Saturday, 18 April 2015

ஆதிபகவன் முதற்றே உலகு

வான்புகழ் கொண்ட வள்ளுவன் என்று பாரதியால் போற்றப்படும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இன்றளவும் வாழ்வின் நெறியாளுகைக்கு ஏற்ற நூலாக உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. அத்துடன் காலந்தோறும் புதப்புது விளக்கங்களை அளிக்கக் கூடிய செறிவு அதனுள் உண்டு. எனவேதான் தோன்றி ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் திருக்குறள் குறித்த ஆய்வுகள் தொடர்கின்றன. திருக்குறள் ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுப் பொருட்களுள் ஒன்று பாயிரவியல்.
பாயிரம் - சொல் விளக்கம்:
தொல்காப்பியத்துக்கு உரையெழுதிய பேராசிரியர், அந்நூலுக்குப்

சித்தர்களின் உளவியல்

சமூகத்தின் உள்ளடக்கங்களில் எதிர்மறை அம்சங்கள் தவிர்க்க இயலாதவை. என்றாலும் இவற்றுக்கு எதிரான குரல்கள் எழுவதும் எல்லாக் காலகட்டத்திலும் தவிர்க்க முடியாதது. தமிழ்ச் சூழலில் இத்தகைய எதிர்ப்பபுகளை நிகழ்த்தியவர்களுல் சித்தர்களுக்குத் தனியிடம் உண்டு. அவர்கள் தம்மைச் சுற்றி நிகழ்ந்த அவலங்களைப் பொறுக்க முடியாமல் அவற்றிலிருந்து விடுபட்டு சமூக வெளிக்கு அப்பால் நின்று சாடியவர்கள். மக்கள் படும் துயரங்களைக் கண்டு அவற்றுக்கான காரணத்தைத் தேடியலைந்த சித்தர்களின் மனம் நிலையாமைத் தத்துவத்தைக் கண்டடைந்து அதனைப் பறைசாற்றியது. வாழ்வின் அனைத்துக்

Friday, 17 April 2015

ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?

தமிழின் சிறப்பு...
ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும்
வார்த்தைகளைக் கொண்டு கதை
எழுத முடியுமா?
அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும்
வார்த்தைகளால் வடிவமைக்கப்
பட்டுள்ளது.\
" இதுவே தமிழின் சிறப்பு"
++++++++++++++++++++++++++++++
அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு

பகவத் கீதையில் சாதி உள்ளதா?

ஒருவனது குணமே அவனது சாதி !!
"பிறப்பல்ல"


பிறப்பின் அடிப்படையில் சாதி இல்லை. குணத்தின் அடிப்படையில் இருப்பதுதான் சாதி. இல்லாத காரணத்தை கூறி . புரோகிதர்கள் நம்மைஅடிமைப்படுத்தினால் அதற்கு இந்துமதமா காரணம்?.....

கீதை..அத்18.சுலாகம்..41..சுபாவத்தின் அடிப்படையின் மனிதர்கள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளார்கள்.

கீதை 18.42...மனத்தை அடக்குதல் புலன்களை அடக்குதல்..பரமாத்மாவின் காட்சி.அனைத்து உயிர்களையும் சசமாக காணல் இவை பிராமண குணங்கள்...

கீதை18.43..வீரம் தைரியம் தானம் தெளிவான சிந்தனை இவைகளையுடையோர் ஷத்திரியர்கள்.

தங்கத்தால் இழைக்கப்பட்ட அரண்மனையில் அரங்கேறிய இளவரசரின் திருமணம் உலகையே வியப்பில் ஆழ்த்தியது

  • புருனேய்(Brunei) நாட்டு மன்னர் தனது மகனின் திருமணத்தை தங்கத்தால் இழைக்கப்பட்ட அரண்மனையில், ஆடம்பரமாக நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.உலக பணக்கார குடும்பங்களில் ஒன்றான புருனேய் நாட்டு மன்னர், தனது 6 வது மகனான அப்துல் மாலிக்(Abdul Malik-31) என்பவருக்கு திருமணம் நிச்சயத்திருந்தார்.இதனை தொடர்ந்து நேற்று புருனேய் தலைநகரில் உள்ள Istana Nural Iman அரண்மனையில்,உலகமே வியக்கும் வகையில் ஆடம்பரமாக இந்த திருமணம் நடந்துள்ளது.

Thursday, 16 April 2015

கடலுக்குள் மூழ்கிய தமிழனின் குமரிக்கண்டம் : மறைக்கப்பட்ட வரலாறு

இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.
நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச்

உருவ வழிபாடு, சிலை வழிபாடு சரியா?

