Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Sunday, 25 October 2015

இந்து வேதங்கள் முகமதுவை ஏற்க்கின்றனவா?

 இந்து வேதங்கள் முகமதுவை ஏற்க்கின்றனவா?

டாக்டர் ஜாகிர் நாயக்கின் ஆவேசமான "வேதங்களில் முகமது" என்ற பேச்சை கேட்கும் போது, நாம் "உண்மையில் வேதங்களில் முகமது  சொல்லபட்டிருகிறதா?" என்று ஆச்சர்யமடைந்தேன்.  இந்துக்களுக்கு உரிய புனிதமான  4 வேதங்களும், உபநிடதங்களும் முகமத் நபியை இறுதி தூதர், இறைவனிடமிருந்து வரும் மனிதகுலத்திற்கான கடைசி தூதர் என்று பறை சாற்றுகின்றன என்று டாக்டர் ஜாகிர் அடித்து சொல்கிறார். அப்படியா என்று யோசித்தேன். 


அப்புறம் ஏன் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வேதங்களை எழுதிய, எடுத்துக்கூறிய  ஞானிகள் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை? அவர்கள் அறியவில்லையா? அல்லது எல்லாம் வல்ல அல்லாவின் ஏற்பாடுகளினால் தன் பெரும் பக்தனான  டாக்டர் ஜாகிர் நாயக் மூலம் அறியாமையில் காணப்படும் இந்துகளுக்கு இதை வெளிப்படுத்த விளைந்த திட்டமா இது? என்று நிறைய கேள்விகள் என்மனதில் எழுந்தன. அவர் பிரசங்கத்தை உண்ணிப்போடு பார்த்த போது, அதில் விடை கிடைத்தது.   

உடனடியாக நான் வேத நூல்களை திறந்து, டாக்டர் ஜாகிர்  கூறிய அனைத்தையும் சரி பார்த்தேன்.  டாக்டர் ஜாகிர் கூறியது மாதிரி இல்லாமல் வேறு விதமாக வேதங்கள் இருந்ததை கண்டு மகிழ்ச்சியுற்றேன்.

வேதங்களில் காணப்பட்ட  "Aham iti (அஹம் இட்டி)"  என்ற சொல்லை  "அஹமது (Ahamed) என்று மொழி பெயர்த்து விட்டார் ஜாகீர் நாயக்.
உதாரணம்: "AHAM ITI" PANTHA ADHO DIVO YEBHIRVYASHVARMAARAYAH UTA SHROSHANTU NO BHUVAH
[SAAMVEDA MANTRA 172 (2/6/8)] 

வேதங்களில் அல்லாஹ் என்ற சொல் காணப்படுகின்றது என்று சொல்லும் இவர்கள், அதே வேதங்களில் முகமதுதான் இறைவனின் இறுதி தூதர் என்றும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வருவார் என்று கூறப்படவில்லையே...  அப்படி ஞான சக்தியின் மூலம் அறிந்து கொள்ள முடியாத ரிஷிகளுக்கு இந்துவேதங்களை வைத்துக்கொண்டு ஜாகீர் நாயக் எப்படி அறிந்து கொண்டார்....???

இசை அமைப்புக்கு பெயர் பெற்றது சாமவேதம். அதில் காணப்பட்ட மந்திரங்களின் வகுக்கப்பட உச்சரிப்புகளை கண்டிப்பாக விதி மீறகூடாது.  சமஸ்கிருத சொல்லான வேதங்களுக்கு ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்களை கொடுக்கும், அதனை உரிய உச்சரிப்போடு ஆன்மீகவாதிகளிடமோ அல்லது வேதம் கற்ற பண்டிதர்களின் மூலம் தான் கற்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது (ஸ்வதேஸ்வதரா உபநிஷத் 6.23)
உதாரணத்திற்கு வேத மந்திரங்களின் மூன்றாவது திரட்டு  சாமவேதம். ஒரு பாசுரத்திற்கு எப்படி முறையாக  இசை அமைப்பது என்பதையும் கூறுகின்றது. 

வேதத்தில் உச்சரிப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதால்.  "aham iti - அஹம் இட்டி"  என்ற சொல்லுக்கு  கடவுள் என்று பொருள் (மொழிபெயர்ப்பு) கொண்டு இருக்குமாயின் அதை  "Ahmed - அஹ்மத்" என்று பொருள் (மொழிபெயர்ப்பு) சொல்லி இருக்க மாட்டார்.

டாக்டர் ஜாகிர் நாய்க் சொல்வது போல் வேதங்கள் முகமதுவை குறிக்கின்றது என்று வைத்துக்கொண்டாலும், வேதங்கள் முழுதும் "aham iti (அஹம் இட்டி) " என்ற சொற்சொடர்கள் நிறைந்து இருக்கிறது ஆகையால் வேதங்கள் தவறான வழியை காட்டுகின்றன அவை ஆபத்தானவை என்று இந்துக்களாகிய நாம் நம்ப வேண்டும். வேதங்களும் அக்கால மேன்மையான ரிஷிகளும் ஆன்மீகத்தில் அறிவற்றவர்கள் என்று நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். 

இதனை ஒத்துக்கொள்ளாவிட்டால் இவர் வேண்டுமென்றே  வாசகங்களை தமக்கு ஏற்ப சிதைக்கிறார்  என்று அறிவுபூர்வமாக தீர்வு செய்ய  வேண்டும்.

Monday, 5 October 2015

சாகீர் நாயக் எனும் பெயரால் அழைக்கப்படும் முட்டாள்

சாகீர் நாயக் எனும் பெயரால் அழைக்கப்படும் முட்டாள் மாமேதைக்கும் இந்துமத ஆன்மிக வாதியும் உலக அமைதிக்கும் போறாடும் ரவிசங்கர் குருஜிக்கும்  இடையில் “கடவுள் கோட்பாடு”  எனும்  தலைப்பில் நடைபெற்ற விவாதத்தை பார்த்து இருப்பீர்கள்.

இந்துமக்கள் வேதங்களில் பெரிதாக பாண்டியத்தை பெற்றவர்கள் இல்லை இதனை கருத்திக்கொண்டு பலவாறான வார்த்தைகளை திரிபுபடுத்தி  இந்துமதத்துக்கு கறை பூசுகின்றார் இந்த முட்டாள் மாமேதை.  இதனை அறியாத பைத்தியக்கார  கூட்டங்கள் விவாவதம் நடைபெற்ற நிகழ்சியை வீடியோவாக கடைகளிலும் பொது இடங்களிலும் விற்பனை செய்கின்றனர்.  இதனால் சிலர் இந்துமத நம்பிக்கையை விடுகின்றனர் அல்லது சிலர் மதம் மாறுகின்றனர்.


Thursday, 10 September 2015

ஒரு சின்ன ஒப்பீடு :- முடிந்தால் மறுத்துப் பாருங்கள் இந்து vs இஸ்லாம்


இந்து:-

நாம் சேய்யும் ஒவ்வொன்றிலும் விஞ்ஞானம் இருக்கும். உதாரணத்துக்கு தாலி அணிவதில் இருந்து வளைகாப்பு, கயிரு கட்டுதல், பெயர் சூட்டுதல், குல தெய்வ கோவிலிள் மொட்டை எடுத்தல் வரை அணைத்திலும் விஞானம் இருக்கும்.

தாலியும் மஞ்சலும் பெண்ணுக்கு கிருமி நாசினியாக செயல்பட்டு அப்பெண்ணுக்கு அறனாக விளங்கும். அப்ப வளைகாப்பு எதற்கு வெட்டி செலவா? இல்லவே இல்லை. வளைகாப்பு 7 அல்லது 9 மாசத்தில் போடுவார்கள். முறையான வளைகாப்பு பெண்ணை தரையில் அமர வைத்துதான் போடுவார்கள் அவ்வாறு அந்த பெண் நெடு நேரம் தரையில் அமரும் போது அது சிகப் பிரசவத்துகான ஆசனமாக அமைகிறது. கை நிறைய வளையல் போட்டு விடுவார்கள் அது எதர்காக? வைற்றில் இருக்கும் குழந்தைக்கு ஒரு காது அந்த தருணத்தில்தான் கேட்க ஆரம்பிக்கும் அப்போது அந்த குழந்தைக்கு நமது அன்னை நமக்காக இருக்கிறால் என்ற தைரியத்தை ஊட்டுவதர்காகவே. இறுதியாக 5 வகை சோறு கொடுப்பார்கள் பிரசவத்தின் இறுதி தருணத்தில் அணைத்து வகையிலும் அந்த பெண் சக்தி பெற வேண்டும் என்பதர்காக அதாவது ஒவ்வொரு சுவையிலும் ஒவ்வொரு சத்து நிறைந்துள்ளது. குழந்தை பிறந்த 10வது நாள் கயிறு கட்டுவார்கள் அந்த நிகழ்வின்போது அக்குழந்தைக்கு ஒரு வெள்ளை நூலில் மஞ்சலை தேய்த்து இடுப்பில் கட்டி விடுவார்கள். மஞ்சலானது அக்குழந்தையை கிருமிகள் அண்ட விடாது தற்காப்பு கவசமாக செயல்படும். குல தெய்வ கோவிலில் காது குத்தி மொட்டையிடுதல். காது குத்தப்படுவது எதர்காக என்றால் காது பகுதிகளில்தான் மூளையில் இருந்து வரும் நரம்பு மண்டலம் அதிகம் உள்ளது. அந்த நரம்பு மண்டலம் குத்தப் படுவதால் தூண்டப் படுகிறது மூளையும் சிறப்பாக செயல்படத் தொடங்கும். அது போக சொந்த பந்தங்களை ஒரு சேர பார்த்த மகிழ்ச்சியும் கிட்டும். மொட்டையடிப்பது குழந்தைக்கு முடி நன்றாக ஆரோக்கியமாக வளர உதவும்.

