவும் இருக்கும். இதற்குச் சந்திரனின் அருள் தேவை. மேலும் ஆயுர்வேத முறைப்படியும், சோமம் என்றால் "கபம்" என்றும் ஒரு பொருள் உண்டு. பிறந்த குழந்தைக்கு இருக்கும் அதிகக் கபத்தினால் தொல்லைகள் கொடுக்காமல் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவன் ஸோமன். மேலும் குழந்தை பிறந்து சிலவருடங்கள் வரை தாயின் கண்காணிப்பில் இருக்கும். தாயின் மென்மையான அணுகுமுறையைக் கூட ஸோமனின் உதாரணத்துக்குச் சொல்லலாம்.

வளர்கையில் பெண்ணின் குணமும், குரலும், மாறி அழகு அதிகரிக்கிறது. பெண் கனவு காண ஆரம்பிக்கிறாள். இதில் இருந்து அவளைக் காத்து நல்வழிக்குத் திருப்பும் பொறுப்பு கந்தர்வர்களுடையது. அதாவது தாய், தந்தை இருவரும் சேர்ந்து பெண்ணைக் கண்காணிக்கிறார்கள். அவளுடைய அழகுக்குக் காரணனான கபத்தை மட்டுப் படுத்தி அவளைத் தன்னிலை பெறச் செய்வது கந்தர்வர்கள் பொறுப்பு. அழகும், பருவமும் சேர்ந்து விட்டால் பின்னால் ஏற்படும் உணர்வுகளுக்கும் அவளுடைய துணை தேடும் நினைவுகளுக்கும் காரணம் அக்னி. இந்தச் சமயத்தில் தான் பெண் அந்த அக்னியைப் போல இருக்க வேண்டும். அவள் நினைவுகளும், கனவுகளும் அவளைச் சுட்டுப் பொசுக்காமல் அவளைப் பாதுகாப்பவன் அக்னி. அந்தப் பாதுகாப்பு உணர்வு அவளுக்குத் தோன்றக் காரணமாக இருப்பவன் அக்னி. ஏனென்றால் சிருஷ்டியின் மூலமே பெண்ணால்தான். தன்னிச்சையாகச் செயல் படும் தகுதி அவளுக்கு இருந்தாலும் அவள் ஜாக்கிரதையாகத் தன் குடும்பம், சமூகம் என்ற உணர்வுகளோடு ஆரோக்கியமான சிந்தனைகளோடு செயல் படுவதற்குக் காரணம் அக்னி.

பெண்ணினம் காப்பாற்றப் பட்டால் அத்தனை தர்மங்களும் காப்பாற்றப் படும். ஆகவே திருமணம் ஆகும் வரை அவளைக் காக்கும் பொறுப்பை அக்னி ஏற்றுக் கொண்டு மணமகனிடம் மணப் பெண்ணை ஒப்படைக்கிறார். ஆகவே தான் திருமணங்கள் அக்னி சாட்சியாகவும் நடைபெறுகிறது. மணமகன், மணமகள் இருவரும் சேர்ந்து ஸோமன், கந்தர்வன், அக்னி இவர்கள் மூவருக்கும் முறைப்படி அவர்களுக்குப் பூஜை செய்து வணங்கி வழி அனுப்புவார்கள். முறையே சந்திரனுக்குப் பிடித்த பழத்தை ஒரு குழந்தைக்கும், கந்தர்வனுக்கு வேண்டிய ஆடை, அலங்கரம், வாசனைத் திரவியம் போன்றவைகளுக்கு மணமகன், மணமகள் ஆடைகளில் இருந்து நூல் எடுத்தும், அக்னிக்குப் பிரியமான நெய்யும் கொடுத்து வழி அனுப்புவார்கள். இதில் அவர்கள் இதுவரை செய்த தவறுகளை மன்னிக்கவும், மேலும் இனித் தவறு செய்யாமல் இருக்கவும் இருவரும் வேண்டும் வேண்டுதலும் இருக்கும். அக்னி பரிசுத்தமானது. அவன் பாதுகாப்பில் இருந்த பெண்ணும் சுத்தமானவள். அப்பழுக்கற்றவள். ஆகையால் நாம் சந்தேகமே இல்லாமல் வேதங்களும் மந்திரங்களும் கூறும் உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

-------------------------------------------------------------------------------

### திருமணத்தில் இறுதியாக சொல்லப்படும் மந்திரம் ###

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”

“கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லுவதோடு,  தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டுகிறார் புரோகிதர். சமிக்ஞை சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பலரும் அதே போல கையை உயர்த்தி  விரலை ஆட்டி “கெட்டி மேளம் , கெட்டி மேளம்” என்கின்றனர். அதோடு இருக்கைகளை விட்டு எழுந்து பூவும் அட்சதையும் போடத் தயாராகின்றனர்.

