Showing posts with label கோயில்கள். Show all posts
Showing posts with label கோயில்கள். Show all posts

Friday, 6 November 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் ஊர்காவல் படையின் இன அழிப்பு கொடூரங்கள்

திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990.08.06 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் உதவியுடன் முஸ்லிம்களால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திராய்க்கேணி ( Thiraaykkeani) கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70KM தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம்கள் அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் முஸ்லிம் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது. இப்படுகொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.

இப்படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். 


2003 அக்டோபர் 12 ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் பலவற்றக் கண்டுபிடித்தனர். இவ்வெச்சங்கள் திராய்க்கேணிப் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களினதாய் இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.


1990 செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப்பில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றது. சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார். கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்திருந்தார்.

இச்சம்பவத்தில் 8வயதுக்கு உட்பட்ட 68 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் 80க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.


இந்த படுகொலையில் இராணுவத்துடன் முஸ்லீம் ஊர்காவல்படையும் இனப்படுகொலை புரிந்தனர் என்பது பின்னர் தெரியவந்தது. காயங்களுடன் தப்பி சென்ற சிவகுமார் என்ற இளைஞரை இராணுவம் தேடிய போது மட்டக்களப்பு பிரஜைகள் குழுவும் ஆயர் இல்லமும் அவரை மறைத்து வைத்து வைத்தியம் செய்து காப்பாற்றியிருந்தனர். இதன் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் இந்த படுகொலைகள் பற்றி சாட்சியமளித்திருந்தார். இது போன்று கிழக்கில் பல படுகொலைகள் நடந்தன.


சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


இந்த போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் பற்றி தமிழர் தரப்புக் கூட இப்போது பேசுவதை மறந்து விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது


1990ஆம் ஆண்டு சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களை வெட்டிக்கொலை செய்து அக்கிராமத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்கள். அண்மைக்காலத்தில் தான் அவர்கள் மீண்டும் வீரமுனையில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம்கள் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர். வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை திகதி வாரியாக இங்கே தருகிறேன். 



  • 20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும் முஸ்லீம்களால் 69 தமிழர்கள் படுகொலை 



  • 05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை 



  • 10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை



  • 16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். 

  • 26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர். 

  • 29.07.1990 8 ஆசிரியர்கள் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 

  • 01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர். 


  • 12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.  

வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.
20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை முன்னின்று செய்தவர்கள் அயல்கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்களே

கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி, ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன. 

பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன. தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. 

இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திராய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம். இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவராகவும் காணப்பட்டனர். முஸ்லிம் இனவாதக் குழுக்களால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.

1990களில் திராய்க்கேணி, நிந்தவூர், வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் இனவாதக் குழுக்கள், நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 இளைஞர்களையும் படுகொலைசெய்தனர். மத வணக்கத்தலங்களில் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் உறவுக்குத் குந்தகம் விளைவிக்கும் செயல்களாக அமைந்தபோதிலும் எவராலும் தடுத்து நிறுத்தப்படவில்லை, கண்டிக்கப்படவில்லை. இவை தவிர இக்காலப்பகுதியில் தமிழ், முஸ்லிம் இன மோதல்களால் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன. சம்மாந்துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில், கல்முனை கரவாகு காளிகோயில், மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில்,  ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன. இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.இன்றுவரை விசாரணையும் இல்லை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் இல்லை.


Wednesday, 1 July 2015

430000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதரை மனிதர் கொன்ற சான்று!, இராமாயணம் உண்மை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்


------------------------------------------------------------------------------
ஸ்பெய்னில் உள்ள ‘பிட் ஆஃப் போன்ஸ்’ என்று அழைக்கப்படும் குகையிலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டை ஆராயும்போதே அவர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். அந்த மண்டையோடு நான்கு லட்சத்தி முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒருவரது மண்டை ஓடு என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