இஸ்லாம்:-

இஸ்லாத்தில் பெண்களை பாதுகாக்க இத்தனை சடங்குகள் உள்ளனவா? அவர்கள் பெண்களை அடிமைப் படுத்தியே வைத்துள்ளனர். அவர்களுக்கு பெண்கள் என்றால் போகப் பொருள் அவ்வளவே. இந்தியாவில் உள்ள பருவ நிலை அணைவரும் அறிந்ததே இத்தகைய கந்தக பூமியில் கருப்பு உடையில் தலையில் இருந்து பாதம் வரை பெண்களை மூடி வைப்பதில் ஏதேனும் விஞ்ஞான காரணம் உள்ளதா?

Tuesday, 8 September 2015

‪#‎இராமனின்‬ வழிவந்தவர்களே ‪#‎சோழர்கள்‬


=======================================
இன்று இராவணனின் வாரிசுகள் என்று தமிழர்களை இழிவுப்படுத்திவரும் அறிவிலிகளுக்கும், இராமனுக்கும் தமிழனுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லும் முட்டாள்களுக்கும் திரு.வினோத் பாலசந்திரன் எழுதிய பதிவு...
சோழர்கள் வம்சமும் இராமனின் வம்சமும் ஒன்றே என ஐந்து ஆதாரங்களைக்கொண்டு நிறுவுகிறார் ஆசிரியர்..
ஆதாரம் 1: பெளத்த சமய இலக்கியமான மணிமேகலை.
மணிமேகலை விழாவறைந்த கதை (1-5 பாடல்)
உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று

Monday, 7 September 2015

இந்து மதத்தின் அற்புதத்தை அறிந்து கிறிஸ்தவத்தை தூக்கி எறியும் ஜெர்மனியர்கள்!


இந்து மதமானது 1950ம் ஆண்டு இந்தியர்கள், மற்றும் 1970ல் இலங்கை தமிழ் மக்கள் இடப்பெயர்வு மூலமாக ஜெர்மனியில் காலூன்றியது. பின்னர் 1980ல் ஆப்கானிஸ்தான் சிவில் போரினாலும் சில இந்துக்கள் குடிபெயர்ந்துள்ளனர். ஜெர்மன் ஒரு மதசார்பற்ற (Secularism) நாடாகும்.
இருந்தாலும் கிறிஸ்தவத்தை ஆதரித்து காலணி ஆதிக்கத்தின் போது பல மக்களை அங்கே கிறிஸ்தவத்தை ஏறற்றுக்கொள் அல்லது சாவு என்று வன்முறையில் மதம் மாற்றியுள்னர் முந்தைய காலகட்டத்தில்!,
மக்களிடையே இது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் இந்து மத வருகையால் இந்து மதத்தின் அற்புதங்களை புரிந்து கொண்டுள்ளனர் மக்கள்.
சில சொற்பமாக இருந்த இந்து மக்கள் தொகையானது படிப்படியாக உயர்ந்து
2000ல் 90,000 ஆகவும்,
2011 ல் 1,20,000 ஆகவும் அதிகரிக்கின்றது.
இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்களின் மத புனிதப் போரை பற்றி அறிந்த ஜெர்மனியர்களுக்கு இந்து மதம் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்து மதம் இந்தியாவில் படும் பாட்டினை அறிந்த மக்கள் இந்து மதம் மற்ற மதங்களை போல புனித போரையோ, மத திணிப்பையோ மேற்கொள்ளாதது இந்து மதத்தின் பெருமையை அறிய செய்துள்ளது.
மற்ற நாட்டினரைப் போல அல்லாமல் ஜெர்மனியர்கள் கொஞ்சம் வித்தியாசாமானவர்கள். மத சுதந்திரத்தையும், அறிவியலையும் கொண்டவர்கள். 2011ம் ஆண்டு கணக்கீன்படி 5.5 மில்லியன் மக்கள் தேவாலயத்திற்கு செல்வதை கைவிட்டுள்ளனர். விவிலியம் கூறுவதில் உள்ள பல அர்த்தமற்ற கருத்துகளையும், இயேசு ஒருவரே கடவுளை அடைவதற்கான வழி என்பதையும் நம்ப மறுக்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணமாக உள்ளது இந்தியர்களின் "இந்துத்வா " கொள்கையே! அங்கே உள்ள இந்துக்கள் மூலமாக பல அறிவியல் பூர்வமான உண்மைகளை அறிந்துள்ளனர். இஸ்லாம், கிறிஸ்தவம் வன்முறையாலே தங்களது மதத்தை பரப்பியதிற்கிடையே வன்முறையில்லாத மதமாக இந்து மதம் காட்சியளிக்கின்றது.
அதற்கான காரணங்கள்
1. எப்படியும் வாழாலாம் என்பவர்களுக்கிடையே இப்படி தான் நீ வாழ வேண்டும் என்று வரைமுறை வகுக்கின்றது இந்து மதம்.
2. இந்துக்களின் கல்வி முறைகள்.
3. இந்துக்களின் தர்மம் மற்றும் வாழ்க்கை தத்துவங்கள்.
4. இந்துக்களின் மத சுதந்திரம்.
5. அறிவியல் பூர்வமான சித்தாந்தங்கள்
6. இசை, கலை, நடனம், அறிவியல், பொருளாதார முறை, அரசியல் போன்றன.
7. இந்துக்களின் மத சகிப்புத் தன்மை.
8. குடும்ப வாழ்க்கை முறை மற்றும் அன்பு செலுத்துதல்,
என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இதற்கும் மேலாக இராமாயணம், மகாபாரத இதிகாசங்களை படித்து தெரிந்து கொண்டு இந்துக்களின் ஒரு அங்கமாக இந்து மதத்தை வளர்க்கின்றனர் ஜெர்மனியர்கள். விரைவில் இந்து மதம் பரவட்டும்! .
நாமும் இந்து மதத்தை வளர்ப்போம். அனைவரும் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்\

ok

Sunday, 6 September 2015

Dr.சுனிலின் கேள்விகள் பதிலளிக்க முடியாததாக இருக்கிறது:

இந்துமத வளர்ச்சியை தடுப்பதற்காக இணையத்தளங்களில் பல வகையான பொய்களும் கட்டுக்கதைகளும் உலாவி வருகின்றன. அந்தவகையில் இப்போது கிடைக்கப்பெற்ற கேள்விகளுக்கு விடையளிக்க நாம் தயாராகியுள்ளோம். அந்த வகையில்

சுனில் எனும் பகுத்தறிவு மாமேதை கேட்ட கேள்விகள் அடைங்கிய தொகுதியை கட்டெடுத்துள்ளோம். அவர் யார் என்று தெரியாது ஆனால் அவர் கேட்ட கேள்விக்கான பதில்களை தருகின்றோம். இவ் கேள்விக்கான விடையை நண்பர்களுக்கு பகிர்ந்தும், முட்டாள் பகுத்தறிவுவாதிகளுக்கும் செருப்படி கொடுங்கல்.


இந்துமதத்தில் பல கடவுள் கொள்ளையை உடையது ஆனால் இந்துமதமோ ஓர் இறைவனை கூறுகின்றது. அதாவது

பகவத்கீதையில் ஒரு வசனம்
"நீ யாரை வழிபட்டாலும் இறுதியில் என்னையே வந்து சேருகின்றது."
என்று பரமாத்மா கூறுகின்றார்.

அதுமட்டும் இல்லாமல் ரிக் வேதத்தில்
இறைவன் ஒருவன் அவன் பல பெயர்களால் அழைக்கப்டுகின்றான்
என்ற வசனமும் உள்ளது

Thursday, 3 September 2015

இந்து தர்மத்தில் 33 கோடி தெய்வங்களா??


இந்துதர்மத்தைப் பற்றிய பல தவறான தகவல்களில் ஒன்றுதான் இந்த 33 கோடி தெய்வங்கள். இது ‘கோடி’ எனும் சொல்லுக்கு பிரம்மாண்டம் என மற்றொரு பொருள் இருப்பதை மறந்ததால் ஏற்பட்ட குழப்பமாகும்.
வேதங்களில் 33 தெய்வங்களைப் பற்றி குறிக்கப்படுகின்றது. இந்துதர்மத்தில் குறிக்கப்படும் 33 பெருந்தெய்வங்களைப் பற்றி “த்ரயஸ்த்ரிம்ஸ தேவ” என்று பௌத்த மத சாஸ்திரங்களான திவ்யவதனம் மற்றும் சுவர்ணபிரபஸ சூத்திரமும் கூட குறிக்கின்றன.
’கோடி’ என்றால் மிகச்சிறந்த, ஒப்புயர்வற்ற, நேர்த்திவாய்ந்த எனப் பல அர்த்தங்கள் உள்ளன. இதேபோல் தான், 725ஆம் ஆண்டு மஹாவைரோசன சூத்திரம் எனப்படும் பௌத்த மதம் சூத்திரத்தை சீன மொழியில் மொழிப்பெயர்க்கும் போது சப்தகோடி புத்தர்கள் என்பதை ‘7 கோடி புத்தர்கள்’ என்று மொழிப்பெயர்த்து விட்டனர். உண்மையில், சப்த கோடி புத்தர்கள் என்பது 7 தலைச்சிறந்த புத்தர்களைக் குறிக்கும். பின்னர், திபெத்திய பௌத்தர்கள் ‘கோடி’ எனும் சொல்லுக்கு வகை எனும் பொருள் கொண்டு, 7 வகையான புத்தர்கள் என்று மொழிப்பெயர்த்தனர்.
பிரகதாரண்யக உபநிடதத்தில் (சுக்ல யஜுர்வேதம்), 3ஆம் அத்தியாயத்தில் 33 பெருந்தெய்வங்களை யாரென்று விவரமாகக் குறிக்கப்படுகின்றது. 33 பெருந்தெய்வங்கள் – 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், 12 ஆதித்யர்கள், 2 அஸ்வின்கள். ஆகவே, 33 கோடி (330 மில்லியன்) தெய்வங்கள் என்பது தவறு. 33 பெருந்தெய்வங்கள் என்பதே சரியாகும்.
* 8 வசுக்கள் – பிரித்திவீ (பூமி), அக்கினி, ஆபம் (நீர்), வாயு, அந்தரிக்‌ஷம் (அண்டவெளி), சூரியன், சந்திரன், ஆகாயம். இந்த அஷ்டவசுக்களுக்கும் அதிபதியானவர் விஷ்ணு.
* 11 ருத்திரர்கள் – ஆனந்தம், விஞ்ஞானம், மனம், பிராணம், வாக்கு (இவை ஐந்தும் கருத்துப் பொருட்கள், இறையம்சம்) மேலும், சிவனின் 5 முகங்களான/பெயர்களான ஈசானம், அகோரம், த்தபுருஷம், வாமதேவம், சத்யோஜதம் ஆகியவை. மற்றொன்று, ஆத்மன். இவை பதினொன்றும் ருத்திரர்கள், அனைத்திற்கும் மூலமானவர் சிவன்
* 12 ஆதித்யர்கள் – மித்ரன், அர்யமன், பகன், வருணன், தக்‌ஷன், அம்ஷன், துவாஸ்த்ரன், பூஷன், விவஸ்வத், சாவித்ரன், சக்ரன், மற்றும் இவையனைத்திற்கும் மூலதானவர் விஷ்ணு. இந்த பன்னிரண்டும் விஷ்ணுவின் அம்சங்கள்
* 2 அஸ்வின்கள் – இந்திரன், பிரஜாபதி

ok

Wednesday, 2 September 2015

அரேபிய அடிமையும் அஞ்சு வயது குழந்தையும்.



அரேபிய அடிமைகளின் பல முதிர்ச்சி இல்லாத பாலைவன கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னால் அது பெரும் தவறல்லவா நண்பர்களே ? இவர்களுக்கு பதில் சொல்ல ஒரு குழந்தை போதுமே ? கீழே அரேபிய அடிமையின் கேள்விகளும், அஞ்சு வயது குழந்தையின் பதில்களும்.

அரேபிய அடிமை : ஏய் பாப்பா, கல்லை போய் வணங்குகிறாயே ? அது தவறல்லவா ?

குழந்தை : அப்படியா ? சரி மாமா, எனக்கு உங்கள் பாக்கேட்டில் உள்ள பேப்பர கொடுங்க. நிறைய வெச்சுருக்கீங்களே ?

அ அ : அது பேப்பர் இல்லை, ரூபாய்கள் !!

Tuesday, 1 September 2015

மனுவில் பெண் உரிமை



1) பெண்ணின் விவாஹ (திருமண) காலத்தில் அவளுக்கு கொடுக்கப்பட்ட ஆடை, ஆபரணம், வாகனம் இவற்றை அவளது கணவன், தந்தையோ உபயோகப்படுத்தக் கூடாது. (மனு 2-52)

2) எந்த வீட்டில் பெண்கள் சந்தோஷமடைக்கிறார்களோ அந்த வீட்டில் எல்லா தெய்வங்களும் சந்தோஷமடைகின்றன.எந்த வீட்டில் அவ்வாறு பெண்கள் சந்தோஷம் அடையவில்லையோ அந்த வீட்டில் செய்யப்படும் காரியங்கள் பலனில்லாது போகின்றன. (மனு 2-56)

3) பெண்களை அவளது தந்தை உபசரிக்க வேண்டும், இல்லையென்றால் அந்த பெண்ணின் சாபத்தால் அந்த குடும்பம் அழியும் (2-58)

4) நன்மையை விரும்பும் மனிதர்கள் எப்போதும் தன் வீட்டு கல்யாணம், விரதங்கள், போன்ற காலங்களில் உடன் பிறந்த பெண்களுக்கு நகை, உடை, சாப்பாடு இவற்றால் சந்தோஷப்படுத்தவேண்டும்.(2-59)

5) கணவன் தன் மனைவியைத் தவிர வேறு பெண்ணை நினைக்காது இருக்கவேண்டும். (2-60)

6) குருடன், மூடன், நொண்டி, எழுபது வயதான முதிய ஆண் பெண் இவர்களிடம் சிறிது கூட வரி வாங்கக்கூடாது.( 8-394)

7) இரண்டு மாதத்திற்க்கு மேற்பட்ட கர்பிணியிடம் ஓடக்காரன் கூலி வாங்கக்கூடாது (8-407)

8) எல்லாவர்ணத்தினரும் மனைவியை காப்பாற்றுவதே மேலான தர்மம் என அறியவேண்டும். சக்தியில்லாத கணவனாயினும் மனைவியை காப்பாற்ற முயற்சிக்கவேண்டும். (9-6)

9) கணவனும் மனைவியும் சரிநிகர் சமானம் (9-45)
10) அண்ணனின் மனைவி தம்பிக்கு தனது குருவின் மனைவியை போன்றவள். தம்பியின் மனைவி அண்ணனுக்கு மருமகள் போன்றவள்.(9-57)

11) பெண்ணுக்கு ருதுக்காலம் வந்துவிட்டாலும் அதாவது வயதுக்கு வந்தாலும், கல்யாணமாகாது தன் வீட்டில் இருக்கும்படி நேர்ந்தாலும் பரவாயில்லை மாறாக நல்ல குணமில்லாத ஆணுக்கு (வரனுக்கு) பெண்ணை கொடுக்கக்கூடாது.(9-89)

12) பெண்ணானவள் வயதுக்கு வந்தபின் மூன்று வருடங்கள் வரையில் அவளது தந்தையோ, சகோதரனோ, தகுந்த ஆணுக்கு (வரனுக்கு) தன்னை திருமணம் செய்து கொடுக்கவில்லையெனில் தானே தகுந்த நல்ல ஆண் துணையை தேடிக்கொள்ளலாம். (9-90)


ok

Tuesday, 21 July 2015

திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;

என்னிடம் ஒரு நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார் அதாவது திருமணத்தின் போது சொல்லப்படும் மந்திரத்தின் அர்த்தம் என்ன என்று கேட்டார்

எனக்கு அப்போ அதற்க்கு பதில் கொடுக்க முடியாமல் போய்விட்டது. சில நாட்களுக்கு பிறகு அவரு கேட்ட கேள்வி என் மனதில் தோன்றியது. அதை இணையத்தில் தேடி பார்த்தேன் கீழே உள்ளவாறு பெரும்பாலன வலைத்தளங்களில் காணப்பட்டது. அங்கு காணப்பட்டது இங்கு தருகின்றேன்

''சோமஹ ப்ரதமோ விவேத 
கந்தர்வ விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''''

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.

நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.

அத்துடன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.

இதை பார்ப்பனர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். இது அவர்கள் தந்த விளக்கம்தான். ஆனால் சில பார்ப்பனர்கள் மட்டும் "அவள் மகளாக இருந்தாள்" என்று விளக்கம் சொல்லி தப்பிக்க முனைவார்கள்

இது இருக்கட்டும். வேறு மந்திரங்களை பார்ப்போம். (18 வயதுக்கு உட்பட்டவர்கள் இதை படிக்க வேண்டாம்)
"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ
யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."
இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளை நீங்கள் உதவ வேண்டும்.

இன்னும் ஒரு மந்திரம்:
"விஷ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபாணி பீசமிது
ஆசிஞ்சாது ப்ரஜபதி
தாதா கர்ப்பந்தாது..."
இதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா?

உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள். இப்படி ஆபாசம் மிகுந்த மந்திரங்களை சொல்லி நடக்கின்ற திருமணங்களையே எமது தமிழர்கள் செய்கிறார்கள். இவைகளை விட்டு திருக்குறள் சொல்லி திருமணங்கள் செய்யுங்கள் என்றால், "கடவுள், மதம்" என்று அடம்பிடிக்கிறார்கள்.
தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?

### என்று வலைத்தளத்தில் காணப்பட்டது

நமக்கு தெரியும் தமிழில் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் வரும் என்று
அதே போலதான் சமஸ்கிருதத்தில் உள்ள சொற்களுக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

இப் பதிவுக்கு கீழே பல நண்பர்  பின்னூட்டல் கொடுத்துள்ளனர் அதை பாருங்கள் ###

=================================================
வாசகர் பின்னூட்டல் 1:

மேலுள்ள மந்திரத்தின் சரியான பிரதி கீழே உள்ளது (உச்சரிக்கும் வசதி கருதி ஆங்கிலத்திலே தருகிறேன்)
Somah prathamo vivide
Gandharvo vivida uttarah
Trtiyo Agnistepatih
Turiyastemanusyajah.
Somo dadad gandharvaya
Gandharvo dadadagna; ye
Rayincapputramscadad
Agnirmahyamatho imam
- Rigveda, 10. 85, 40. 41.

இதன் பொருள்:
"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்
பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்
மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்
நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்"

இதன் உட்பொருள்:
1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது

2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை.
ஒரு பெண்குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது

3. அதன் பின் 11 - 16 வயது பருவ காலம், உடலில் ஹோமோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது

இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.

பதி என்னும் சொல்லின் பொருள் பாதுகாவலன் என்பதாகும். அதற்கு பெண்ணை புணர்பவன் என்ற அர்த்தம் இல்லை. அப்படி என்றால் பெண்ணை வன்புணர்வு செய்பவனும் பதி ஆகிவிடுவான்.

ஒரு பெண் உருவாக 3 தேவதைகளின் அருள் தேவைப்படுகிறது. 3 தேவதைகளின் அம்சமாய் விளங்கும் பெண் மானிடனான உன்னை இன்று அடைகிறாள். அத்துணை உயர்வான அவளுக்கு நீ காலம் முழுவதும் துரோகம் செய்யாது கண் போல் காக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது (மணமகன் எடுக்கும் சத்தியபிரமாண மந்திரங்களிலும் இந்த உறுதிமொழி உள்ளது)

பதி என்ற சொல்லுக்கு பெண்ணை புணர்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான அர்த்தம் தரும் மந்திரத்தின் அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய முடியும்.

தலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.

வடமொழி தெரிந்தவர்களும் தங்கள் மகளின் திருமணத்தில் இந்த மந்திரம் தான் சொல்கிறார்கள். புனிதமான திருமண சடங்கில் சொல்லப்படும் மந்திரத்தில் வக்கிரத்தை கலக்க வேண்டிய அவசியம் தான் என்ன?

=================================================
வாசகர் பின்னூட்டல் 2:

பதிவுக்கு பின்னூட்டல் திருத்தம்:
//அத்துடன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.//

இந்த மந்திரத்தில் ரோமம் பற்றி எல்லாம் எங்கும் குறிப்பிடப்ப்டவில்லை.
(அது மட்டும் அல்ல பெண் உடலில் எத்தனையோ இடங்களில் ரோமம் இருக்கிறதே! ஏன் வக்கிரமாகவே சிந்திக்க வேண்டும்?)
பகுத்தறிவு என்பார்கள் - எதையும்
பகுத்தறிய மாட்டார்கள்
பகைத்தறிவு போனதனால்
மிகைத்திரண்டு வந்ததடா

பகுத்தறிவு பிரசாரம் என்ற பெயரால் தமிழர்களுக்கு தவறான தகவல் தருவதை இனியாவது தவிர்ப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

=================================================
வாசகர் பின்னூட்டல் 3:

வடமொழி மந்திரங்களுக்கு நான் விளக்க எழுதுவதால் தமிழர்கள் நிச்சயம் வடமொழி மந்திரங்களை சொல்லித்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுவதாக யாரும் கருதி விடக்கூடாது.

தமிழில் திருமணங்களில் சொல்லக்கூடிய அழகிய மந்திரங்கள் நிச்சயம் இருக்கும். அது மட்டும் அல்ல இந்த வேதப் பிராமணங்களை தமிழிலேயே சொல்லும் போது எம்மக்களுக்கு இன்னும் தெளிவாகவே தெரியும்.

எனது திருமணத்தின் போது வேதமந்திரங்கள் ஓதப்படும். ஆனால் முக்கியமான பிரமாணங்களை தமிழில் தான் எடுக்க திட்டமிட்டுள்ளேன்.

அது மட்டும் அல்ல. வேதங்களே கூட மேற்சொன்ன மந்திரங்கள் ஓதாமல் திருமணம் செய்யவே கூடாது என்று சொல்லவில்லை. வேதங்களில் சொல்லப்பட்ட 8 வித திருமணங்களில் ஒன்று தான் இந்த பிரம்மமுறை திருமணம். அத்தோடு, மந்திரங்கள் ஓதி செய்யப்படும் இந்த பிரம்மமுறை திருமணங்களில் பெண்வீட்டாரிடம் இருந்து எந்த சீதனமும் பெற்றுக்கொள்ளக் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது
=================================================
வாசகர் பின்னூட்டல் 4:

திருமணம் என்பதே.. ஒரு ஆபாச நிகழ்வுதான். அதை ஆபாசமாக கருதாமலும் பார்க்க முடியும். ஆனால் உலகில் 98% பேரும் திருமணமான சில ஆண்டுகளிலேயே குழந்தை குட்டியோடு அலைவதைப் பார்க்கையில்... அது ஆபாச நோக்கோடுதான் நோக்கப்படுவது புலனாகிறது. ஆனால் அதன் அர்த்தம் வேறு. அதை விடுவோம்..!

மக்கள் மத்தியில் கடவுள் மீது நம்பிக்கை மட்டுமல்ல.. ஒரு பயமும்.. பக்தியும்..மதிப்பும் இருக்கிறது. மக்கள் நம்பும் அல்லது பயப்பிடும்.. அல்லது மதிப்பளிக்கும் அந்தக் கடவுளை வைத்து நடைமுறை வாழ்க்கைக்குரிய விடயங்களுக்கு விளக்கமளித்து விட்டால்.. மக்கள் அதற்கு கட்டுப்படுவார்கள் என்பதை புராண இலக்கியங்களில் தெளிவாகக் காணலாம். சிலர் புராண இலக்கியங்களை மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகளின் பிரதிபலிப்பாக நோக்குவது தவறு. புராண இலக்கியங்கள் மக்களின் வாழ்வை கற்பனை கலந்து பிரதிபலிப்பவை. அதற்குள் கடவுள் இருப்பது மக்களின் மனதை எவ்வாறு ஒரு விடயத்துக்குள் ஆழ்த்துவது என்ற நோக்கில் அன்றி.. அவைதான் கடவுட் கோட்பாடுகள் அல்லது மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் என்ற அடிப்படையில் அல்ல. அவை தவறான புரிதல்கள். மக்களுக்கு மதக் கோட்பாடுகள் இலகுவாகப் புரியாததால்.. கடவுளை நடைமுறை வாழ்க்கைக்குள் பிரதியீடு செய்து மக்களின் வாழ்க்கையில் ஒரு ஒழுக்கத்தை விதைக்க முற்படுகின்றனர் என்பதையே மேலுள்ள மந்திர உச்சாடணம் விளக்குகிறது.

18 வயதுக்கு உட்பட்டோர்தான் படிக்கனும் இவற்றை என்று. 11 வயதிலேயே மனித இனப்பெருக்கம் பற்றி தெளிவாக விளக்கப்படுகிறது. எனவே இதில் சபேசனுக்கு கவலை தேவையில்லை.
பெண்களின் இனப்பெருக்க உறுப்பு.. பிரதானமாக மூன்று பகுதிகளை உடையது என்பது தவறல்ல. அது உண்மையே. கருப்பை (uterus).. யோனி மடல் (vagina).. வெளிப்புற உறுப்புகள் vulva.

ஆண் பெண் உடலுறவின் போது ஆண்களைப் போலன்றி பெண்கள் பாலுணர்வுத் தூண்டலுக்கு இலக்காக அதிக நேரம் எடுப்பதுடன் அவர்களின் பாலுணர்வுத் தேவை என்பது ஆண்களை விட அதிக நேரத்துக்குரியது. அதுமட்டுமன்றி ஆண் பெண் பாலுறுப்புக்கள் கலப்படைவதற்கு முன் தயார் நிலைக்கு வர வேண்டும். அதில் கூட பெண்களுக்கு அதிக நேரம் காலம் அவசியம். அப்படி நிகழாத போது.. பெண்களில் பிறப்புறுப்புப் பகுதி சிதைவடையவோ.. அல்லது வலி ஏற்படவோ.. அதிக சந்தர்ப்பம் உண்டு. பெண்களின் பிறப்புறுப்புப் பகுதி சிதைவடைவதால் (குருதிப் போக்குக்கு உள்ளவதால்) அதிக நோய்த்தொற்றலுக்கு வாய்ப்புண்டு. தொடர்ந்து உடலுறவு கொள்ள முடியாத நிலையும் தோன்றலாம். இப்படிப் பலர் வைத்தியசாலைக்கு வருகிறார்கள்.. இன்றைய உலகில் கூட.

அதனால் தான் ஆண்கள் உடலுறவின் போது விலங்குகள் போல முரட்டுத்தனமாகப் புணராமல்.. பெண்களின் உணர்வுநிலைகளை அறிந்து புணர வேண்டும் என்பதை.. விளக்க வேண்டிய கடப்பாடு உண்டு. இதை மண மேடையில் இருக்கும் மணமக்களுக்கு புத்தகமும் கையுமா சொல்ல முடியுமா சார்..???! அதுவும் மனித உடலமைப்புப் (Human anatomy) பற்றிய அறிவு தெளிவாக அறிவியல் மூலம் இனங்காட்டப் படாத ஒரு காலத்தில். இன்று நிலை வேறு.

அதுதான் திருமணம் என்ற நிகழ்வின் போது மந்திரம் மூலம் வழிகாட்டுகிறார்கள். கடவுளை வைத்து விளக்கமளிக்க முற்படுகின்றனர். இதில் என்ன தப்பு. கடவுள் சமூகத்துக்கு நல்வழி காட்டத்தானே மனிதனால் பாவிக்கப்படுபவர். நீ எப்படி கடவுளை மதித்து.. உருகி வணங்கிறாயோ.. உணர்வுகளை செலுத்திறாயோ.. அதைப் போல் நடந்து கொள்ளப்பா எங்கிறார்கள். முன்னர் எல்லோரும் சமஸ்கிரதமும் படிப்பர். அதனால் எல்லாத் தம்பதியருக்கும் இது புரியும் என்பதால் சமஸ்கிரதம் மூலம் சொல்கின்றனர். ஆனால் இன்று அது பலருக்கு விளங்க வாய்ப்பில்லை. இதை தமிழில் காலத்தின் தேவைக்கேற்ப அறிவியல் சார்ந்து சொன்னால் சிறப்பாக இருக்கும்.

கருத்தடை சாதனங்களுக்கும்.. கொண்டோம்களுக்கும் நாம் இன்று விளம்பரம் செய்யல்லையா. அதுபோல்.. அன்று திருமணமாகும் சம்பதியருக்கு அடிப்படைப் பாலியல் கல்வியை இப்படியான மந்திர உச்சாடணம் மூலம் ஊட்டியுள்ளனர். கடவுள் என்பது அங்கு கையாளப்பட்ட ஒரு காரணி மட்டுமே அன்றி.. அதில் தான் கடவுள் உள்ளார் என்பதல்ல விளக்கம். மத அடிப்படை கோட்பாடு என்பது வேறு.. கடவுள் என்ற அந்த பதநிலையை மக்களுக்கு அறிவூட்டப் பயன்படுத்தும் நிலை என்பது வேறு.