விவேகானந்தர் ஒரு தடவை ஒரு மன்னரைச் சந்திக்கச் சென்றபோது ‘உங்கள் சமயத்தில் ஏன் உருவ வழிபாடு இருக்கின்றது. அது முட்டாள் தனமல்லவா’ என்று மன்னர் கேட்டார். உடனே விவேகானந்தர் அமைச்சர்களிடம் மன்னரின் புகைப்படம் ஒன்றை கொண்டுவருமாறு கேட்டார். அவர்களும் மன்னரின் படம் ஒன்றைக் கொடுத்தனர்.   அதன் மீது விவேகானந்தர் காறி உமிழ்ந்தார். அப்போது காவலர்கள் விவேகானந்தர் மீது சினமடைந்து அவரைக் கைதுசெய்ய முன்வந்தனர். அப்போது விவேகானந்தனர். மன்னரின் இந்தப் படம் வெறும் படம் என்றால் ஏன் கோபப்படுகின்றீர்கள். இது மன்னருக்குச்

Wednesday, 15 April 2015

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

பொட்டு : பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.
தோடு : மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் .
நெற்றிச்சுட்டி : நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை
சரி செய்கிறது.

உலகளந்த பெருமாளின் வாமன அவதாரம் பற்றி எந்த வேதங்களிலும் சொல்லப்படாத ஆழமான ரகசியம்:

உலகளந்த பெருமாள் என்று சிறப்பாக விஷ்ணு புகழப்படுவதற்கு காரணமாக இருக்கும் வாமன அவதாரத்த்தில், விஷ்ணு ஒரு குள்ளமான பிராமணனாக வந்து, தேவர்களின் சொர்கத்தை தன் யோக பலத்தால் வென்ற மகாபலியிடம் இருந்து சொர்கத்தை மீட்டெடுப்பதற்காக, மகாபலியிடம் மூன்றடி நிலம் மட்டும் தனக்கு வேண்டும் என்று வாமனன் கேட்கிறார். மூன்றடி நிலம் தானே, உனக்கு எங்கு வேண்டுமானாலும் மூன்றடி நிலத்தை உன் விருப்பம் போல் எடுத்துக்கொள் என்று மகாபலி சொல்லி முடித்த உடனே, வாமணனின் விஸ்வரூப தரிசனத்தை கண்டு நடுங்கும் மகாபலி, வந்திருப்பது விஷ்ணு தான். அதனால் தான் முதல் இரண்டடியிலேயே பாதாள உலகத்தையும், சொர்கலோகத்தையும் அளந்து விட்டார். மூன்றாவது அடி வைக்க இடம் இல்லாததால் தன் தலை மீது மூன்றாவது அடியை வைக்க சொல்கிறார் என்பது என்னவோ நாம் எல்லோருமே வேதங்களின் மூலம் அறிந்த விசயமே. ஆனால் இதற்காக இப்பொழுது இருக்கும் நாம் ஏன் அவரை கோவில் கட்டி கும்பிட வேண்டும் என்று நம் பகுத்தறிவு கேட்கும் போது, இந்த கதையை

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது.
புலி கரடியிடம் கூறிற்று: இவ்வேடன்: நமது மிருக குலத்துக்கே பகைவன்; இவனைக் கீழே தள்ளி விடு! இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று.
சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று: எனக்கு பசியாக இருக்கிறது. நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.

முருகனும் தமிழும்..

1.தமிழ் மொழி என்றும் இளமை மாறாத மொழி. எம்பெருமான் முருகன் என்றும்
அகலாத இளமையுடயவன்.
2.தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு, முருகப் பெருமானின்
தோள்கள் பன்னிரெண்டே.
3.முருகனுக்குத் திருமுகம் ஒவ்வொன்றிலும் மூன்று கண்களாக மொத்தம்
பதினெட்டு நயனங்கள். தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு.
4.முருகவேளின் முகங்கள் ஆறு. வீடுகள் ஆறு.பிரணவ மந்திர எழுத்து
ஆறு(ச,ர,வ,ண,ப,வ) தமிழில் இன எழுத்துக்கள் ஆறு.(வல்லினம், மெல்லினம்,இடையினம் ஆகியவை ஆறு ஆறு எழுக்கள்).
5.முருகனின் ஆயுதம் வேல். இது எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிநிலை
ஆயுதமாகும். தமிழில் ஆயுத எழுத்து(ஃ) தனிநிலை. அதுமட்டுமல்ல, ஆயுதஎழுத்தின் மூன்று புள்ளிகளையும் பாருங்கள், வேல் வடிவில் அமைந்து

அருகம்புல்லின் மகிமையும், மருத்துவமும்

அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல், வரப்புகள், வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகையாகும். இது சல்லிவேர் முடிச்சுக்கள் மூலமும், விதைகளின் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது. 