இந்த மந்திரம் எந்த ஒரு தேவனையோ, கடவுளையோ புகழ்ந்தோ, அவர்களிடம் விண்ணப்பமாக அமைந்ததோ இல்லை.  இந்த மந்திரம் மணமகன்  தன்னுடைய வாழ்க்கையில் மனைவி எந்த அளவுக்கு இன்றியமையாதவள் என்பதை உணர்ந்த நிலையை வெளிப்படுத்தும் விதமாக, மனைவியின் மேன்மையை போற்றி அவள் பல்லாண்டு வாழ வாழ்த்தும் பாவாக அமைந்துள்ளது.  இந்திய சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் கோட்பாட்டை இந்த மந்திரம் சொல்கிறது.
திருமணத்தின் போது மணமகன்,  தன வாழ்வில் மனைவியின் முக்கியத்துவத்தை உணரந்தவனாக, இவ்வளவு சிறப்புகளுடைய  என வாழ்க்கை துணைவியே நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் என்பதை சொல்லும் மந்திரமே இந்த “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா…. !”

மம ஜீவன ஹேதுனா – என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி  இருப்பவளே

(மம -என்னுடைய, ஜீவன – வாழ்க்கையில், ஹேதுனா-  இன்றியமையாத(வளே)

மாங்கல்யம் தந்துனானே– இந்த மங்கல சாட்சியாக
கண்டே பத்னாமி –  உன்  கழுத்தை சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் )

சுபாகே– மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே 

த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!
(த்வம் -நீ, சஞ்சீவ- வாழ்க , சரத – ஆண்டு ,  சதம் – நூறு) 

இந்த மந்திரம் மனித வாழ்க்கையின் அடிப்படையை உணர்த்தும் பகுத்தறிவு கோட்பாடாகும் .  இந்த மந்திரத்தை வெறுமனே சொல்வதோடு நில்லாமல், இந்த மந்திரத்தின் பொருளை தெரிந்து  கொள்வதோடு நிறுத்தாமல், இந்த மந்திரத்தின் உண்மையை மனதில் உணர்ந்தவன், தன் மனைவி தன் வாழ்க்கையில் எந்தளவுக்கு இன்றியமையாதவள் என்பதை அறிந்து கொண்டவனின் வாழ்க்கை ஓடம் சிக்கி சிதறாமல் காப்பாற்றப் படும். 

இந்த மந்திரத்தை கணவன்,  திருமண நாளன்று மட்டும் சொல்லாமல் ஒவ்வொரு நாளும், காலையில் எழுந்தவுடன்  தன் மனைவியிடம்  சொல்வது இன்னும் சிறப்பாகும்.

தன்னுடைய உடல் பொருள் ஆவி உள்ளிட்ட அனைத்தையும் தனக்கு வழங்கிய,   தன் வாழ்க்கையில் இன்றியமையாதவ்ளாகக் கிடைத்த மனைவியின் உறவைக் குறிக்கும் மாங்கலயத்தை தினமும் தொட்டுக்கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டியது,  கணவன் செய்ய வேண்டிய செயலே என்றால் அது மிகையல்ல !

### இதற்க்கும் விமர்சனம் செய்து இருப்பார்கள். நல்ல காலம் மறந்து விட்டார்கள் போல ###

அன்பு சகோதரர்களே!
உங்களுக்கு மதங்களை விமர்சிக்க உரிமை உண்டு. ஆனால் பொய்யாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

Thursday, 23 April 2015

ஜாதியை எதிர்க்கும் பகவத் கீதை

திறந்த மனதோடு இக்கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்.அன்பே சிவம்.

