Showing posts with label பெரியார்கள். Show all posts
Showing posts with label பெரியார்கள். Show all posts

Tuesday, 21 April 2015

சிவனைப் பற்றி அப்துல் கலாம் கூறியவை.

ஒரு தமிழனாக அப்துல் கலாமை நாம்
மதித்தே ஆகவேண்டும்.
இந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள்
என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்து பல
நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த
ஆராய்சியின் நோக்கம்
பூமி எப்படி உருவானது என்பது தான். அதன்
அடிப்படையில் விஞ்ஞானிகள்
ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள்
அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த
ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என
எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் இந்த
ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத்

Saturday, 18 April 2015

ஆதிபகவன் முதற்றே உலகு

வான்புகழ் கொண்ட வள்ளுவன் என்று பாரதியால் போற்றப்படும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இன்றளவும் வாழ்வின் நெறியாளுகைக்கு ஏற்ற நூலாக உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. அத்துடன் காலந்தோறும் புதப்புது விளக்கங்களை அளிக்கக் கூடிய செறிவு அதனுள் உண்டு. எனவேதான் தோன்றி ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் திருக்குறள் குறித்த ஆய்வுகள் தொடர்கின்றன. திருக்குறள் ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுப் பொருட்களுள் ஒன்று பாயிரவியல்.
பாயிரம் - சொல் விளக்கம்:
தொல்காப்பியத்துக்கு உரையெழுதிய பேராசிரியர், அந்நூலுக்குப்

Tuesday, 7 April 2015

சவுதி அரேபியாவில் திருக்குறளை அரபு மொழியில் வெளியிட்டு சாதனை

சவுதி அரேபியா கலை மற்றும் கலாச்சார மையம், தம்மாம், சவுதி அரேபியா நடத்திய நான்கு நாள் கவிஞர்கள் மாநாட்டில் திருக்குறளை அரபி மொழியில் அறிமுகப்படுத்தி பேசியுள்ளார் முனைவர் ஜாகிர் உசேன்.

திருக்குறளை அரபு உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

நம் தாய் நாட்டுச் சொந்தங்கள், நண்பர்கள் அதிக அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அரபுக் கவிஞர்கள் வள்ளுவரின் வார்த்தைகளை மெய்மறந்து ரசித்தார்கள். இது ஓர் அற்புதமான அனுபவம்” என்று கூறியுள்ளார் முனைவர் ஜாகிர் உசேன்.

சிரவணர்களும்-பிராமணர்களும், ஜைனர்களும்-பௌத்தர்களும், இந்தியர்களும்-கிரேக்கர்களும்

வேதகாலத்தில் அல்லது வேதங்கள் படிப்புமுறையாக இருந்த காலத்தில் மஹாவீரர்-புத்தர் தோன்றியது: மஹாவீரரும், புத்தரும் திடீரென்று அறிவாளிகளாக, ஞானிகளாக, தீர்த்தங்கராக அல்லது புத்தராகிவிடவில்லை. பாரதத்தில் பிறந்ததால் வேதங்கள், வேதாங்கங்கள் மற்றும் இதர புத்தகங்களைப் படித்துதான் அந்நிலையை அடைந்திருந்தார்கள். குருகுலத்தில் பிராமணர்களிடம்தாம் அவர்கள் பயின்றார்கள். க்ஷத்தியர்களாக இருந்தும் அந்நிலையை அடைந்தார்கள் எனும்போது, அக்காலத்தில் எந்தவித வேறுபாடும் இல்லையென்றாகிறது. அதாவது, வேதங்களை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் கற்கலாம் என்றிருந்தது. இருந்த பிராமணர்களுடன் வாதிட்டு, தத்தமது புதிய கருத்துகளை மக்களிடம் பரப்பி அவர்கள் தங்களது சீடர்களை, நம்பிக்கையாளர்களை, அபிமானிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இவற்றை அந்தந்த ஜைன-பௌத்த நூல்களே எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், பாரதத்தின் வடமேற்கு பகுதிகள் வழியாக ஜைனர்களின் வெளியேற்றம், கிரேக்கர்களின் நுழைவுகள் சில மாற்றங்களை ஏற்படுத்தின.