மருத்துவப் பயன்கள்: 

அருகம் புல் உடல் தாது வெப்பு அகற்றித் தாகம் தணிப்பானாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், நோய் நீக்கும் உடல் தேற்றியாகவும், காமம் பெருக்கியாகவும் செயற்படும். கணுநீக்கிய அருகம்புல் 30 கிராம், மாதுளை

இந்துமதம்-ஓர்அறிமுகம்

தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பாரத புண்ணியபூமியின் வாழ்க்கைமுறைக்கு இந்துசமயம் என்று பெயர். உண்மையில் இந்துமதம் என்பது ஒரு தனி மதம் அல்ல. அது ஒரு குறிப்பிட்ட, தனிச்சிறப்புமிக்க வாழ்க்கை முறை ஆகும். இந்துமதம் எனும் பெயர் வெளினாட்டினரால் நமக்கு வைக்கப்பட்ட பெயர் வழக்கம்போல் அப்பெயரே நிலைத்துவிட்டது. நம்மவர்கள் அந்த உயர்ந்த வாழ்க்கை நெறியை தர்மம் என்றே அழைத்தனர்.
அந்த தர்மநெறி, வாழும் மக்களின் குணாதிசயங்களை அங்கீகரித்து அவர்கள் தத்தமது தன்மைக்கேற்றாற்போல் தர்மத்தைக்கடைபிடித்து வாழ்வில் முன்னேற வழிவகை செய்துள்ளது. ஆகவேதான் இந்த தர்மம் தன்னை

இஸ்லாம்பற்றி ஒரு முஸ்லிமின் பார்வை

இஸ்லாம் ஒரு மதம் மட்டுமல்ல. அது ஒரு அரசு….எல்லா விதமான அரசுகளையும் தூக்கி எரிந்துவிட்டு உலகம்முழுக்க மதத்தின் ஆட்சியை கொண்டுவரும் இலக்கைக் கொண்ட ஒரு எதேச்சாதிகார அடக்கு முறை கொள்கை.
நாம் கவலை கொள்ள வேண்டியது இது மனித இனத்திற்கு ஒரு பேராபத்து என்பதைப் பற்றித்தான். இஸ்லாம்

ஒரு பேய்க்கதை

அவன் அந்த அறையில் நடந்து கொண்டிருந்தான். அந்த அறையில் அவன் மட்டும் இருந்தான். ஒளி குறைவாக இருந்தது. அங்கிருந்த கட்டிலில் ஒரு தலையணை மட்டும் இருந்தது. அங்கிருந்த கடிகாரம் சரியாக 12 முறை அடித்தது. மேலிருந்த பேன் ஓட வில்லை, இருந்தும் அவனுக்கு வேர்க்கவில்லை. பேய்க்கதை எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவனிடம் மேலோங்கியது. தரையில் ஒரு படம் வரையப்பட்டிருந்தது. அருகில் வெறுமையான மருந்துப்புட்டி மட்டும் இருந்தது. அறையை கழுவி ஒரு வாரம் இருக்கலாம். திடீரென்று அவன் முகம் பிரகாசமானது. அங்கிருந்த மேசையில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்தான். வாரம் ஏழு லட்சம் பிரதி வெளியாகும் ஒரு வாரப்பத்திரிக்கை அவன் அருகே காற்றில் ஆடியது. காற்று அந்த பத்திரிக்கையின் ஒரு பக்கத்தை மட்டும் படிக்க தன்னை தானே நிறுத்தி கொண்டது. அந்த பக்கத்தில் ஒரு புத்தகத்தின் விமர்சனம் இருந்தது,

நான் + ஆத்திகன் = நாத்திகன்.

"இறைவன் இருக்கிறாரா?", பற்பல வருடங்களாக நடந்து வரும் ஒரு பெரிய கருத்து மோதலின் சிறு பகுதி என்று இதை கொள்ளலாம். இந்த கட்டுரையின் நோக்கம் தீர்வல்ல. தீர்வை நோக்கிய ஒரு பயணம். இதில் பயணப்பட விரும்புவர் மட்டும் தொடரவும். மற்றவர் இந்த இடத்திலே பிரிந்து கொள்ளலாம்.

இந்த கட்டுரையில் எனது மனத்திற்கும், எனது அறிவிற்கும் நடக்கும் ஒரு உரையாடலைத்தான் எழுதி இருக்கிறேன். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால், மனம் என்பது ஒரு பஞ்சு போல். எந்த விஷயம் சொன்னாலும் அப்படியே ஏற்று கொள்ளும். பஞ்சு நீரை, நெருப்பை ஏற்று கொள்வது போல். அறிவு என்பது அன்னம் போல். நீரையும், பாலையும் வைத்தால் பாலை மட்டும் பிரித்து எடுத்து கொள்ளும். அறிவு என்பது நல்லது, கெட்டது எனப் பகுத்தறிந்து சரி எனப்படுவதை மட்டும் எடுத்துக்கொள்ளும். 

வள்ளுவன் காட்டும் இறைவன்...

எனது இந்த 50வது பதிவு, நிலையான ஒரு தத்துவத்தை பற்றியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நிலை மாறும் இவ்வுலகில் நிலையான ஒன்று இறைவன் மட்டுமே. இறைவனை விவாதப் பொருளாக எடுத்தால், அந்த விவாதம் முற்றுப் பெறாது என்பதை, எனது முந்தைய பதிவில் தெரிவித்து இருந்தேன். இம்முறை இறைவனை பாடுபொருளாக வைத்து எழுத எனக்கு தகுதியில்லை என்பதை நன்கு அறிவேன். அச்சமயம், எனது ஆசான், வள்ளுவன் என் நினைவுக்கு வந்தான். நாம் தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகள், கேள்விகள், சந்தேகங்கள், அனைத்திற்கும் வள்ளுவனின் குறளில் தீர்வு உள்ளது. அப்படியென்றால் இறைவனை பற்றிய எனது கேள்விக்கும் வள்ளுவனிடம் பதில் இல்லாமலா போய்விட போகிறது. இறைவனை பற்றிய எனது ஏழு (ஒவ்வொரு குறளின் நீளம் ஏழு வார்த்தைகள்தானே..) கேள்விகளுக்கு வள்ளுவன் கூறும் பதிலை காணலாம்.

நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 4 (ஆத்மஞானம்)

நான் ஆத்மா பேசுகிறேன். அருட்பெருஞ்ஜோதியான இறைவனின் ஒரு துளி நான். என் இயல்புகள், நோக்கம், ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை.

இயல்புகள்: ஒரு புள்ளி வடிவத்துடன் இருப்பவன் நான். எனக்கு அழிவில்லை. இறைவனின் கட்டளைப்படி பிறவி எடுக்க வேண்டியது என் கடமை. நான் பக்குவப்பட்டால், உணர/அறிய ஒன்றும் இல்லாத பட்சத்தில் பிறவி எடுக்க வேண்டியதில்லை. அதை முடிவு செய்பவரும் இறைவனே. இறைவனின் படைப்பில் எல்லா ஆத்மாக்களுக்கும் சமமே. இறைவனின் துளி என்பதால், எனது இயல்பு சுயநலமற்ற தூய அன்பு. அந்த அன்பின் வெளிப்பாடாகிய பிற ஆத்மாக்களுக்கு உதவி செய்வதே எனது சுயதர்மம். அமைதியாய், ஆனந்தமயமாய் இருப்பது எனது இயல்பு.

நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 3 (அன்பே சிவம்)


அன்பும் சிவமும் இரெண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே

என்கிறார் திருமூலர். இறைவன் தூய அன்பின் வடிவமாக வீற்றிருக்கிறார். அது எங்ஙகனம் என்று எனக்கு தெரிந்த வரையில் அறிந்து, ஆராய்ந்து, உணர்ந்து எழுதிய பதிவே இது.

அன்பு:

எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல், பிற உயிர்களிடத்தில் காட்டும் அன்பே, தூய அன்பாக (இறைவனாக) கருத தக்கது. பிரதிபலன் எதிர்பார்த்து, பிற்காலத்தில் உதவும் என்ற உள்நோக்கத்தில் செலுத்தும்

நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 2 (பாவ புண்ணியம்)

"வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?"

என்று கேள்வி எழுப்பியவர் கவிஞர் கண்ணதாசன். 

அதற்கு அழகாக பதில் கூறியவர் பட்டினத்தார். "தொட்டுத் தொடரும் இருவினை பாவ புண்ணியமுமே" அது என்ன பாவபுண்ணியம்? அதை அறிய முயலும் ஒரு முயற்சியே இந்த பதிவு.

மனம், வாக்கு, காயம் (உடல்) ஆகிய மூன்றின் மூலம் பிற உயிரினங்களுக்கு நன்மை செய்வது புண்ணியம் ஆகும். தீங்கு செய்வது பாவம் ஆகும். இந்த பாவமும்,புண்ணியம் மட்டுமே நம்மை/நம் ஆன்மாவை எப்பொழுதும் பற்றிக்கொண்டு வரும்.

நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 1 (ஏன் பல கடவுள்கள்?)

இந்து மதத்தில் மட்டும் பல கடவுள்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. இத்தனை கடவுள்கள் தேவையா என்று என்னுள் எழுந்த கேள்வியின் பதிலே இந்த பதிவு.

நாட்டில் பல கட்சிகள் இருக்கும், ஒவ்வொன்றிற்க்கும் ஒரு தலைவர், ஒரு கொள்கை இருக்கும். அது போல் இந்து மதத்தில் இருக்கும் ஒவ்வொரு கடவுள்களும் ஒரு தத்துவத்தை உணர்த்துகின்றனர். வாழ்க்கை நெறியை நமக்கு போதிக்கின்றனர். அவர்கள் வழியில் பயணப்படுவதே வழிபாடு ஆகும். ஒவ்வொரு இறைவனின் வாழ்க்கை நெறியை நான் அறிந்தவரை இங்கு சொல்லியிருக்கிறேன்.

இந்து மதத்தைப் பற்றிய தவறான கருத்துக்களும்... உண்மைகளும் 02

உலகத்தில் உள்ள மிக பழமையான மதங்களில் ஒன்றாக விளங்குகிறது இந்து மதம். இயற்கையாகவே, பல நூறாண்டுகளாக பல சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் அது ஆளாகியுள்ளது.

சில முறைகேடுகளுக்காக இந்த மதத்தை சிலர் தப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். பண்பாட்டு மாற்றங்கள், ஜாதிகளின் மேலாதிக்கங்கள் போன்ற காரணங்களால் இது காலா காலமாக தொடர்ந்து வருகிறது. ஆனால் உண்மைக்கும் இதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.�

உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம்!!! உலகத்தில் மிக சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான மதங்களில் ஒன்றாக இந்து மதமும் கருதப்படுகிறது. இதனை நல்ல விதமாகவும், கெட்ட விதமாகவும், பலர் இதனை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் நம் மனதில் இந்து மதத்தைப் பற்றி தவறான எண்ணங்கள் குடி கொண்டிருக்கிறது.�

ஆன்மா

இந்து மதத்தில் பலகொள்கைகள் இருந்தாலும் பொதுவாக பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படுவது சைவசித்தாந்தமும் வேதாந்தமுமே இதில் பெரும் பாலோனோர் சைவசித்தாந்தத்தையே ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களை சித்தாந்திகள் என அழைக்கப்படுகின்றனர். வேதாந்தத்தை பின்பற்றுபவர்கள் வேதாந்திககள் என அழைக்கப்படுகின்றனர். சைவசித்தாந்தத்தை நோக்கு வோமானால் அங்கு பதி,பசு,பாசம் எனும் முற்பொருள் உண்மையைப் பெற்றிக்கூறுகின்றது. மெய்ப் பொருளான பரம் பொருள் ,மனிதனனுக்கு அடிப்படையான ஆன்மா, மனிதன் வாழும் உலகம் . இதில்  பதி என்பது இறைவன். பசு என்பது ஆன்மா ஆன்மாவானது பாசத்தால் கட்டுண்டது. பாசமானது மாயை. அது இல்லாததை இருப்பதாகக் காட்டுவது அது கானல்நீருக்கு ஒப்பானது அதனை இயக்குவது ஆணவ மலம் இது செம்பில் களிம்பு போல ஆன்மாவில் பற்றி இருக்கும். இதனை இருள் மலம் என்பர்.

பகவத் கீதை

பகவத் கீதை
பாரதியாரின் முன்னுரை


1.

புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம்
செயல்களிலே திறமையானது (கீதை, 2-ஆம் அத்தியாயம், 50-ஆம் சுலோகம்)

இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக் கெல்லாம் அடிப்படையாம். புத்தியிலே சார்பு எய்தலாவது, அறிவை முற்றிலுந் தௌஒவாக மாசுமறுவின்றி
வைத்திருத்தல், தௌஒந்த புத்தியே மேற்படி சுலோகத்திலே புத்தி சொல்லப்படுகிறது. அறிவைத் தௌஒவாக நிறத்திக் கொள்ளுதலாவது யாதென்றால், கவலை
நினைப்புகளும் அவற்றுக்குக்காதாரமான பாவ நினைப்புகளுமின்றி அறிவை இயற்கை நிலைபெறத் திருத்துதல்.

தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள்




தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது பலபேர் பலமுறையில் சொல்வார்கள். ஆனால் அமைதியான சூழலில் (அதிகாலை உகந்தது) இரு கால்களையும் மடக்கி உட்கார்ந்து இரு கண்களையும் மூடிய நிலையில் அமைதியாக நம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து இருப்பதே தியானம் என அழைக்கப்படுகிறது. இந்த தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. அதில் சில குறிப்பிட்ட நன்மைகளை கீழே கொடுத்துள்ளேன்.

இந்து மதத்தைப் பற்றிய தவறான கருத்துக்களும்... உண்மைகளும்... 01



உலகத்தில் உள்ள மிக பழமையான மதங்களில் ஒன்றாக விளங்குகிறது இந்து மதம். இயற்கையாகவே, பல நூறாண்டுகளாக பல சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் அது ஆளாகியுள்ளது.

சில முறைகேடுகளுக்காக இந்த மதத்தை சிலர் தப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். பண்பாட்டு மாற்றங்கள், ஜாதிகளின் மேலாதிக்கங்கள் போன்ற காரணங்களால் இது காலா காலமாக தொடர்ந்து வருகிறது. ஆனால் உண்மைக்கும் இதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. 

Tuesday, 14 April 2015

இசை பற்றி

லட்சக்கணக்கில் கட்டுரைகள் எழுதினாலும், இசை பற்றி முழுமையான சித்திரத்தை எழுத்தில் வடிக்க முடியாது. இது இசையின் சிக்கல் அல்ல. இசைக்கும் மொழிக்கும் உள்ள தொடர்பு தரும் சிக்கல். சாம்ஸ்கி, க்ளாட் லெவி ஸ்ட்ராஸ் போன்ற அறிஞர்கள் மொழியியல் ஆராய்ச்சியில் இசைக்கூறுகளின் பண்புகளை விளக்கியுள்ளனர். ஆனாலும், மொழியியலின் அடிப்படைகள் தெரியாமல் இக்கட்டுரைகளுக்குள் நம்மால் நுழைய முடியாது.

நாகார்ஜுனனின் மொழியாக்கத்தில் இசையும் தொன்மத்துக்கானத் தொடர்பு பற்றிய விளக்கங்கள் உள்ளன. இக்கட்டுரை ரிச்சர்ட் வாக்னரின் ரிங் என்ற இசை-நாடகத்தை உதாரணமாகக் கொண்டு இசைக்கும் தொன்மத்துக்குமானத்

சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள் [நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!] (மூன்றாம் பாகம்)

சோமாலியா என்ற பெயரைக் கேட்டவுடன் பலர் முகத்தை சுழிப்பார்கள். கடும்போக்கு தமிழினவாதிகள் கூட, பழந்தமிழன் பெருமையை சோமாலியாவுடன் இணைத்துப் பார்க்க விரும்ப மாட்டார்கள். சோமாலியா என்றால், "தினம் தினம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும், ஆப்பிரிக்க மக்களின் நாடு," என்ற வல்லாதிக்க பிரச்சார விதிகளுக்கு உட்பட்டு தான், தமிழனின் பெருமை பேசப்படுகின்றது. இதனால் தமிழன், தனது முன்னோர்கள் வாழ்ந்த ஆப்பிரிக்க தாயகத்தை மறக்க விரும்புகின்றான். அதற்குப் பதிலாக, "குமரி கண்டம்" என்ற கற்பனையான தாயகத்தை, தானே உருவாக்கிக் கொள்கிறான். "தனது சொந்த தாய் ஏழையாக இருப்பதால்", அவளை "அம்மா" என்று அழைக்க விரும்பாத பிள்ளை, இன்னொரு கற்பனைத் தாயை மனதில் வரித்துக் கொள்வது போன்றது இது. தங்களை ஆப்பிரிக்காவுடன் இனங் காண விரும்பாத தன்மை, தமிழின வாதிகளுக்கு மட்டுமே உரிய குறைபாடு அல்ல. தூய ஆரிய பூர்வீகத்தை புனைவதற்காக, சிங்கள இனவாதிகள் விஜயனின் வருகையுடன் தமது வரலாற்றை தொடங்குகின்றனர். ஒரு காலத்தில், இந்திய உப கண்டம் முழுவதும், திராவிட இன மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் மூதாதையர் ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தனர். அவர்களது தாயகம், சஹாரா பாலைவனத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது. அங்கிருந்து அரேபியா சென்று, ஈரான் வழியாக இந்தியா வந்து சேர்ந்தார்கள். புராதன ஆப்பிரிக்க-திராவிட இன மக்கள் தங்கி வாழ்ந்த இடங்களில் விட்டுச் சென்ற சாட்சியங்களின் அடிப்படையில், இந்தக் கட்டுரைத் தொடர் எழுதப் படுகின்றது. 

அமெரிக்க நாடாளுமன்ற பெண் எம்.பி.க்கு இந்து முறைப்படி திருமணம்!

அமெரிக்க நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் இந்து முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் 50வது மாகாணம் ஹவாய் தீவுகள். இந்த மாகாணத்துக்கான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவர் 33 வயதாகும் துளசி கப்பார்ட். இவருக்கும் அவருடைய காதலரான 26 வயதாகும் ஆப்ரகாம் வில்லியம்ஸுக்கும் நேற்று முன்தினம் ஹவாய் தீவில் மிகவும் எளிமையான முறையில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. வேதங்கள் முழங்க இவர்களுடைய திருமணத்தில் அனைவருக்கும் சைவ உணவே பரிமாறப்பட்டது.

துளசி கப்பார்ட் குடும்பத் தினரின் இந்து கலாசாரம் மிகவும் பிரபலமான ஒன்று. ஹவாய் பகுதியைச் சேர்ந்த அமெரிக்க தம்பதி கரோல் மற்றும் மைக் கப்பார்ட். இவர்களுக்கு 5 குழந்தைகள் பிறந்தன. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த கப்பார்ட் தம்பதியினர், அமெரிக்காவில் பிரபலமடைந்த

இஸ்லாமியர்கள் இலட்சக்கணக்கில் கிறிஸ்தவர்களாகும் ஆனந்தமான ஆதார செய்தி


உலக முழுவதிலும் உள்ள திருச்சபைகளில் இந்த வருடம் கடந்த சில வருடங்களாக ஆண்டவருடைய உயிர்த்தெழுந்த நாளை கொண்டாட புதிதாக இலட்சக்கணக்கான மக்கள் சேர்ந்து ஆராதித்து உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர்களெல்லாரும் கிறிஸ்தவர்களல்ல, ஏனென்றால் அவர்களெல்லாரும் மசூதிக்கு சென்று வழிபட்டு வந்தனர்.
ஆம், தேவன் இந்த கடைசி காலத்தில் இஸ்லாமிய சகோதர சகோதரிகளிடையே வல்லமையான காரியங்களை செய்து கொண்டிருக்கிறார் என்பதை எவரும் மறுத்து பேச இயலாத ஆதாரத்துடன் காண்கையில் உள்ளம் பேரானந்தம் கொள்ளாமல் இல்லையே.

ஆண்மைக் குறைவுக்கு ஆயுர்வேதத்தில் என்னென்ன மருந்துகள் உள்ளன?