Tuesday, 21 April 2015

உலகின் அறிவியல் மேதைகளுக்கு சவால்விடும் சிவன் கோவில்

குஜராத் மாநில பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள கோலியாக் கடற்கரையில் இருந்து மூன்று கி.மீட்டர் தூரத்தில் ஆழ்கடல் பகுதியில் உள்ள சிவாலயம்தான் உலகின் அறிவியல் மேதைகளுக்கு சவால்விடும் ஆன்மிக தலமாக உள்ளது.
கோலியாக் கடலில் உள்ள நிஷ்காலங்க் மகாதேவர் கோயில் இரவில் அலைகள் ஆர்ப்பரிக்கும் ஒரு சமுத்திரம். ஆனால், சூரிய உதயத்தில் இந்தக் கடல் குளம் போல் வற்றி, நிஷ்க லிங்கேஸ்வர் கோயிலுக்கு செல்லும் பாதையாக மாறிவிடுகிறது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இங்கு வழிபட்டால், புண்ணியம் அதிகம் என்பது ஐதீகம். ஆனால், இந்த இரண்டு நாட்களிலும் அலைகளின் வேகம் அதிகமாக இருக்கும்
சிவனை தரிசிக்க செல்லும் ஆர்வத்தில், கோலியாக் கடற்கரையில் குவியும் பக்தர்கள் அலைகளின் வேகம் தணிந்து, வழி உருவான பின்னர் நடந்து சென்று சிவனை தரிசித்து வருகின்றனர். இந்த நிஷ்காலங்க் மகாதேவர்

Saturday, 11 April 2015

லிங்கம் மீது விழும் சூரிய ஒளி வேலூர் அருகே அபூர்வ நிகழ்வு!

வேலூர்: லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு, வேலூர் அருகே நிகழ்ந்து வருகிறது. வரும், 12ம் தேதி வரை, இதை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வேலூர் மாவட்டம், திருவலம் வள்ளிமலை அருகே விண்ணம்பள்ளி கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கருவறையில், லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு, ஆண்டுதோறும் பங்குனி, 23 முதல் 29 வரை, காலை, 6:15 மணி முதல், 6:45 மணி வரை நடக்கிறது. இந்த நிகழ்வு, 850 ஆண்டுகளாக நடப்பதாக கூறப்படுகிறது. கோவில் கருவறையில் லிங்கம் மீது, நேற்று முன்தினம் காலை, 6:25 மணி முதல், 6:45 மணி வரை சூரிய ஒளி விழுந்தது. இதை, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வு வரும், 12ம் தேதி வரை தொடரும். இந்த நாட்களில், பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையில், வேலூரில் இருந்து, 23வது கிலோ மீட்டரில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது. சூரியன், தட்சணாயண காலத்தில் இருந்து, உத்தராயணத்துக்கு மாறும் போது, லிங்கம் மீது, சூரிய ஒளி விழும் நிகழ்வு நடக்கிறது.

Wednesday, 8 April 2015

தமிழர் வாழும் நாடுகள் - இந்தோனேசியாவில் தமிழர்கள்

இந்தோனேசியாவில் தமிழர்கள் 

சாவகம் (ஜாவா), சுமத்திரா, பாலி, காலிமன்தான் (போர்னியோ), குலவேசி (செலிபிஸ்), இரியன் ஜயா (நீயூகினி) போன்ற 13,700 தீவுகள் அடங்கிய பகுதிகளைத்தான் இன்று இந்தோனேசியா என அழைக்கிறார்கள். இத்தீவுக் கூட்டங்கள் மலேயா தீபகற்பத்திலிருந்து நீயூகினி வரை பரவிக் கிடக்கின்றன. இரியன் ஜயாவின் கிழக்குப் பகுதியிலும், வட போர்னியாவின் பகுதிகளாக இருக்கும் சரவாக், சபா எல்லைகளிலும் மட்டும்தான் இந்தோனேசியாவின் நில எல்லை அமைப்புகளைப் பார்க்கலாம். தென்žனக் கடலும் பசிபிக் பெருங்கடலும் இந்து மாக்கடலும் 74,101 சதுர மைல்கள் அடங்கிய இத்தீவுக் கூட்டங்களைச் சுற்றிலும் அமைந்துள்ளன.

தமிழர் குடியேறிய வரலாறு :

சங்க கால நூல்களில் இந்தோனேசியாவைப் பற்றிய சில செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மொலுக்காஸ் போன்ற தீவுப் பகுதிகள் முந்நீர்ப் பழந்தீவு என இந்நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இத்தீவுகளைப் பன்னிராயிரம் என மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகின்றது. தமிழர்கள் ஜாவாவைச் சாவகம், சாவகத் தீபம், யவத் தீபம் என்றும், சுமத்திராவை, சிரிவிசயம், சொர்ணதீபம் என்றும் அழைத்து வந்தனர். பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளிலிருந்து, தமிழ் வணிகர்களும், தமிழ்ப் பெருமக்களும் சங்க

Monday, 6 April 2015

கோவில் குளத்தில் அம்மன் பாதம் !