அரைகுறையா விளங்கிட்டு வந்து.. அரைகுறையா.. ஆராயாதீர்கள்..! ஒரு முழுமை நோக்கி விடயங்களை நோக்குங்கள். தெளிவு பிறக்கும். வேண்டிய மாற்றங்களை அல்லது சீர்திருத்தங்களை பழமைக்குள் இருந்து தேட வேண்டிய சந்தர்ப்பமாவது எழுவது புரியும்.
இன்றைய உலகிலும் இது கட்டாயம். திருமணமாகும் தம்பதியருக்கு பாலியல் அறிவு மட்டுமன்றி பிறப்புரிமையியல் (genetics) அறிவும் அவசியம். புலம்பெயர்ந்த நாட்டில் கூட பல தமிழர்கள் தங்கள் நெருங்கிய உறவுகளை திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் பல பாரம்பரிய நோய்களும்.. பிறப்புரிமை சார்ந்த நோய்களும் ஏற்படுகின்றன. பல திருமண முறிவுகளுக்கு வன்முறைத்தனமான பாலியல் அணுகுமுறையும் காரணம் என்பதை திருமண முறிவு வழக்குகளைப் பார்த்தால் புரியும்.

இதை அடிப்படை பாலியல் பிறப்புரிமையியல் அறிவின்றி.. இருக்கும்.. திருமணமாகும் தம்பதியருக்கு எப்படி சொல்லிக் கொடுக்கப் போறீர்கள் என்று சிந்தியுங்கள். அன்று மந்திரம் மூலம் சொன்ன பாலியல் கல்வி சார்ந்த ரகசியத்தை பழிக்கிறீர்கள்.. இன்று அதே விடயமானது அவசியமானதாகி உள்ள சூழலில் அதைச் சொல்லிக் கொடுக்க ஒரு வழி சொல்லுறீங்களும் இல்ல.

அநாவசிய கர்ப்பமாதல்.. கருக்கலைப்புக்கு வழி செய்கிறது.

அண்மையில் லண்டனில் ஒரு வைத்தியசாலைக்கு ஒரு தம்பதியினர் வந்தார்கள். மனைவிக்கு விருப்பமில்லாத சமயத்தில் அவர் கர்ப்பமாகி விட்டாராம். இதனால் குடும்பத்தில் பிரச்சனை. அதற்கு வழி தேடி வருகிறார்கள். இப்படி பல விடயங்கள் நாம் வாழும் சமூகத்தில் தினமும். நாங்க என்னடான்னா.. கடவுளைப் பழிக்க என்று மூடத்தனமா சமூகத்தை அணுகிக் கொண்டிருக்கிறம். புகலிடத்தில் படிப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை. அங்கு எல்லாம் தெளிவாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அப்படி இருந்தும் அங்கு கூட பிரச்சனைகள் பல ரூபத்தில். ஊரில இருந்து இங்கு வருபவர்களே இப்படியான இக்கட்டில் அடிப்படை பாலியல் அறிவின்றி வாழ்வது அதிகம். இவர்கள் குடும்பக்கட்டுப்பாடு முறை அறிவின்றி, பாலியல் தொந்தரவுகளுடன்.. மற்றும் பிறப்புரிமை நோய்த்தாக்கமுள்ள குழந்தைகள் என்று சிரமப்படுவதை காணக் கூடியதாக உள்ளது. 

இங்கு கடவுளை முன்னிறுத்தவல்ல எமது வாதம். சிலர் அறியாமல் புரியாமல் விடயங்களை அணுகுவதையும்.. விடயங்களை அணுகும் போது வெறும் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுவதையும் செய்யாமல்.. தேவையான சீர்திருத்தங்களையும் முன்மொழியுங்கள்..! அதுதான் சமூகத்துக்குப் பயன்படும். கடவுள் என்ற எண்ணக் கோட்பாட்டை அழிப்பது அல்லது சீர்குலைப்பதல்ல முக்கியம். அந்த எண்ணக் கோட்பாட்டை அழிக்கும் போது அல்லது சீர்குலைக்கும் போது சமூகம் அடையும் நிலை என்ன என்பதையும் சிந்தியுங்கள்..! அதற்கேற்ப சமூகத்தை தயார்படுத்த வழிகாட்டுங்கள்.

=================================================
வாசகர் பின்னூட்டல் 5:

"ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமக" என்றும் மந்திரம் இருக்கிறது.
இதற்கும் ஒரு தாய்க்கும் பல தந்தைகளுக்கும் பிறந்த சூத்திரன் என்றுதான் அர்த்தம்.

இதை உங்களுக்கு பார்ப்பணன் ஒருவன்தான் கருத்தோடு சொல்லி வைத்தானா..??? சூத்திரரும் ஆரியர்தானுங்கோ....!! அவர்களும் சமஸ்கிர்தம் படிப்பவர்கள்தான்...
"ஏக" எண்றால் ஒண்று எண்று மட்டும் தான் என்பது இல்லை அது முதலில்என்பதுக்கும் வரும்... (( சமஸ்கிருத விசயம் அது)) "பகு" என்பது பின்னர் எண்று அர்த்தம் வரும்... அதிலும் சத்சூத்திராய என்பது " ஆசிரியர்"
அதாவது " முதலில் தாய்க்கும் பின்னர் தந்தை குருவிற்கு வணக்கம்" என்பதுதான் கருத்து.

=================================================
வாசகர் பின்னூட்டல் 6:

"ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ரூதீயோ அக்னிஷ்டேபதி:
துரீயஸ்தே மனுஷ்யஜா:

திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக சோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தால், இரண்டவதகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தால், முன்றாவதாக அக்னிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள், நான்கவதகத்தான் இப்பொழுது அருகில் இருக்கும் மணமகனுக்கு மனைவியாகிறாள். மணமகள் இதற்குமுன் மூன்று கடவுள்களுக்கும் மனைவியாக இருந்த பின்புதான், நான்காவதாக மணமகனை மணக்கிறாள் என்பது விளக்கமாகும்.

ஆனால் இதன் உண்மையான அர்த்தம் எல்லாருக்கும் புரிவது இல்லை. பெண் குழந்தை பிறந்ததில் இருந்து திருமணம் வரை இருக்கும் காலத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்கிறார்கள். முதல் பாகத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவர் ஸோமன். இது சந்திரனைக் குறிக்கும். சந்திரன் குளிர்ச்சியும் மகிஷ்ச்சியும் அளிப்பவன். தேவர்கள் பலசாலியாக இருப்பதற்கு எப்படிச் சந்திரனின் அருள் தேவையோ அது போல பூமி வளம் பெறுவதற்கும் சந்திரனின் அருள் தேவை. அவன் அருளால் உலக ஆரோக்கியத்திற்கு உகந்த வகையில் பருவங்கள் உருவாகிறது. பூமி, வலுவும் வளமும் பெறுகிறது. அவன் அருளால் பெண்ணின் குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாகவும், வளம் பொருந்தியதாகவும் இருக்கும். இதற்குச் சந்திரனின் அருள் தேவை. மேலும் ஆயுர்வேத முறைப்படியும், சோமம் என்றால் "கபம்" என்றும் ஒரு பொருள் உண்டு. பிறந்த குழந்தைக்கு இருக்கும் அதிகக் கபத்தினால் தொல்லைகள் கொடுக்காமல் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவன் ஸோமன். மேலும் குழந்தை பிறந்து சிலவருடங்கள் வரை தாயின் கண்காணிப்பில் இருக்கும். தாயின் மென்மையான அணுகுமுறையைக் கூட ஸோமனின் உதாரணத்துக்குச் சொல்லலாம்.

வளர்கையில் பெண்ணின் குணமும், குரலும், மாறி அழகு அதிகரிக்கிறது. பெண் கனவு காண ஆரம்பிக்கிறாள். இதில் இருந்து அவளைக் காத்து நல்வழிக்குத் திருப்பும் பொறுப்பு கந்தர்வர்களுடையது. அதாவது தாய், தந்தை இருவரும் சேர்ந்து பெண்ணைக் கண்காணிக்கிறார்கள். அவளுடைய அழகுக்குக் காரணனான கபத்தை மட்டுப் படுத்தி அவளைத் தன்னிலை பெறச் செய்வது கந்தர்வர்கள் பொறுப்பு. அழகும், பருவமும் சேர்ந்து விட்டால் பின்னால் ஏற்படும் உணர்வுகளுக்கும் அவளுடைய துணை தேடும் நினைவுகளுக்கும் காரணம் அக்னி. இந்தச் சமயத்தில் தான் பெண் அந்த அக்னியைப் போல இருக்க வேண்டும். அவள் நினைவுகளும், கனவுகளும் அவளைச் சுட்டுப் பொசுக்காமல் அவளைப் பாதுகாப்பவன் அக்னி. அந்தப் பாதுகாப்பு உணர்வு அவளுக்குத் தோன்றக் காரணமாக இருப்பவன் அக்னி. ஏனென்றால் சிருஷ்டியின் மூலமே பெண்ணால்தான். தன்னிச்சையாகச் செயல் படும் தகுதி அவளுக்கு இருந்தாலும் அவள் ஜாக்கிரதையாகத் தன் குடும்பம், சமூகம் என்ற உணர்வுகளோடு ஆரோக்கியமான சிந்தனைகளோடு செயல் படுவதற்குக் காரணம் அக்னி.

பெண்ணினம் காப்பாற்றப் பட்டால் அத்தனை தர்மங்களும் காப்பாற்றப் படும். ஆகவே திருமணம் ஆகும் வரை அவளைக் காக்கும் பொறுப்பை அக்னி ஏற்றுக் கொண்டு மணமகனிடம் மணப் பெண்ணை ஒப்படைக்கிறார். ஆகவே தான் திருமணங்கள் அக்னி சாட்சியாகவும் நடைபெறுகிறது. மணமகன், மணமகள் இருவரும் சேர்ந்து ஸோமன், கந்தர்வன், அக்னி இவர்கள் மூவருக்கும் முறைப்படி அவர்களுக்குப் பூஜை செய்து வணங்கி வழி அனுப்புவார்கள். முறையே சந்திரனுக்குப் பிடித்த பழத்தை ஒரு குழந்தைக்கும், கந்தர்வனுக்கு வேண்டிய ஆடை, அலங்கரம், வாசனைத் திரவியம் போன்றவைகளுக்கு மணமகன், மணமகள் ஆடைகளில் இருந்து நூல் எடுத்தும், அக்னிக்குப் பிரியமான நெய்யும் கொடுத்து வழி அனுப்புவார்கள். இதில் அவர்கள் இதுவரை செய்த தவறுகளை மன்னிக்கவும், மேலும் இனித் தவறு செய்யாமல் இருக்கவும் இருவரும் வேண்டும் வேண்டுதலும் இருக்கும். அக்னி பரிசுத்தமானது. அவன் பாதுகாப்பில் இருந்த பெண்ணும் சுத்தமானவள். அப்பழுக்கற்றவள். ஆகையால் நாம் சந்தேகமே இல்லாமல் வேதங்களும் மந்திரங்களும் கூறும் உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

-------------------------------------------------------------------------------

### திருமணத்தில் இறுதியாக சொல்லப்படும் மந்திரம் ###

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”

“கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லுவதோடு,  தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டுகிறார் புரோகிதர். சமிக்ஞை சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பலரும் அதே போல கையை உயர்த்தி  விரலை ஆட்டி “கெட்டி மேளம் , கெட்டி மேளம்” என்கின்றனர். அதோடு இருக்கைகளை விட்டு எழுந்து பூவும் அட்சதையும் போடத் தயாராகின்றனர்.

இந்த மந்திரம் எந்த ஒரு தேவனையோ, கடவுளையோ புகழ்ந்தோ, அவர்களிடம் விண்ணப்பமாக அமைந்ததோ இல்லை.  இந்த மந்திரம் மணமகன்  தன்னுடைய வாழ்க்கையில் மனைவி எந்த அளவுக்கு இன்றியமையாதவள் என்பதை உணர்ந்த நிலையை வெளிப்படுத்தும் விதமாக, மனைவியின் மேன்மையை போற்றி அவள் பல்லாண்டு வாழ வாழ்த்தும் பாவாக அமைந்துள்ளது.  இந்திய சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் கோட்பாட்டை இந்த மந்திரம் சொல்கிறது.
திருமணத்தின் போது மணமகன்,  தன வாழ்வில் மனைவியின் முக்கியத்துவத்தை உணரந்தவனாக, இவ்வளவு சிறப்புகளுடைய  என வாழ்க்கை துணைவியே நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் என்பதை சொல்லும் மந்திரமே இந்த “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா…. !”

மம ஜீவன ஹேதுனா – என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி  இருப்பவளே

(மம -என்னுடைய, ஜீவன – வாழ்க்கையில், ஹேதுனா-  இன்றியமையாத(வளே)

மாங்கல்யம் தந்துனானே– இந்த மங்கல சாட்சியாக
கண்டே பத்னாமி –  உன்  கழுத்தை சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் )

சுபாகே– மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே 

த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!
(த்வம் -நீ, சஞ்சீவ- வாழ்க , சரத – ஆண்டு ,  சதம் – நூறு) 

இந்த மந்திரம் மனித வாழ்க்கையின் அடிப்படையை உணர்த்தும் பகுத்தறிவு கோட்பாடாகும் .  இந்த மந்திரத்தை வெறுமனே சொல்வதோடு நில்லாமல், இந்த மந்திரத்தின் பொருளை தெரிந்து  கொள்வதோடு நிறுத்தாமல், இந்த மந்திரத்தின் உண்மையை மனதில் உணர்ந்தவன், தன் மனைவி தன் வாழ்க்கையில் எந்தளவுக்கு இன்றியமையாதவள் என்பதை அறிந்து கொண்டவனின் வாழ்க்கை ஓடம் சிக்கி சிதறாமல் காப்பாற்றப் படும். 

இந்த மந்திரத்தை கணவன்,  திருமண நாளன்று மட்டும் சொல்லாமல் ஒவ்வொரு நாளும், காலையில் எழுந்தவுடன்  தன் மனைவியிடம்  சொல்வது இன்னும் சிறப்பாகும்.

தன்னுடைய உடல் பொருள் ஆவி உள்ளிட்ட அனைத்தையும் தனக்கு வழங்கிய,   தன் வாழ்க்கையில் இன்றியமையாதவ்ளாகக் கிடைத்த மனைவியின் உறவைக் குறிக்கும் மாங்கலயத்தை தினமும் தொட்டுக்கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டியது,  கணவன் செய்ய வேண்டிய செயலே என்றால் அது மிகையல்ல !

### இதற்க்கும் விமர்சனம் செய்து இருப்பார்கள். நல்ல காலம் மறந்து விட்டார்கள் போல ###

அன்பு சகோதரர்களே!
உங்களுக்கு மதங்களை விமர்சிக்க உரிமை உண்டு. ஆனால் பொய்யாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

Tuesday, 14 July 2015

இந்துக்களால் மிக புனிதமான இடமாக கருதப்படும் கோயில் கோபுரங்களில் ஏன் ஆபாச சிலைகள் இருக்கிறது ...

01. கோவில்களில் உடலுறவுக் காட்சிகளை சித்தரிக்கும் சிலைகள் அமைந்து இருப்பது மிக மிக வியப்பையும், குழப்பத்தையும் தருகிறது. இதன் மூலம் என்ன தெரிவிக்கிறார்கள்? 
02. கோவிலுக்கு வரும் பொழுது அந்த மாதிரி சிற்பங்களைப் பார்த்தா மனம் அலைபாயும் இல்லீங்களா? 
03. பிறகு எப்பிடி முழு மனமும் தெய்வீகத்துல போகும். ஒரு வேளை காமமும் தெய்வீகம்னு சொல்ல வராங்களா? 
04. அப்பிடி இருந்தாலும், ரெண்டு பொண்ணுங்க மூணு ஆண்கள்னு இருக்கற சிற்பங்கள், அது எதை விளக்க வருது? இப்படிப்பட்ட சிற்பங்கள், வடக்கில் மட்டும் இல்லாமல், நம்ம தெற்கிலும் ஒரு மிகப் பெரிய கோவிலில் இருக்குதுங்க. 
05. ஏதோ ஒரு மிகப் பெரிய மர்மம் இந்தக் காமத்துக்கும் நம்ம தெய்வீக நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கற மாதிரி இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க?

பொதுவாக எல்லோரும் கூறும் விடயம் எல்லாம்வல்ல இறைவனை காண காம என்னம் தடையாகயிருக்கும். அத்தகைய காமத்தை, காம என்னத்தை, குரோதம் (பலி பீடம்) கடந்து வந்தாலே இறைவனை அடையலாம் என்பார்கள்.

இதனை சற்று விவாதிப்போம் வாருங்கள்


ஊருக்கு வெளியிலிருந்தே பார்க்கும்போது கண்ணில் படுவது, வானளாவிய கோபுரம் அது ரொம்ப அழகாயிருக்க்கிறது என்று தோன்றும். அதை பார்க்க அருகில் போவோம். கோபுரத்தை அண்ணாந்து பார்க்கிறோம்.  அதில் அடுக்கடுக்காக பல பொம்மைகள்.  கீழ் வரிசையில் உள்ள உருவங்களில் சில ஆபாச சிலைகள் காணப்படுகிறது.

ஆனால் அவற்றுடன் கூடவே யோகியரும், முனிவர்களும், உழவர்களும், குறவர்களும், அவதாரங்களும், கர்ப்பிணி பெண்டிரும், நாக தேவதைகளும், யட்சணிகளும், கந்தர்வர்களும், அரசரும், வீரகாதைகளும் காட்டப்படுகின்றன அவற்றில் ஆபாசமான தன்மை இல்லை 


வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்தைக் காட்டும் பலவகையான சிலைகள் உள்ளன, அவற்றில் உடலுறவுச்சிலைகளை மட்டும் தவிர்ப்பது இந்து மதத்தின் வழக்கம் அல்ல. வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு ஒரு முழுமையை உருவகிக்கவே அது முயல்கிறது. ஆகவே துறவுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் காமத்துக்கும் இருக்கும்.

இது ஆலயங்கள் நமக்குக் கற்றுத் தரும் முதல் பாடம்.  "நீ உன் மனதைக் கட்டுப் படுத்தினால் உயர்வாய்" என்பதை போதிக்கிறது.

நம் மனத்திலே சிறிதளவும் தெய்வ நம்பிக்கை இல்லை என வைத்துக் கொள்வோம்.  நம் மனதிலே தோன்றுவது என்ன? ஓகோ இந்தக் கோவிலுக்குள் சென்று பார்த்தால் இன்னும் பல ஆபாசமான காட்சிகளையும் காண முடியுமோ?’ என்னும் எண்ணம்.  உள்ளே செல்கிறோம்.  அங்கு காண்பது என்ன?  நூற்றுக்கால், ஆயிரங்கால் மண்டபம் என பெரிய பெரிய மண்டபங்கள்.  இவற்றில் மக்கள் கூடி வேத மந்திரங்களைக் கற்கவோ, ஆன்மீக சொற் பொழிவுகளைக் கேட்கவோ, இசை, நடனம், நாடகம் போன்றவற்றைக் கேட்டு, பார்த்து  ரசிக்கவோ வசதி.  சொல்லப் போனால் இலவச பாட சாலைகள்தானே கோயில்கள்?