1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்னர் அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. அக்காலத்தில் சுற்றிலும் இருந்த நாகரிகத்தவர் சிறந்திருந்ததால், அரேபிய மக்களும் சிறப்பான நாகரிகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களில் முனிவர், அறிஞர், சித்தர், ஞானியர் போன்றோர் இருந்திருக்கவேண்டும். மக்கள் ஆரோக்யம், உடல்நலம் விஷயங்களிலும் சிறந்திருக்க வேண்டும். அதற்கான மருத்துவமுறையும்  இருந்திருக்க வேண்டும்.  அப்படியிருக்கையில், இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்பான அரேபிய சரித்திரம் இருட்டடிக்கப் பட்டுள்ளது. அம்மக்கள் இருண்ட காலத்தில், அறியாமையில், விக்கிர ஆராதனை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என்றும் விவரிக்கப்படுகிறது. ஆனால், அவர்களின் மொழியான அரேபியமொழி இன்றைய முஸ்லீம்களுக்கு தேவமொழியாக இருக்கிறது. நபி பேசிய மற்றும் குரான் மொழி அரேபிய மொழிதான். பிறகு அத்தகைய தேவமொழியைப் பேசி வந்தவர்கள் எப்படி இருண்ட காலத்தில், அறியாமையில் மூழ்கியிருந்தார்கள் என்று தெரியவில்லை.

Thursday, 2 April 2015

70 வருடமாக உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் வாழும் இந்திய மகான்

70 வருடமாக உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் வாழும் இந்திய மகான்..ப்ரகுலாத் ஜனி என்னும் இந்த மகான். அம்பா ஜி கோவில் அருகில் உள்ள குகைகளில் வாழ்கிறார் . தன்னுடைய 7வயதில் குடும்பத்தை விட்டு வெளியேறி இறை நிலையை தேடி அதை 13 வயதில் அடைந்துள்ளார். அதில் இருந்து உணவு உண்ணாமல் தண்ணீர் பருகாமல் இருந்துவருகிறார் ..உண்மையாகவே இவருக்கு இப்படிப்பட்ட திறமை இருகிறதா என ஆராய ஆராய்ச்சியாளர் குழு ஒன்று இவரை அஹேமாபாதில் உள்ள ஒரு மருத்துவ மனையில் இவரை 15 நாட்கள் தங்க வைத்து 24 மணிநேரமும் இவரை காமெரா முலம் கண்காணித்தனர் .. 15 நாட்களும் இவர் உணவு உண்ணாமல் தண்ணீர் பருகாமல் கழித்தார்..சாதாரன மனிதன் 5 நாட்களிலேயே உணவு உண்ணாமல் இறந்துவிடுவான் என்பது உண்மை ..இவர் கடுமையான யோகா பயிற்சிகள் தியானம் முலம் தன உடலை இப்படி பட்டபக்குவத்திற்கு கொண்டுவந்துள்ளதாக கூறுகின்றனர் .




https://www.facebook.com/Thamil.Siththars/photos/a.370335143059811.87676.239342366159090/695765240516798/?type=1&fref=nf

ok

Wednesday, 18 March 2015

யார் இந்த நிர்வாண அகோரிகள்.? - திடுக்கிடும் மர்மத்தின் மறுபக்கம்

யார் இந்த நிர்வாண அகோரிகள்.? - திடுக்கிடும் மர்மத்தின் மறுபக்கம்பூமி என்பது எப்போதுமே முனிவர்கள், சாதுக்கள் மற்றும் ஆத்மா பலம் நிறைந்த பூமியாக விளங்குகிறது. சாதுக்கள் என்று எடுத்துக் கொண்டால், அவர்கள் அனைவரும் பல வகையான சாதுக்களை சேர்ந்தவர்களாக விளங்குவார்கள். சிலர் காவி நிற ஆடையணிவார்கள், சிலர் கருப்பு நிற ஆடை