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பிடாரி அம்மன் கோயில் அருகே உள்ள குளத்தில் அழியாதத் தடங்கள் இரண்டு தெரிந்ததால் அப்பகுதியில் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து அதிசயித்தனர். புதுக்கோட்டை அருகே திருவரங்குளத்தில் உள்ளது பிடாரி அம்மன் கோயில். இந்தக் கோயில் அருகே சுப்பிரமணியர் தீர்த்தம் என்றழைக்கப்படும் குளம் உள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு குளம் தூர்வாரப்பட்டது. அதன்பிறகு 15 ஆண்டுகளாக இந்தக் குளத்தில் உள்ள தண்ணீர் வற்றவேயில்லை. இக்குளத்திலிருந்து எடுத்து வரப்படும் நீரால்தான் பிடாரி அம்மனுக்கு தினமும் அபிஷேகம் செய்யப்பட்டுவருகிறது. இதன் காரணமாக இக்குளத்தில் இன்று வரை பெண்கள் யாரும் நீராடுவதில்லை. மேலும் அம்மன் நடமாட்டம் உள்ளது என்ற நம்பிக்கையால் குளக்கரைப் பகுதியில் யாரும் தனிமையிலும் செல்வதில்லை.

இந்து கோவில்களின் பின்னணியில் இருக்கும் அறிவியல் ரீதியான காரணங்கள்!

இந்தியா என்ற இடம் பல விஷயங்களுக்காக அறியப்படுபவையாகும். அதில் முக்கியமான ஒன்றாக விளங்குவது நம் தனித்துவமான பண்பாடாகும். இந்த பண்பாடு பல விஷயங்களை சூழ்ந்துள்ளது: உணவு, ஆடை, சடங்குகள், நம்பிக்கை மற்றும் பல விஷயங்கள். நம்பிக்கையைப் பற்றி பேசுகையில், இந்தியா கண்டிப்பாக உங்களுக்கு பல ஆச்சரியங்களை அளிக்கும். நம் நாட்டில் பல நம்பிக்கைகள் மிக தீவிரமாக வளர்ந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதில் ஒவ்வொரு நம்பிக்கைக்கும் தனக்கென தனித்துவமான ஒரு முகம் உள்ளது. உலகத்தில் உள்ள பல மக்களின் ஆவலை தூண்டும் விதமாக இந்த நம்பிக்கைகள் அமைந்துள்ளது; ஏன் இன்னமும் ஆவலை ஏற்படுத்திக் கொண்டு தான் உள்ளது. இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள்! உலகத்தில் உள்ள மிக பழமையான நம்பிக்கைகளில் ஒன்று தான் இந்து மதம். பல வித சடங்குகள், கருத்துக்கள், மரபுகள் மற்றும்

Wednesday, 1 April 2015

சிவன் கோயில்தான் தாஜ்மகாலானது : வக்கீல்கள் வழக்கால் பரபரப்பு


ஆக்ரா : ‘தாஜ்மகால் முகலாயர்களின் நினைவுச் சின்னமல்ல. அது பழமையான சிவன் கோயிலாகும். எனவே இந்துக்களுக்கு சொந்தமானது என அறிவிக்க வேண்டும்‘ என்று வக்கீல்கள் வழக்கு தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Saturday, 28 March 2015

இந்து மதம் ஒரு பொக்கிசம்

இந்த மதம் தான் இந்து மதம் என்றில்லை, எல்லா மதமும் இந்து மதம்தான் என்பதே என் கருத்து. 2010ம் ஆண்டு இந்த களம் பற்றிய சிந்தனை வந்தது. அன்றைய காலக்கட்டத்தில் மதம் பற்றி அறிந்திருந்தைவிட இப்போது பன்மடங்கு அதிகமாக அறிந்திருக்கிறேன். அப்போது பெருந்தெய்வங்களை மட்டுமே அறிந்திருந்த நான், இப்போது நாட்டார் தெய்வங்களைப் பற்றிய அறிவையும் வளர்த்திருக்கிறேன். அத்துடன் தத்துவார்த்த நிலைகளைப் பற்றிய புரிதல்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன். என்னிடமிருந்த மாற்று மதங்களின் மீதான வெறுப்புணர்வு அம்மதங்களின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டமையால் குறைந்திருக்கிறது. அப்பாவிடம் இருந்து வந்த கடவுள் மறுப்பும், இப்போது திராவிட நண்பர்களிடம் இருந்து கிடைக்கப் பெரும் பகுத்தறிவும் என்னுடைய கட்டுரைகளை செம்மையாக்க உதவும் என நினைக்கிறேன். என்நிலை வர்ணனை இதோடு போதும் கட்டுரைக்கு செல்வோம்.
கோவில் நிகழும் பாகுபாடு -

கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

  நீண்ட நாட்களுக்கு பின் ஆன்மிகப் பக்கத்தை அறிவியலுடன் தொட்டுப் பார்க்கலாம் என ஒரு சின்ன முயற்சி இதில் சில பழமைவாதிகளுக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம்.
      ஏன் என்று கேட்பதால் தான் இதுவரை எம்மை மனிதரென்று அழைக்கிறார்கள் இப்போ நான் கேட்கிறேன். தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.
          கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற்கு சரியான காரணம் இருக்கத் தான் செய்கிறது. மனிதனின் முக்கிய வியாபார ஸ்தாபனமாக கோயில்களும் கடவுள்களும் மாற்றப்பட்டு விட்டாலும் அதன் புனிதம் யாரோ ஒருவரால் காக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