ஆண் மலட்டுத் தன்மை என்பது ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை அடையாமல், இல்வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை. இது பல நோய்களின் தொகுப்பு. ஒரு மனிதனுக்கு மூன்று விஷயங்கள் இன்றியமையாததாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளன. இவை த்ரயோ உபஸ்தம்பங்கள் என்று ஆயுர்வேதப் பெரியோர்களால் கூறப்படுகின்றன.
1. உணவு – இது பித்தத்தை நிலைநிறுத்தும் செயல்.
2. உறக்கம் – இது கபத்தை நிலைநிறுத்தும் செயல்.
3. அப்பிரம்மச்சரியம் – முறைப்படுத்தப்பட்ட இல்வாழ்க்கை. இது வாதத்தை நிலைநிறுத்தும் செயல்.
இந்த மூன்று விஷயங்களும் ஒரு மனிதனுக்கு இன்றியமையாததாக கருதப்படுகின்றன. இல்வாழ்க்கை குறைபாடுகள் எனும்போது ஆண்மையின்மை, விறைப்புத்தன்மை இன்மை, இச்சையின்மை, விந்து முந்துதல் என்று பல நுண்பிரிவுகள் உள்ளன. ஒருவனுக்கு இல்வாழ்க்கை குறைபாடுகள் உடல் நோய்களாலோ, மனக் குறைபாடுகளாலோ அல்லது இரண்டின் காரணமாகவோ ஏற்படலாம்.

Monday, 13 April 2015

சிவ என்னும் வார்த்தையின் மகிமை

   உ
நம சிவாய
நம சிவாய :

இதில் முதல் எழுத்து ' சி ' இதனை பார்த்தால் ச் + இ . இதில் ச 'சரண்' என்னும் புகலிடத்தை குறிக்கும் ' இ '  என்பது ' இவன் ' என்பதை குறிக்கின்றது. 'சிவனிடத்தில் சரணடைதல் வேண்டும்' என்பதை ' சி ' என்னும் எழுத்து உணர்த்துகின்றது . அது போல் வ என்பது 'உயிர் ' என்ற பொருளில் வருகிறது.

அதாவது சிவ பெருமானிடத்தில் சரணடைந்தால் எல்லா துன்பங்களும் நீங்கும் என்பது பொருள்

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !!!
தென்னாட்டவருக்கு சிவனே போற்றி !!!

சமைக்கும் முறை தந்த ஆச்சர்யம்.

அந்தப்பெண்மணியை வியப்படைய வைத்த அடுத்த விஷயம் நமது குடும்பப்பெண்கள் வீட்டி சமைக்கும் முறை. குறிப்பாக ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டி அதை வழித்தெடுப்பதும், மொத்த வீட்டையும் கூட்டுவதும், பின் கொல்லைப் புறத்தில் உள்ள கிணற்றின் சகடையில் நீர் இறைப்பதும், துணி துவைப்பதும் என்கின்ற அடுக்கடுக்கான செயல்பாடுகள்...இவை ஒவ்வொன்றுமே ஒரு வித உடற்பயிற்சி.
துணி துவைப்பது கைக்கும் விரல்களுக்கும் பயிற்சி என்றால், தண்ணீர் இழுப்பது மூச்சுப்பயிற்சியாக அமைகிறது.வீடு கூட்டுவது இடுப்புக்கு பயிற்சியளிக்கிறது.இவ்வளவையும் செய்துவிட்டு இறுதியில் பூஜை அறையில் நெய்விளக்கேற்றி வழிபடுவது என்பதுதான் உச்சக்கட்டம்.

எண்ணெய்க்குளியலில் இவ்வளவு விஷயங்களா...

ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் தாம்பத்ய சுகத்தில் ஈடுபடும்போது ஒரு குளிர்ந்த உடல் ஒரு வெப்ப உடல் என்கிற சேர்க்கை நிகழ்கிறது.
அந்த வெளிநாட்டுப்பெண்மணியின் ஆய்வில் அடுத்தடுத்த கட்டங்கள் மிக சுவாரஸ்யமானவை. அதில் பெண்கள் செவ்வாய், வெள்ளியில் எண்ணெய் தேய்த்து தலைமுழுக்கு போடுவதும் ஒன்று. நல்லெண்ணெயில் ஊறிக் குளிப்பது என்பதே அந்த பெண்ணுக்கு ஓர் அதிசயமான விஷயமாகத்தான் தோன்றியது.

விரதம் பற்றி சில தகவல்கள்...

நமது கலாச்சாரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்க வழக்கத்துடன் விரதம் இருக்கும் ஒரு பழக்கமும் வழக்கத்தில் உள்ளது.ஏகாதசி விரதம், கிருத்திகை விரதம், சஷ்டி விரதம், சிவராத்திரி விரதம், அமாவாசை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என்று அடுக்கடுக்காக விரதங்கள்.இந்த விரதங்கள் எதற்காக? இதனால் என்ன நன்மை? என்றெல்லாம் ஆராயப்போனால் அதிசயிக்கவைக்கும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.விரதத்துக்கு இவ்வளவு மகிமையா என்று அவை எண்ண வைக்கின்றன.
"ம்"என்பது, ஒன்றில் இருந்து விடுபடுவதை குறிக்கும் சப்தம்.இதோடு "த" சேர்ந்து "தம்" என ஆகும்போது அது மிக வேகமாக நடைபெறுவதைக் குறிக்கிறது.இந்த வேகம் மிக மிக வேகமெடுக்கும்போது 'ரதம்' ஆகிறது. இந்த ரதத்தோடு 'வி' சேரும்போது வினை ஏற்படுகிறது. அது என்ன வினை?

உடம்பில் ரத்தம் ஓடியபடி உள்ளது.

இதயம் துடித்தபடியே உள்ளது.இந்த இரண்டும் ஒரு சீரான வேகத்தில் செயல்பட்டபடி உள்ளன.இந்த வேகத்தைக் கூட்டிக் குறைப்பவைதான் எண்ணங்கள்.

சகுனத்தைப்பற்றி சில தகவல்கள்...

சகுனத்தைப்பற்றிய அந்த பெண்மணியின் ஆய்வு, கால நேரம் என்றால் என்ன என்பதை உணர்த்துவதாக இருந்தது.உண்மையில் காலம் என்பது தினந்தோறும் இரவு பகலாக விரிந்து கிடக்கிறது.இதில் பூமியில் மட்டும்தான் பௌர்ணமி, அமாவாசை போன்ற வானியல் நிகழ்வுகளை உணர முடியும்.அதை வைத்தே ஒவ்வொரு நாளும் இரவுப்பொழுதில் வித்தியாசங்களையும் உணர முடியும்.இந்த வித்தியாசங்களை வைத்தே ஒவ்வொரு நாளுக்கும் அடையாளமாகப் பெயர்கள் இடப்பட்டன.இதில் இருந்து தான் திதி, ஹோரை, கிழமை, தேதி என்று சகலமும் அறிய வந்தது.இதனால் நூறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஒரு நாளைக்கூட நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும் ஒரு நிலை இன்று உள்ளது.அந்த நாளில் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம், அன்றைய தேதி, அன்றைய கிழமை, அன்றைய திதி என்று சகலத்தையும் கூறிவிட முடியும். ஒரு படி மேலே போய் அன்றைக்கு என்ன நட்சத்திரம், அது எவ்வளவு நாழிகை நேரம் உள்ளது என்பதை கூட கூறிவிட முடியும்.இது அவ்வளவுமே மனிதன் தன் வான சாஸ்திர அறிவால் கண்டறிந்த உண்மைகள்.சுருக்கமாக கூறுவதானால் இது மாயமோ, மந்திரமோ அல்ல.இது கணக்கு!

மகிழ்ச்சி மருத்துவம்

காந்த மருத்துவம்


இசை மருத்துவம்

இந்திய பாரம்பரியம்-கோலம் தந்த ஆச்சர்யம்

வெளிநாட்டைச் சேர்ந்தவர் அந்தப்பெண்மணி.உலகைச்சுற்றி வருவதும், பல நாடு, பல மொழி பலவித கலாச்சாரங்களை அறிந்து கொள்வதும் அவருக்கு விருப்பமான செயல். இந்தியா வந்த அந்த பெண்மணி நமது நாட்டின் பன்மொழி கலாச்சாரத்தைப் பார்த்து முதலில் அதிர்ந்தார்.பிறகு ஆச்சர்யப்பட்டார். அனைத்திற்கும் மேலாக இந்திய மண்ணின் ஆன்மீகச் சிறப்பை அவரால் நுட்பமாகவே உணர முடிந்தது. பலவித புராணங்கள், இதிகாசங்கள் என்று ஏராளமான இலக்கியங்கள் மண்டிக்கிடப்பதை பார்த்தவருக்குள் ஒரு உண்மை தெளிவாகப்புலனாயிற்று.

எவ்வளவு நீண்ட ஒரு பாரம்பரியம் இருந்திருந்தால் இது சாத்தியப்பட்டிருக்கும் என்பதுதான் அது!நீண்ட பாரம்பரியம் உள்ள ஓர் இடத்தில் நிச்சயம் ஒரு நல்ல தெளிவிருக்கும்.ஏராளமான சான்றோர் பெருமக்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் தோன்றி மறைந்திருப்பார்கள்.அவர்களின் வாழ்க்கைப்பதிவுகள் வழிகாட்டிகளாக இருக்கும்.

சுருக்கமாக சொல்லப்போனால், கிட்டத்தட்ட முதல் மனிதன் வாழ்ந்த அந்த நாள் வரை கூட இவர்களைக்கொண்டே எட்டிப்பார்க்க நம்மால் இயலக்கூடும்.

Sunday, 12 April 2015

கிறிஸ்தவர்களிடம் ஒரு கேள்வி???


போதி தர்மன் வாழ்க்கை வரலாறு


போதி தர்மன் வாழ்க்கை வரலாறு


பல்லவர்கள் காலத்தில், தென் இந்தியாவில் பிற நாடுகளுடனான வர்த்தகம்
சிறப்பாக இருந்தது சீன யாத்ரிகரான யுவாங் சுவான்,பல்லவர்களின் ஆட்சி
காலத்தில் தான் தென் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். பல்லவர்கள் காலத்தில்
தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தொங்கியது.

காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மன்னனான
கந்தவர்மனுக்கு
நந்திவர்மன், குமாரவிஷ்ணு