இந்திய சமுதாயத்தில்வேரூன்றி இருக்கும் ஜாதி கொள்கையை, அறியாதவர்கள் இந்து சமயத்தில்விளக்கப்பட்டிருக்கும் ‘வர்ணா’வோடு ஒப்பிடுகின்றனர். அதை தவறு என்று எடுத்துரைப்பது ஒவ்வோர்இந்துக்களின் கடமையாகும்.
அந்த வகையில் இன்றுநாம் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

Tuesday, 14 April 2015

சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள் [நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!] (மூன்றாம் பாகம்)

சோமாலியா என்ற பெயரைக் கேட்டவுடன் பலர் முகத்தை சுழிப்பார்கள். கடும்போக்கு தமிழினவாதிகள் கூட, பழந்தமிழன் பெருமையை சோமாலியாவுடன் இணைத்துப் பார்க்க விரும்ப மாட்டார்கள். சோமாலியா என்றால், "தினம் தினம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும், ஆப்பிரிக்க மக்களின் நாடு," என்ற வல்லாதிக்க பிரச்சார விதிகளுக்கு உட்பட்டு தான், தமிழனின் பெருமை பேசப்படுகின்றது. இதனால் தமிழன், தனது முன்னோர்கள் வாழ்ந்த ஆப்பிரிக்க தாயகத்தை மறக்க விரும்புகின்றான். அதற்குப் பதிலாக, "குமரி கண்டம்" என்ற கற்பனையான தாயகத்தை, தானே உருவாக்கிக் கொள்கிறான். "தனது சொந்த தாய் ஏழையாக இருப்பதால்", அவளை "அம்மா" என்று அழைக்க விரும்பாத பிள்ளை, இன்னொரு கற்பனைத் தாயை மனதில் வரித்துக் கொள்வது போன்றது இது. தங்களை ஆப்பிரிக்காவுடன் இனங் காண விரும்பாத தன்மை, தமிழின வாதிகளுக்கு மட்டுமே உரிய குறைபாடு அல்ல. தூய ஆரிய பூர்வீகத்தை புனைவதற்காக, சிங்கள இனவாதிகள் விஜயனின் வருகையுடன் தமது வரலாற்றை தொடங்குகின்றனர். ஒரு காலத்தில், இந்திய உப கண்டம் முழுவதும், திராவிட இன மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் மூதாதையர் ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தனர். அவர்களது தாயகம், சஹாரா பாலைவனத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது. அங்கிருந்து அரேபியா சென்று, ஈரான் வழியாக இந்தியா வந்து சேர்ந்தார்கள். புராதன ஆப்பிரிக்க-திராவிட இன மக்கள் தங்கி வாழ்ந்த இடங்களில் விட்டுச் சென்ற சாட்சியங்களின் அடிப்படையில், இந்தக் கட்டுரைத் தொடர் எழுதப் படுகின்றது. 

அமெரிக்க நாடாளுமன்ற பெண் எம்.பி.க்கு இந்து முறைப்படி திருமணம்!

அமெரிக்க நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் இந்து முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் 50வது மாகாணம் ஹவாய் தீவுகள். இந்த மாகாணத்துக்கான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவர் 33 வயதாகும் துளசி கப்பார்ட். இவருக்கும் அவருடைய காதலரான 26 வயதாகும் ஆப்ரகாம் வில்லியம்ஸுக்கும் நேற்று முன்தினம் ஹவாய் தீவில் மிகவும் எளிமையான முறையில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. வேதங்கள் முழங்க இவர்களுடைய திருமணத்தில் அனைவருக்கும் சைவ உணவே பரிமாறப்பட்டது.

துளசி கப்பார்ட் குடும்பத் தினரின் இந்து கலாசாரம் மிகவும் பிரபலமான ஒன்று. ஹவாய் பகுதியைச் சேர்ந்த அமெரிக்க தம்பதி கரோல் மற்றும் மைக் கப்பார்ட். இவர்களுக்கு 5 குழந்தைகள் பிறந்தன. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த கப்பார்ட் தம்பதியினர், அமெரிக்காவில் பிரபலமடைந்த

Monday, 13 April 2015

சமைக்கும் முறை தந்த ஆச்சர்யம்.