 நம்மவர் எந்த இடம் போனாலும் தம் பெயரை ஏதோ ஒரு வகையில் பொறித்திருப்போம் அதில் ஒன்று தான் நாம் பார்க்கப் போகும் இக் கோயிலாகும் இதன் பெயர் அங்கோர்வாட் (Angkor Wat ) என்பதாகும்.
                இது கம்போடியாவில் அமைந்துள்ளது. அங்கோர் என்பது தலை நகரம் அல்லது புனித நகரம் என பொருள்படும். கி.பி 12 ம் நூற்றாண்டில் 2 ம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் கோபுரங்கள் நிலத்திலிருந்து ஏறத்தாள 64 மீட்டர் உயரமானவை.  2 ம் சூரியவர்மன் இந்து அரசானாக இருந்தவன்

Thursday, 12 March 2015

உத்தரப்பிரதேசத்தில் மதநல்லிணக்கத்துக்கு அடையாளமாக முஸ்லிம் கட்டிய சிவன் கோயில்!


மதுரா: அடிக்கடி மதக்கலவரம் ஏற்படும் உத்தரப்பிரதேசத மாநிலத்தில் மதநல்லிணக்கத்துக்கு உதாரணமாக, முஸ்லிம் ஒருவர் இந்துக்களுக்காக கோயில் கட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே சாஹர் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் தலைவரான அஜ்மல் அலி ஷேக் என்பவர் தனது கிராமத்தில் வாழும் இந்துக்களுக்காக தனது சொந்தப் பணத்தில் ரூ. 4 லட்சம் செலவிட்டு சிவன் கோயில் கட்டிக்கொடுத்துள்ளார். 
இதற்காக 8 மாதங்களுக்கு முன் கோயில் கட்டுமானப் பணி தொடங்கியது. தற்போது இப்பணி நிறைவுற்று, அங்கு சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இராமர் பாலத்தைப் பற்றிய திடுக்கிடும் சில தகவல்கள்!

இராமர் பாலம்! இராமயணத்தில் இராம சேது என குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று பொக்கிஷம். இதை இன்னும் பலர் உண்மையா, பொய்யா என விவாதித்துக் கொண்டிருக்கையில், ஆம்! இராம சேது உண்மை தான், இது ஒரு வியக்கத்தக்க கட்டுமானம் என புகழாரம் சூட்டியிருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள். இன்றைய உயர் தரமான தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு கட்டுமானத்தை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடிக்க முடியாது. நமது இந்தியர்கள் கட்டிட கலையிலும், தரத்திலும் அப்போதே மிக சிறந்தவர்களாக இருந்துள்ளனர். கடந்த சில நூற்றாண்டுகள் வரையிலும் கூட அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அதற்கு நமது தஞ்சை பெரியக்கோவில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இராமாயணம் அறிந்திருப்போம், இராம புராணம் மற்றும் இராம சேது எப்படி

Wednesday, 11 March 2015

அறிவியல் வியக்கும் விஷ்ணு சஹஸ்ர நாமமும் கம்ப்யூட்டரும்

இந்துத் தத்துவம் விளக்கும் ஆன்மிக ரகசியங்களை அறிவியல் ஆராயத் தலைப்பட்டபோது அதன் முடிவுகள் பிரமிப்பூட்டின!
மந்திரங்களின் மகிமை, ஒலியின் மகிமை என்று ஒவ்வொன்றாக ஆராய்ந்து அவற்றை அறிவியல் ஆமோதித்தபோது பழம்பெரும் தத்துவங்களின் உண்மையும் அவற்றைக் கண்ட ஞானிகளின் பெருமையும் உலகிற்குத் தெரிய வந்தன.
விஷ்ணு சஹஸ்ர நாமமும் கம்ப்யூட்டர் ஆணைகளும்
விஷ்ணுசஹஸ்ர நாமம் தொன்று தொட்டு நமது இல்லங்களில் அன்றாட பாராயணமாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு அற்புத ஸ்தோத்ரம்.
இதை நன்கு ஆராய்ந்தவர் டாக்டர் ஆர்.வி.எஸ்.எஸ். அவதானுலு.
இவர் ஹைதராபாத்தில் வேதபாரதி என்னும் சம்ஸ்கிருதம் மற்றும் வேத

நாசாவை அதிரவைத்த திருநள்ளாறு ஆலயம்..!!...

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது.இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது....
ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில்