Sunday 20 December 2015

பெர்முடா முக்கோண வலையமும் திருமூலரின் அறிவியலும்



ஆதித்தன் உன்னில் ஆன முக்கோணத்தில்
சோதித்து இலங்கும் நற்சூரியன் நாலாம்
ஏதம் உறும் கேணி சூரியன் எட்டில்
சோதிதனில் நீட்டில் கோட்சம் தானே”
(தி.ம 1980)

பொருள்:
-------------
கதிரவன் தன்னுல் விளங்கும் முக்கோண சக்கிரமான மூலாதாரத்தில் நின்று நல்ல கதிரவனாய் ஒளி செய்து கொண்டிருப்பான். எல்லாத்தையும் கடந்து எவன் ஒருவன் இந்த மூலாதார முக்கோண சக்கரத்தை அடைகிறானோ அவனே மோட்சம் பெருகிறான்.
அதாவது சூரியனில் தோண்றும் முக்கோணதினால்தான் கிரகங்கள் எரியா வண்ணம் சீரான வெப்பத்தை பெறுகிறது. அது போல எவன் ஒருவன் தனது 12 வினைகளை துறந்து முழுமை பெருகிறானோ அவனே இறைவனடி சேர முடியும் என்பதாம்.

NASA என்ன சொல்லுகிறது?
----------------------------------------
NASA சூரியனில் அவ்வப்போது முக்கோணம் தோன்றி மறைவதை கண்டறிந்துள்ளது. அந்த முக்கோணத்தினால்தான் காந்த சக்தி உற்பத்தி செய்யப்பட்டு கிரகங்களுக்கு Magnetic Force கிடைக்கப்பெற்று கிரகங்கள் சுழலுகிறது. இதன் சாட்சியாக அணைத்து கிரகங்களிலும் முக்கோண வடிவிலான ஒரு புதிர் நிச்சயம் இருக்கும்.

பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle):
----------------------------------------
ஏன் பூமியில் கூட பெர்முடா முக்கோணம் உள்ளது பூமியில் உள்ள மற்ற பாகங்களை விட இந்த இடத்தி புவி காந்த ஈர்ப்பு அதிகம் உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆதலால்தான் அந்த குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும் போது ரேடார்கள் வேலை செய்வதில்லை.