அந்தப்பெண்மணியை வியப்படைய வைத்த அடுத்த விஷயம் நமது குடும்பப்பெண்கள் வீட்டி சமைக்கும் முறை. குறிப்பாக ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டி அதை வழித்தெடுப்பதும், மொத்த வீட்டையும் கூட்டுவதும், பின் கொல்லைப் புறத்தில் உள்ள கிணற்றின் சகடையில் நீர் இறைப்பதும், துணி துவைப்பதும் என்கின்ற அடுக்கடுக்கான செயல்பாடுகள்...இவை ஒவ்வொன்றுமே ஒரு வித உடற்பயிற்சி.
துணி துவைப்பது கைக்கும் விரல்களுக்கும் பயிற்சி என்றால், தண்ணீர் இழுப்பது மூச்சுப்பயிற்சியாக அமைகிறது.வீடு கூட்டுவது இடுப்புக்கு பயிற்சியளிக்கிறது.இவ்வளவையும் செய்துவிட்டு இறுதியில் பூஜை அறையில் நெய்விளக்கேற்றி வழிபடுவது என்பதுதான் உச்சக்கட்டம்.

இந்திய பாரம்பரியம்-கோலம் தந்த ஆச்சர்யம்

வெளிநாட்டைச் சேர்ந்தவர் அந்தப்பெண்மணி.உலகைச்சுற்றி வருவதும், பல நாடு, பல மொழி பலவித கலாச்சாரங்களை அறிந்து கொள்வதும் அவருக்கு விருப்பமான செயல். இந்தியா வந்த அந்த பெண்மணி நமது நாட்டின் பன்மொழி கலாச்சாரத்தைப் பார்த்து முதலில் அதிர்ந்தார்.பிறகு ஆச்சர்யப்பட்டார். அனைத்திற்கும் மேலாக இந்திய மண்ணின் ஆன்மீகச் சிறப்பை அவரால் நுட்பமாகவே உணர முடிந்தது. பலவித புராணங்கள், இதிகாசங்கள் என்று ஏராளமான இலக்கியங்கள் மண்டிக்கிடப்பதை பார்த்தவருக்குள் ஒரு உண்மை தெளிவாகப்புலனாயிற்று.

எவ்வளவு நீண்ட ஒரு பாரம்பரியம் இருந்திருந்தால் இது சாத்தியப்பட்டிருக்கும் என்பதுதான் அது!நீண்ட பாரம்பரியம் உள்ள ஓர் இடத்தில் நிச்சயம் ஒரு நல்ல தெளிவிருக்கும்.ஏராளமான சான்றோர் பெருமக்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் தோன்றி மறைந்திருப்பார்கள்.அவர்களின் வாழ்க்கைப்பதிவுகள் வழிகாட்டிகளாக இருக்கும்.

சுருக்கமாக சொல்லப்போனால், கிட்டத்தட்ட முதல் மனிதன் வாழ்ந்த அந்த நாள் வரை கூட இவர்களைக்கொண்டே எட்டிப்பார்க்க நம்மால் இயலக்கூடும்.

Wednesday, 8 April 2015

தமிழர் வாழும் நாடுகள் - இந்தோனேசியாவில் தமிழர்கள்

இந்தோனேசியாவில் தமிழர்கள் 

சாவகம் (ஜாவா), சுமத்திரா, பாலி, காலிமன்தான் (போர்னியோ), குலவேசி (செலிபிஸ்), இரியன் ஜயா (நீயூகினி) போன்ற 13,700 தீவுகள் அடங்கிய பகுதிகளைத்தான் இன்று இந்தோனேசியா என அழைக்கிறார்கள். இத்தீவுக் கூட்டங்கள் மலேயா தீபகற்பத்திலிருந்து நீயூகினி வரை பரவிக் கிடக்கின்றன. இரியன் ஜயாவின் கிழக்குப் பகுதியிலும், வட போர்னியாவின் பகுதிகளாக இருக்கும் சரவாக், சபா எல்லைகளிலும் மட்டும்தான் இந்தோனேசியாவின் நில எல்லை அமைப்புகளைப் பார்க்கலாம். தென்žனக் கடலும் பசிபிக் பெருங்கடலும் இந்து மாக்கடலும் 74,101 சதுர மைல்கள் அடங்கிய இத்தீவுக் கூட்டங்களைச் சுற்றிலும் அமைந்துள்ளன.

தமிழர் குடியேறிய வரலாறு :

சங்க கால நூல்களில் இந்தோனேசியாவைப் பற்றிய சில செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மொலுக்காஸ் போன்ற தீவுப் பகுதிகள் முந்நீர்ப் பழந்தீவு என இந்நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இத்தீவுகளைப் பன்னிராயிரம் என மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகின்றது. தமிழர்கள் ஜாவாவைச் சாவகம், சாவகத் தீபம், யவத் தீபம் என்றும், சுமத்திராவை, சிரிவிசயம், சொர்ணதீபம் என்றும் அழைத்து வந்தனர். பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளிலிருந்து, தமிழ் வணிகர்களும், தமிழ்ப் பெருமக்களும் சங்க

முன்னோர்கள் பெண்களுக்கு மெட்டி அணிவித்தன் ரகசியம்.!

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்..
ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்
பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும்.

Monday, 6 April 2015

அமெரிக்காவில் மிக வேகமாக வளரும் மதமாக இந்து மதம்

....அமெரிக்காவில் மிக வேகமாக வளரும் மதமாக இந்து மதம் உள்ளது .1990 முதல் 2001 வரை 237 சதவீதம் அதிகரித்துள்ளது.(1990 இல் ஹிந்துக்களின் எண்ணிக்கை 227,000 .........2004 இல் அமெரிக்க இந்துக்களின் எண்ணிக்கை 1,081,051 (2008இல் 1500000)....[குறிப்பு;இதில் அமெரிக்காவில் அதிக அளவில் உள்ள "ஹரே கிருஷ்ணா" இயக்கத்தினரின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை].........மேலும் விரைவாக வளரும் மற்ற மதங்களின் வளர்ச்சி விகிதம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது...................ஆதாரம்www.adherents.com

1) Deity (Deist) தேயிஸ்ட் (இது தாமஸ் பெயின் அவர்கள் ஆதரித்த மதம், யூதர்களது பழைய ஏற்பாடு, கிறிஸ்துவர்களது புதிய ஏற்பாடு இரண்டையும் நிராகரிக்கும் மதம். ஏறத்தாழ இந்து தத்துவங்களை உள்ளடக்கியது) +717%


2) Sikhism சீக்கிய மதம் +338%


3) New Age புது யுகம் என்ற பெயரில் இந்து தத்துவங்களை பின்பற்றும் நவ பாகன் மதம் +240%


4) Hinduism இந்துமதம் +237%


5) Baha'i பஹாய் மதம் +200%


6) Buddhism புத்தமதம் +170%

7) Native American Religion அமெரிக்க பழங்குடியினர் மதம் +119%


8) Nonreligious/Secular நாத்திகவாதம் +110%


பிறகுதான் மற்ற மதங்கள் வருகின்ற

Wednesday, 1 April 2015

விழாக்களின் போதும் திருவிழாகளின் போதும் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?



Photo
Photo
விழாக்களின் சிறப்பே அதன் அலங்காரங்கள் எனலாம். விழாக்களின்போது அலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்ற பொருள் தொன்றுதொட்டு ஒரே பொருளாக இருப்பதற்குக் காரணம் என்ன?

காரணமில்லாமல் காரியமா? பழங்காலத்திலிருந்தே தோரணம் கட்டுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது தோரணம் என்றால் அது ‘மாவிலைத் தோரணம்’ என்றிருப்பதற்கு உரிய காரணம் என்ன?