வெளிப் பிராகாரம், நடுப் பிராகாரம், உள் பிராகாரம் என ஒவ்வொன்றையும் சுற்றி வருகிறோம்.  நல்ல வெளிச்சமாக இருந்த வெளிப் பிராகாரத்தில் இருந்து உள்ளே செல்லச் செல்ல வெளிச்சம் குறைந்து கொண்டே வந்து கடைசியில் இறைவன் சிலைகள் உள்ள கருவறையில் வழிபட்டு.  அங்கு எண்ணை விளக்கின் ஒளியில் இறைவனின் உருவம் மங்கலாகத் தெரிகிறது.  பூஜை செய்பவர் ஒரு தட்டில் கற்பூரத்தை ஏற்றி இறைவனின் சிலைக்கு முன்னே சுற்றிக் காட்டுகிறார்.  இப்போது இறைவனின் முகம் நன்றாகத் தெரிகிறது.  ஆனால்  நாம் என்ன செய்கிறோம்?  அடுத்த வினாடி கண்களை இறுக்க மூடிக் கொண்டு ஆண்டவனை நினைக்கிறோம்.  நம் மனக் கண்ணில் தெறிவது ஆண்டவனின் உருவம்.  உன்னுள்ளே உற்றுப் பார்.  என்னைக் காண்பாய்”, என்ற உன்னத தத்துவத்தை அல்லவா நமக்கு வெகு எளிதாக போதித்து விட்டது ஆலயம்.

இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லா விஷயங்களுமே புனிதமானவை தான். எதையும் தவறாகச் செய்யும் போது அதன் புனிதம் போய் ஆபாசமாகி விடுகிறது. உதாரணமாக, நல்ல விஷயங்களைப் பேசினால் அது அர்த்தமுள்ள பேச்சு. அப்பேச்சுடன் தீய வார்த்தைகளை உபயோகித்துப் பேசினால் அதுவே ஆபாச பேச்சாகி விடுகிறது. 



புனிதமான தாம்பத்ய உறவு இல்லையென்றால் குழந்தைகள் எப்படிப் பிறக்கும்? உலக இயக்கம் எப்படி நடக்கும்? உலக வாழ்க்கையில் மனிதன், மிருகம், செடி, கொடி, மரம்.. இப்படி உயிருள்ள எல்லாமே இனப்பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம். இந்த நோக்கில் பார்த்தால் தாம்பத்ய உறவு என்பது திருக்கோயில் சிலையாக வடிக்கக் கூடிய அளவிற்குப் புனிதத்தன்மை வாய்ந்தது. சினிமா, நாடகம், டிவி போன்றவை வந்து, இந்தப்புனிதத்தை ஆபாசமாக்குவதற்கு முன்பு, கோயில் சிற்பங்களில், இதனைக் கண்டு புனிதமாக வாழும் நெறியை மனித இனம் உணர்ந்து கொள்ளவே இப்படிப்பட்ட சிற்பங்களை வடித்தார்கள். மேற்கொண்டு ஆராய்ந்து இதனை ஆபாசமாக்க கூடாது.

--------------
ஒரு கலங்கிய மனதிலிருந்து எழும் வக்கிர விகாரமாக காமத்தைக் காட்டும் சிலைகள் தமிழரின் கோவில்களில் அமைந்திடவில்லை. மாறாக, காமத்தை முழுதாக அறிந்து அதனை அச்சமின்றி வாழ்வின் ஒரு பாகமாக எதிர்நோக்கும் வாழ்க்கைப் பார்வை தான் அங்கு காணப்பட்டதுஆபாச சிலை தோற்றமானது சூரியனை வழிபடும் சௌர மதத்தில் காமத்தைக் காட்டும் சிலைகள் பெருமளவு இருந்தன. பின்னர் சௌரம் வைணவத்தில் கலந்தபோது அச்சிலைகள் விஷ்ணு ஆலயத்திலும் இடம்பெற்ற்றன. அதில் இருந்து பின் படிப்படியாக மற்றைய கோயில்களுக்கும் பரவியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
காமத்தை மனிதனின் இயற்கையான ஆற்றலாக எண்ணுபவை தாந்த்ரீக மதங்கள். அந்த ஆற்றலை அறிவதும் அறிவதன் மூலம் கடந்துசெல்வதுமே மானுட உண்மையின் உச்சநிலையை அறிய உதவும் வழி என அவை நினைத்தன. ஆகவே அவை காமத்தை அறிவின் வழியாகக் கண்டன. அந்தத் தாந்த்ரீக மரபும் பாலியல் சிற்பங்களை உருவாக்கியது. சைவ, சாக்த ஆலயங்களில் அவை காணப்படுகின்றன.
இந்து மதம் நீங்கள் மன ஒருமை கொண்டு கற்போடு வாழ்வதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு நன்னெறித்தொகுப்பு அல்ல. அது வரலாற்றில் பல்வேறு வழிபாட்டுமரபுகளும் சிந்தனைகளும் பின்னிக்கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை.
எளிமையான கேள்வியை மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள். அந்தச் சிற்பங்கள் மட்டும் இல்லையேல் உங்களுக்கு மன ஒருமை கைகூடி விடுகிறதா? உங்கள் மனதில் காமம் எந்நேரமும் கொந்தளித்துக்கொண்டுதானே இருக்கிறது? அது நிகழாத, வேறெதிலாவது உங்கள் மனம் நிலைத்திருக்கக்கூடிய, எத்தனை மணிநேரம் வாய்க்கிறது உங்கள் வாழ்க்கையில்?
காமச்சிற்பங்கள் தேவை இல்லை என்றால் கோயிலுக்குப் பெண்கள் வரக்கூடாது என்று சொல்லலாமே.அவர்களைப்பார்த்தால் காமசிந்தனை வரலாமே. ஏன் பெண்கள் வராவிட்டால்கூட மல்லிகை மணம் வந்தாலே போதுமே? இசை, ஓவியம் எதுவாக இருந்தாலும் அதே காம ஈர்ப்பு நிகழலாமே?
மன ஒருமை எதையும் இறுக்கமாக மூடிவைப்பதன் வழியாக நிகழ்வதில்லை. பிரச்சினை மனதில் இருக்கிறது, வெளியே அல்ல. கொஞ்சம் கண்மூடினால் அந்தச் சிற்பங்களை விட பல்லாயிரம் மடங்கு பிரம்மாண்டமாக உங்கள் மனதில் பிம்பவெளி ஓடுவதை நீங்களே காணலாம்.
எல்லாம் கடவுளின் லீலை என நம்பி ஏறிட்டே பார்க்காமல் நேராகச் சென்று கும்பிட்டு மீள முடிந்தால் அதைச்செய்யுங்கள். அது பக்தியின் வழி. நம்மில் தொண்ணூறு சதவீதம் பேர் அதையே செய்கிறார்கள்.
அது ஏன் என அறிவதே அதைக் கடந்து செல்லும் வழி. அதுவே ஞானத்தின் பாதை. அனைத்தையும் ஒரு மாபெரும் கட்டுமானத்தின் பகுதிகளாகக் காணும்போது உருவாகும் முழுமையை நோக்கு மூலமே நாம் விடுபடுகிறோம்.

ok

Tuesday, 14 April 2015

இசை பற்றி

லட்சக்கணக்கில் கட்டுரைகள் எழுதினாலும், இசை பற்றி முழுமையான சித்திரத்தை எழுத்தில் வடிக்க முடியாது. இது இசையின் சிக்கல் அல்ல. இசைக்கும் மொழிக்கும் உள்ள தொடர்பு தரும் சிக்கல். சாம்ஸ்கி, க்ளாட் லெவி ஸ்ட்ராஸ் போன்ற அறிஞர்கள் மொழியியல் ஆராய்ச்சியில் இசைக்கூறுகளின் பண்புகளை விளக்கியுள்ளனர். ஆனாலும், மொழியியலின் அடிப்படைகள் தெரியாமல் இக்கட்டுரைகளுக்குள் நம்மால் நுழைய முடியாது.

நாகார்ஜுனனின் மொழியாக்கத்தில் இசையும் தொன்மத்துக்கானத் தொடர்பு பற்றிய விளக்கங்கள் உள்ளன. இக்கட்டுரை ரிச்சர்ட் வாக்னரின் ரிங் என்ற இசை-நாடகத்தை உதாரணமாகக் கொண்டு இசைக்கும் தொன்மத்துக்குமானத்

Monday, 13 April 2015

சிவ என்னும் வார்த்தையின் மகிமை

   உ
நம சிவாய
நம சிவாய :

இதில் முதல் எழுத்து ' சி ' இதனை பார்த்தால் ச் + இ . இதில் ச 'சரண்' என்னும் புகலிடத்தை குறிக்கும் ' இ '  என்பது ' இவன் ' என்பதை குறிக்கின்றது. 'சிவனிடத்தில் சரணடைதல் வேண்டும்' என்பதை ' சி ' என்னும் எழுத்து உணர்த்துகின்றது . அது போல் வ என்பது 'உயிர் ' என்ற பொருளில் வருகிறது.

அதாவது சிவ பெருமானிடத்தில் சரணடைந்தால் எல்லா துன்பங்களும் நீங்கும் என்பது பொருள்

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !!!
தென்னாட்டவருக்கு சிவனே போற்றி !!!

விரதம் பற்றி சில தகவல்கள்...

நமது கலாச்சாரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்க வழக்கத்துடன் விரதம் இருக்கும் ஒரு பழக்கமும் வழக்கத்தில் உள்ளது.ஏகாதசி விரதம், கிருத்திகை விரதம், சஷ்டி விரதம், சிவராத்திரி விரதம், அமாவாசை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என்று அடுக்கடுக்காக விரதங்கள்.இந்த விரதங்கள் எதற்காக? இதனால் என்ன நன்மை? என்றெல்லாம் ஆராயப்போனால் அதிசயிக்கவைக்கும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.விரதத்துக்கு இவ்வளவு மகிமையா என்று அவை எண்ண வைக்கின்றன.
"ம்"என்பது, ஒன்றில் இருந்து விடுபடுவதை குறிக்கும் சப்தம்.இதோடு "த" சேர்ந்து "தம்" என ஆகும்போது அது மிக வேகமாக நடைபெறுவதைக் குறிக்கிறது.இந்த வேகம் மிக மிக வேகமெடுக்கும்போது 'ரதம்' ஆகிறது. இந்த ரதத்தோடு 'வி' சேரும்போது வினை ஏற்படுகிறது. அது என்ன வினை?