Thursday, 5 March 2015

பாரதியின் ஆன்மீக நாத்திகம்

ஐந்து வருடங்களின் முன்னர் “குமுதம்” வார இதழின் அரசு கேள்வி - பதில் பகுதியில் ஒரு கேள்வி, “ உண்மையில் பாரதி ஒரு நாத்திகரா” என்பதாக கேட்கபட்டிருந்தது. எல்லாம்வல்ல ஒரு இறைவன் இயக்க- தான் தாம் ஒரு கருவியாக செயற்படுவது அல்லாமல், ‘ நான் கிருத யுகம் படைக்க நீ ஆமென் என்று வழிமொழிந்து இரும்’ என்பதுட்பட மக்கள் செயற்பாட்டுக்கான சக்தியாக மட்டுப்படுத்தி கடவுளைக்காட்டும் பாரதி வரிகளை எடுத்துக் காட்டிய பின்னர் - இப்படியெல்லாம் பார்க்கும் போது பாரதியை ஒரு நாத்திகராகவே காண முடிகிறது” என்பதாக அரசின் பதில் அமைந்திருந்தது. தேசிய விடுதலை- சாதியொழிப்பு- பெண்விடுதலை- வறுமைத் தகர்ப்பு – சமத்துவ சமூக படைப்பு என்பவற்றுக்காக மக்களைச் கிளர்ச்சிக் கொள்ள உணர்வூட்டும் படைப்புகளையும் செய்தி வெளிப்பாடுகளையும் எழுதுவதையே தனது தொழில் துறையாகக் கொண்டிருந்தார் பாரதி. கடவுளின் கருவியாக மனிதனை- மனுசியைப் பார்ப்பதை விட்டொழித்து ,

Wednesday, 4 March 2015

பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவின் ஆன்மீகம் கடந்த சமூக சாதனைகள்

உலக சுழற்சியில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல்வேறு நபர்கள் கடந்து போகிறார்கள். அவர்கள் மீது நாம் நோக்கும் பக்கமே அவர்கள் மீதான தோற்றப்பாட்டை எம் மீது உட்செலுத்துகிறது.
தகவல் தொடர்பாடல் வளர்ச்சியின் பின்னர் சாதகமான கருத்துக்கள் செய்திகளின் பரம்பல் வேகத்திற்கீடாக எதிர்மாறான பரப்புரைகளும் வாதந்திகளும் சம வேகத்தில்  பரவவிளைந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் சிலரது நல்ல பக்கங்களும் மெது மெதுவாக மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டு செல்கிறது.
இந்த நூற்றாண்டில் உலகை விட்டுப் பிரிந்தவர்களில் மிக முக்கியமான சரித்திர நாயகர்களில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவும் ஒருவராகத் திகழ்கின்றார். இவரை ஒரு ஆன்மீகவாதியாகவும், மத பரப்புரையாளராகவும், மதச் சிந்தனையாளருமாகவே பலர் நோக்குகையில் ஒரு பெரும் தேசத்தின்

Sunday, 1 March 2015

சிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்


lingayat_womenசமுதாய சீர்திருத்தவாதிகள் தனி மனிதர்களாக தம்மை வெளிப் படுத்திக் கொள்ளாமல் ஒரு சக்தியாகவே செயல்பட்டு வந்திருக்கின்றனர். அவ்வகையில் 12 ம் நூற்றாண்டில் கன்னட இலக்கிய மற்றும் பக்தி உலகில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்த ’வசனகாரர்கள் ’ என்ற அடை மொழிக்குரியவர்கள் வீர சைவர்களாக அமைந்து

Friday, 27 February 2015

வள்ளுவன் காட்டும் இறைவன்...

எனது இந்த 50வது பதிவு, நிலையான ஒரு தத்துவத்தை பற்றியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நிலை மாறும் இவ்வுலகில் நிலையான ஒன்று இறைவன் மட்டுமே. இறைவனை விவாதப் பொருளாக எடுத்தால், அந்த விவாதம் முற்றுப் பெறாது என்பதை, எனது முந்தைய பதிவில் தெரிவித்து இருந்தேன். இம்முறை இறைவனை பாடுபொருளாக வைத்து எழுத எனக்கு தகுதியில்லை என்பதை நன்கு அறிவேன். அச்சமயம், எனது ஆசான், வள்ளுவன் என் நினைவுக்கு வந்தான். நாம் தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகள், கேள்விகள், சந்தேகங்கள், அனைத்திற்கும் வள்ளுவனின் குறளில் தீர்வு உள்ளது. அப்படியென்றால் இறைவனை பற்றிய எனது கேள்விக்கும் வள்ளுவனிடம் பதில் இல்லாமலா போய்விட போகிறது.