Friday, 6 March 2015

ஜாதி ஒழிப்பில் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி - தந்தை பெரியார்

ம்பேத்கர் உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை, என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய

Wednesday, 4 March 2015

தமிழர் பண்பாட்டைக் கொச்சைப்படுத்தும் இஸ்லாமிய பதிவர்கள்


வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
இப்போதெல்லாம் இணையப்பக்கம் எட்டிப் பார்க்கவே சரியாக நேரம் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் மெயில்களை பார்ப்பதோடு காலம்கழிகிறது. சரி விடயத்திற்கு வருவோம்.
இந்தப் பதிவானது இஸ்லாமிய சகோதரர் பலருக்கு கடுப்பை ஏற்றும் ஆனால் ஒரு முறை ஆறுதலாக படித்த பின்னர்

Sunday, 1 March 2015

புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை


hindu-symbol-aumசமயம் என்பது ஆன்மிகம் சார்ந்ததுசமூகம் என்பது வாழ்வியல் சார்ந்ததுஇரண்டுமே மக்களுக்கு அவசியமானவையாக இருப்பதால் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளனசமயம் என்பதில் ஆன்மிகம் தவிர ஏதும் இல்லைசமூகத்தில் முக்கியமாக ஆன்மிகத் தூண்டுதலுக்காகவும் அடுத்தபடியாக ஒற்றுமை உணர்வை நிலைபெறச் செய்யவும் தனி அடையாளத்திற்காகவும் வழிபாடுதிருவிழாவழிபாட்டுத் தலம் சடங்குகள் ஆசாரங்கள் என்பவை சமயத்தின் பெயரால் கடைப்பிடிக்கப் பட்டாலும்கலாசாரம்பொருளியல்சமூக நடைமுறைஅதிகாரம்கட்டமைப்பு போன்றவையே சமூகம் சார்ந்த முன்னுரிமைகளாக உள்ளனசமயமும் சமூகமும் பின்னிப் பிணைந்து கிடப்பதால்தான் இரண்டையும் ஒன்றாகக் காணும் மயக்கம் ஏற்படுகிறதுகாலப் போக்கில் சமுகப் பழக்க வழக்கங்களில்முக்கியமாக மேலாதிக்க விழைவின் காரணமாக வலியுறுத்தப்படும் ஏற்பாடுகளும் எளிதில் அங்கீகாரம் கிட்ட வேண்டும் என்பதற்காக சமயத்தின் பெயரால் கட்டாயப் படுத்தப்பட்டுநடைமுறைக்கு வந்துஅதன் விளைவாகச் சமயம் அந்தப் பழியைச் சுமக்க நேரிடுகிறது (இதுபற்றி நான் ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்).

Wednesday, 18 February 2015

தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி.

பதிவு20:பொங்கல் கொண்டாட்டம்- தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி. 
ன்புள்ள தமிழ் வலைப்பதிவு நண்பர்களே,
நாம் சாதி,மத,சமய மற்றும் இன்னபிற கொள்கைகளில் மாறுபட்டு இருந்தாலும் தமிழ், தமிழர் என்பதில் ஒரே புள்ளியில் வந்து நிற்கிறோம். சாதி,மத,சமய மற்றும் பல கருத்து வேறுபாடுகள் மனித சமுதாயம் உள்ள வரை இருக்கப்போவது நிச்சயம். இந்த வேறுபாடுகள் முற்றும் அழிந்தால் நாம் அனைவரும் நிச்சயம் சந்தோசப்படுவோம். அதில் சந்தேகமே இல்லை.
நமக்குள் கருத்து வேறுபாடு கொண்ட இந்த விசயங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, நாம் அனைவரும் இணைந்து நிற்கும் இந்த தமிழ், தமிழர் என்ற புள்ளியில் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.

Saturday, 14 February 2015

காலில் விழுவதும் கட்டிப்பிடிப்பதும் - கலாச்சாரம்.. !

எனக்கு நீண்ட நாளாகவே ஒரு சந்தேகம். மனித உடலிலே ஏனைய பாகங்களை போலவே கால் என்பதும்  ஒரு உறுப்பு.  அப்பிடி இருக்க காலில் விழுவதென்பது எதை குறிக்கும்!!!  அடிமை தனமா!! 

ஆசி பெறுவதற்காக காலில் விழுவார்கள்! என்று  தான் நான் அறிந்திருக்கிறேன், பொதுவான கருத்தும் கூட.  ஆனால் அதுவே இன்று ஆதிக்க சக்திகளின் அடையாள சின்னமாக மாறிவிட்டது.  ஒருவருக்கு தமது அதி தீவிர விசுவாசத்தை காட்டுவதற்காய்  அவரின் காலில் விழும் கலாச்சாரம் நம்மவர்களில் உண்டு. இதுவும் ஒரு சுயநலம் தான். அனேகமாக இந்த பழக்கம் தமிழர்களிடம் தான் அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

மங்காத்தாவும், அபிசேக ஆராதனைகளும்.