உடம்பில் ரத்தம் ஓடியபடி உள்ளது.

இதயம் துடித்தபடியே உள்ளது.இந்த இரண்டும் ஒரு சீரான வேகத்தில் செயல்பட்டபடி உள்ளன.இந்த வேகத்தைக் கூட்டிக் குறைப்பவைதான் எண்ணங்கள்.

Saturday, 11 April 2015

பகவத் கீதையின் மகத்துவம்

நண்பர்களை கிறிஸ்துவ மதத்தில் கர்த்தர் ஒருவர் மட்டும் தான் கடவுள் என்றும், இஸ்லாம மதத்தில் அல்லா ஒருவர் மட்டும் தான் கடவுள் என்றும், நம் அனைவருக்கும் பொதுவாக தெரிந்த விஷயம், ஆனால் நமது இந்து மதத்தில் மட்டும் நிறைய தெய்வத்தை வணங்குகிறோம், ஆனால் நமது மதத்திலும் கடவுள் ஒருவர் மட்டும் தான் என்பதே நம்மில் பல பேருக்கு தெரியாது, 

இதற்கான விடை பகவத் கீதை-ல் இருக்கிறது. ஆம் நம் இந்து மதத்தின் ஒரே கடவுள் 
பரமாத்மாமட்டும் தான். இந்து மதத்திலும் கடவுள் ஒருவர் தான், இவருக்கு ஆரம்பமும் கிடையாது முடிவும் கிடையாது. இவர் ஒருவர் மட்டும் தான் நம் கடவுள் , அப்படி என்றம் மற்றவர்கள் எல்லாம் யாரு என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது. மற்ற தெய்வங்கள் பரமாத்மாவால் உருவாக்கப்பட்டது.

Thursday, 9 April 2015

கேள்வி: உங்கள் கடவுள்கள் ஒருவர் பாம்பில் படுத்திருக்கிறார், ஒருவர் யானை முகத்துடன் எலிமேல் உட்கார்ந்திருக்கிறார், ஒருவர் கழுத்தில் பாம்புடன் இருக்கிறார், இதைப்போனற முட்டாள் தனமாக இறைவனை ஏன் சித்தறிக்கிறீர்கள் ? உங்கள் சிவ‌லிங்கம் எதை குறிக்கிறது என்ற உண்மையை சொல்ல முடியுமா ?

பதில்: தத்துவ ஞானத்தின் ஆழத்தை பார்த்தவர்கள் ஹிந்துக்கள். ஐன்ஸ்டீன் முதல் அணு விஞ்ஞானி ஓப்பன்ஹீமர் வரை பலரும் அதிசயமாகவும்,ஆச்சரியமாகவும் பார்க்கும் அளவிற்கு தன்னுள்ளே அற்புதமான கோட்பாடுகளையும், ஈடு இனையற்ற சித்தாந்தங்களையும் கொண்டது. அப்படிப்பட்ட உயர்ந்த தத்துவங்களை கொண்ட ஹிந்து தர்மம், முட்டாள்தனமான விடயங்களை முன்நிறுத்த வாய்ப்பே இல்லை. பாமரனையும் தன்பால் ஈர்க்கும் வண்ணம் இறைவனை உருவகப்படுத்திய சனாதன தர்மம், தத்துவ ஞானிகளையும், அறிஞர்களையும் தன்பால் நிலை நிறுத்திக் கொண்டதுஒரு பிள்ளையார் சிலையை பாருங்கள். அழகிய யானை முகம், ஒரு குழந்தையையும் அது கவர்ந்துக் கொள்ளும், அவரின் பால்ய கதைகள் அனைவரையும் கவரும், ஒவ்வொரு கிராமத்திலும் அவர் மரத்தடியிலும், சிறு குடிசைக்கு அடியிலும் அமர்ந்துக் கொண்டு பாமரன் முதல் படித்தவர் வரை பலரையும் கவர்கிறார்.
அதே பிள்ளையாரை ஒரு தத்துவஞானி எப்படி பார்க்கிறான்.

Wednesday, 8 April 2015

தமிழர் வாழும் நாடுகள் - இந்தோனேசியாவில் தமிழர்கள்

இந்தோனேசியாவில் தமிழர்கள் 

சாவகம் (ஜாவா), சுமத்திரா, பாலி, காலிமன்தான் (போர்னியோ), குலவேசி (செலிபிஸ்), இரியன் ஜயா (நீயூகினி) போன்ற 13,700 தீவுகள் அடங்கிய பகுதிகளைத்தான் இன்று இந்தோனேசியா என அழைக்கிறார்கள். இத்தீவுக் கூட்டங்கள் மலேயா தீபகற்பத்திலிருந்து நீயூகினி வரை பரவிக் கிடக்கின்றன. இரியன் ஜயாவின் கிழக்குப் பகுதியிலும், வட போர்னியாவின் பகுதிகளாக இருக்கும் சரவாக், சபா எல்லைகளிலும் மட்டும்தான் இந்தோனேசியாவின் நில எல்லை அமைப்புகளைப் பார்க்கலாம். தென்žனக் கடலும் பசிபிக் பெருங்கடலும் இந்து மாக்கடலும் 74,101 சதுர மைல்கள் அடங்கிய இத்தீவுக் கூட்டங்களைச் சுற்றிலும் அமைந்துள்ளன.

தமிழர் குடியேறிய வரலாறு :

சங்க கால நூல்களில் இந்தோனேசியாவைப் பற்றிய சில செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மொலுக்காஸ் போன்ற தீவுப் பகுதிகள் முந்நீர்ப் பழந்தீவு என இந்நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இத்தீவுகளைப் பன்னிராயிரம் என மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகின்றது. தமிழர்கள் ஜாவாவைச் சாவகம், சாவகத் தீபம், யவத் தீபம் என்றும், சுமத்திராவை, சிரிவிசயம், சொர்ணதீபம் என்றும் அழைத்து வந்தனர். பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளிலிருந்து, தமிழ் வணிகர்களும், தமிழ்ப் பெருமக்களும் சங்க

Monday, 6 April 2015

நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :

1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.
2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கு கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று
வரையறுக்காத மதம்.
3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.
5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.

இந்துக்கள் தீ மிதித்தால் அதை கேலிசெய்து கூத்தடித்து

இஸ்லாமிய சமூகத்தினரைப்போன்று சமத்துவ மக்களை வேறு எங்குமே பார்க்க முடியாது. ஏனினில் அவர்கள் தான் மற்ற மதத்திலிருந்து எதையும் சாராமல் குரானை விண்வெளியில் உட்கார்ந்து எழுதி ஒரு மதத்தை உருவாக்கியுள்ளார்கள்.

ஆனால் இவர்கள் செய்யும் செய்கைகள் அனைத்தும் அடுத்த மதத்தை சார்ந்ததாகவே இருக்கும். என்ன செய்ய...? அனைத்து மதத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிச்சு எடுத்து இஸ்லாம் மதத்திற்க்கு உருவம் கொடுத்து வருகின்றனர். அதற்க்கு உதாரணம்தான் இந்த படங்கள்.

இந்துக்கள் தீ மிதித்தால் அதை கேலிசெய்து கூத்தடித்து பல முகநூல் பக்கங்களில் அசிங்கப்படுத்திகொண்டு இருப்பார்கள். ஆனால் சத்தமே இல்லாமல் தீ மிதி திருவிழாவை முஸ்லிம் மக்கள் மொகரம் பண்டிகையின் போது ஜக ஜோதியாக இந்துக்களுக்கு போட்டியாக நடத்தி வருகின்றார்கள்....

அமெரிக்காவில் மிக வேகமாக வளரும் மதமாக இந்து மதம்

....அமெரிக்காவில் மிக வேகமாக வளரும் மதமாக இந்து மதம் உள்ளது .1990 முதல் 2001 வரை 237 சதவீதம் அதிகரித்துள்ளது.(1990 இல் ஹிந்துக்களின் எண்ணிக்கை 227,000 .........2004 இல் அமெரிக்க இந்துக்களின் எண்ணிக்கை 1,081,051 (2008இல் 1500000)....[குறிப்பு;இதில் அமெரிக்காவில் அதிக அளவில் உள்ள "ஹரே கிருஷ்ணா" இயக்கத்தினரின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை].........மேலும் விரைவாக வளரும் மற்ற மதங்களின் வளர்ச்சி விகிதம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது...................ஆதாரம்www.adherents.com

1) Deity (Deist) தேயிஸ்ட் (இது தாமஸ் பெயின் அவர்கள் ஆதரித்த மதம், யூதர்களது பழைய ஏற்பாடு, கிறிஸ்துவர்களது புதிய ஏற்பாடு இரண்டையும் நிராகரிக்கும் மதம். ஏறத்தாழ இந்து தத்துவங்களை உள்ளடக்கியது) +717%


2) Sikhism சீக்கிய மதம் +338%


3) New Age புது யுகம் என்ற பெயரில் இந்து தத்துவங்களை பின்பற்றும் நவ பாகன் மதம் +240%


4) Hinduism இந்துமதம் +237%


5) Baha'i பஹாய் மதம் +200%


6) Buddhism புத்தமதம் +170%

7) Native American Religion அமெரிக்க பழங்குடியினர் மதம் +119%


8) Nonreligious/Secular நாத்திகவாதம் +110%


பிறகுதான் மற்ற மதங்கள் வருகின்ற