ஈழ பிரச்சனையாக இருந்தாலும் சரி, தென்னிந்திய சினிமாவாக இருந்தாலும் சரி இல்லை இன்ன பிற  விடயங்களாக இருந்தாலும் சரி, மொழியால் மட்டுமல்ல உணர்வுகளாலும் கூட  ஈழ தமிழர்களும், தமிழக தமிழர்களும்  ஒன்றுபட்டவர்கள் தான் என்பதை என்றைக்கும் அவர் தம்  செயற்ப்பாடுகள்  மூலம் உணர்த்தி  நிற்ப்பார்கள். 

அந்த வகையில் சமீபத்தில் மங்காத்தா  திரைப்படம் ஈழத்திலே  உள்ள திரையரங்கில் ரிலீசான போது அஜித்தின் ரசிகர்கள் தமிழகத்தை போல பெருவாரியாக கொண்டாடினார்கள்.

கல்யாணமும் கலாச்சாரமும்... !

என்ன தான் கால ஓட்டம்  வேகமாக சுழன்றாலும், நம் வாழும் சூழலிலே நவீனத்துவம் புகுத்தப்பட்டாலும், அநேக  தருணங்களில் சம்பிரதாயம் பழக்கவழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுபவர்களாகவே  காணப்படுகிறோம். ஒரு விதத்தில் அவையெல்லாம் நம் மரபோடு ஒன்றித்துவிட்டது எனலாம்.

 சில சமயங்களிலே நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்களை  எண்ணும்  போது வியப்பாகவும்  வேடிக்கையாகவும்  இருக்கும்,  இன்னும் சில வேளைகளில்  "என்னடா இந்த மூட நம்பிக்கைகளையெல்லாம் பின்பற்றியிருக்கிறார்களே!  " என்பது போல எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும்.  ஆனால், நாம் பல சமயங்களில்  நம்

ஜி ரிவியும் ,சிறீதரனும் என் கேள்வியும்..!

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் பெரும்பாலான நாடுகளில் அனைத்து தமிழர்களாலும் அறியப்பட்ட தொலைக்காட்சி தான் இந்த ஜி ரிவி. அரபு நாடுகளிலும் இது தன் தேவையை தொடருகிறது என்று நினைக்கிறேன். 

பல தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகள் இருந்தும், கட்டணம் அறவிடாது (நன்கொடைகள் தவிர) சேவையை தொடரும் தொலைக்காட்சியும் இது ஒன்று என்று தான் நினைக்கிறேன். அதே போல தென்னிந்திய கலை, களியாட்ட நிகழ்வுகளை அதிகளவில் ஒளிபரப்புவதில்லை. மாறாக புலம்பெயர் தமிழ் சமூகத்தில்- இளையோர்களிடையே தமிழை ஊக்குவிப்பதில் பாலமாக செயற்பட்டு வருகிறது. அத்துடன்  ஈழம் சம்மந்தப்பட்ட அரசியல் நிகழ்வுகளை தொகுத்து

தமிழேண்டா ..!

பொதுவாகவே மனிதர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை "எல்லாம்  இந்த ஒரு சான் வயிற்றுக்கு தானே..!" என்று ஒற்றை வரியில் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இந்த வரியை சரியாக, காலாகாலமாக கடைப்பிடித்து வருகிற பெருமை தமிழனுக்கு மட்டும் தான் உண்டு.  எப்பூடி .... 

*உலகிலே ஒப்பீட்டளவில் தமது  அன்றாட உணவை தயார் செய்வதற்காக அதிகளவு நேரத்தை செலவழிப்பவர்கள் தமிழர்களாக தான் இருப்பார்கள். இந்த விஷயத்தில் யாராலும் தமிழர்களை அடிச்சுக்க முடியாது. தினமும் மூன்று நேரம் அவியல், பொரியல் ,வறுவல்..  இதனால் தானோ என்னமோ